Home
News

Jio பயனர்கள் குஷி.. இலவசமாக eSIM.. வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் eSIM-க்கு மாறலாம்? ஈஸி டிப்ஸ்..

ஜியோ பயனர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிஸிக்கல் சிம் (SIM) கார்டுகளை ஜியோ பயனர்கள் இப்போது இலவசமாக இசிம் (eSIM) சேவைக்கு மாற்றிக்கொள்ள இப்போது அனுமதிக்கிறது. இதை எப்படி ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் சில நிமிடங்களில் மாற்றலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

Jio eSIM: ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயனர்கள் இப்போது ஜியோ eSIM சேவையை எளிமையாக ஆக்டிவேட் செய்யலாம். இதை செய்து முடிக்க நீங்கள் எங்கும் வெளியே செல்ல வேண்டியது இல்லை. மிகவும் எளிமையாக உங்கள் போனில் இருந்து SMS அனுப்புவதன் மூலம் உங்களுக்கான eSIM சேவையை உங்களால் ஆக்டிவேட் செய்ய முடியும். இதை எப்படி ஜியோ பயனர்கள் செய்து முடிக்கலாம் என்ற செயல்முறையை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Jio பயனர்கள் குஷி.. இலவசமாக eSIM.. வீட்டிலிருந்தபடியே eSIM-கு மாறலாம்

ஜியோ பயனர்களுக்கு eSIM: நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EID அல்லது IMEI விவரங்களுடன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். அதாவது, SMS உடன் உங்கள் மொபைல் விபரங்களை மட்டும் வழங்கினால் போதும். eSIM ஐப் பயன்படுத்த, நீங்கள் ஆதரிக்கப்படும் சாதனத்தை வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

எப்படி eSIM சேவைக்கு மாறுவது? உங்கள் சாதனத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்தியாவில் eSIM ஆதரவு சாதனங்களின் பட்டியலை நீங்கள் ஆன்லைனில் செக் செய்துகொள்ளலாம். சரி, இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு போனில் எப்படி Jio eSIM சேவையை ஆக்டிவேட் செய்யலாம் என்று பார்க்கலாம்.

- முதலில் உங்கள் SMS பயன்பாட்டைத் திறந்து, '199' என்ற எண்ணுக்கு புதிய மெசேஜ்ஜை உருவாக்கவும்.
- மெசேஜ்ஜில் " GETESIM 15 இலக்க IMEI> " விபரத்தை டைப் செய்யவும்.
- EID மற்றும் IMEI எண்களைக் கண்டறிய உங்கள் போனின் செட்டிங்ஸ் சென்று About phone கிளிக் செய்யுங்கள்.
- Send என்பதை கிளிக் செய்யுங்கள்.
- சில நிமிடங்களில், உங்கள் ஜியோ எண்ணுக்கு +91 2235072222 என்ற எண்ணிலிருந்து அழைப்பைப் பெறுவீர்கள்.

Jio பயனர்கள் குஷி.. இலவசமாக eSIM.. வீட்டிலிருந்தபடியே eSIM-கு மாறலாம்

- IVR உங்கள் சம்மதத்தைக் கேட்டவுடன் டயல் பேடில் இருந்து ' 1 ' ஐ அழுத்தவும்
- இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு, eSIM செயல்படுத்தல் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடும் ஈமெயில் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும்.
- இதே விபரத்தை வழங்கும் SMS எண்ணுக்கும் அனுப்பப்படும்.
- இப்போது ' அமைப்புகள் ' என்பதற்குச் சென்று ' நெட்வொர்க் & இன்டர்நெட் ' மெனுவைத் திறக்கவும்.

- பிறகு ' Mobile network ' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்த மெனுவின் கீழ், ' eSIM ' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது Next என்பதை கிளிக் செய்து, Download your eSIM கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட ஈமெயில் ஐடியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
- இது eSIM ஐப் டவுன்லோட் செய்யும்படி கேட்கும்.

- Download என்பதை கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கம் முடிந்ததும், Activate என்பதை கிளிக் செய்யவும்.

இலவச சேவை: இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் தானாக மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். இப்போது VoLTE உடன் 4G மற்றும் 5G போன்ற அனைத்து அம்சங்களும் இனி eSIM சேவையின் கீழ் செயல்படும். இந்த சேவைக்கு எந்தவித கட்டணமும் இப்போது வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு இலவச சேவையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to activate Jio eSIM on Android smartphones and mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X