அரசின் இந்த முடிவு ஜியோ, ஏர்டெல்-ஐ பாதிக்குமா?

இப்பொருட்களின் உற்பத்தியாளர்கள் வரிச்சுமையை சமாளிக்கும் பொருட்டு விலையை உயர்த்தும் முடிவில் உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

|

இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் பொருட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு தொலைதொடர்பு நெட்வொர்க் சம்பந்தப்பட்ட பொருட்களின் மீதான வரியை அரசு இருமடங்கு உயர்த்தியதன் காரணமாக, இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ5500 முதல் 6000 கோடி வரை கூடுதல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக தொலைதொடர்பு நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாவதால், 4ஜி சேவைகளை விரிவாக்கம் செய்வதில் சுணக்கம் ஏற்படலாம். அதேநேரம் சேவைக் கட்டணங்களை உயர்த்துவதற்கான கட்டாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அரசின் இந்த முடிவு ஜியோ, ஏர்டெல்-ஐ பாதிக்குமா?

கடந்த வியாழனன்று, இந்திய அரசாங்கம் முக்கிய நெட்வொர்க் பொருட்களின் மீதான அடிப்படை சுங்கவரியை உயர்த்தியும், வரிவிலக்கு பெற்றிருந்து சர்க்யூட் போர்டுகள்(printed circuit board assemblies) மீது புதிதாக வரிவிதித்தும் அறிவித்துள்ளது.

பேஸ் ஸ்டேசன்கள், ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் கியர்,ஐபி ரேடியோஸ், எம்.ஐ.எம்.ஓ/4ஜி எல்.டி.ஈ ப்ராடெக்ட்ஸ், வாய்ப் போன்கள், மீடியா கேட்வே, கேட்வே கண்ட்ரோலர்க்ள், கேரியர் ஈதர்நெட் ஸ்விட்கள், பேக்கெட் டிரான்ஸ்போர்ட் நோட்கள், பேக்கெட் ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் ப்ராடெக்ட் அல்லது ஸ்விட்சுகள் போன்றவைகளுக்கு 20% வரிவிதிக்கப்படவுள்ளது.

அரசின் இந்த முடிவு ஜியோ, ஏர்டெல்-ஐ பாதிக்குமா?

இவற்றை ஒருங்கிணைக்க பயன்படும் பிரிண்டெட் சர்க்யூட் போர்ட் அசெம்பிளிகளுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளது. இந்த முடிவின் முக்கிய நோக்கம் என்னவெனில் அதிக முக்கியத்துவம் இல்லாத பொருட்களின் இறக்குமதியை குறைந்து, அதன் மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை சரிவிலிருந்து மீட்பது மட்டுமின்றி, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உதவிகரமாக இருக்க முடியும்.

இப்பொருட்களின் உற்பத்தியாளர்கள் வரிச்சுமையை சமாளிக்கும் பொருட்டு விலையை உயர்த்தும் முடிவில் உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "பல்வேறு தொலைதொடர்பு பொருட்கள் மீதான அடிப்படை சுங்க வரிகளில் ஏற்பட்ட 10% உயர்வின் காரணமாகவும், உற்பத்தியாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும், வோடோபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் போன்ற நிறுவனங்களின் வருடாந்திர நெட்வொர்க் கியர் இறக்குமதி கட்டணங்களில், குறைந்தபட்சமாக 750-800 மில்லியன் டாலர்கள் அதிகரிக்கும்" என்கிறார் அனாலிசில் மேசன் நிறுவனத்தின் இந்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர் ரோகன் தமிஜா.

அரசின் இந்த முடிவு ஜியோ, ஏர்டெல்-ஐ பாதிக்குமா?

எரிக்சன், நோக்கியா, ஹூவாய், இசட்.டி.ஈ மற்றும் சாம்சங் போன்ற வெளிநாட்டு விற்பனையாளர்களிடம் இருந்து, முக்கியமாக 4ஜி சேவைகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, ஆண்டுக்கு சுமார் 8பில்லியன் டாலர் மதிப்புள்ள நெட்வொர்க் கியர்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு ஜியோ, ஏர்டெல்-ஐ பாதிக்குமா?

தொலைதொடர்பு பொருட்களின் இறக்குமதி மீதான இந்த 20% அதிக வரி, தேசிய டிஜிட்டல் தொலைதொடர்பு கொள்கை 2018ஐ அடைவதற்கும், எதிர்கால 5ஜி சேவைகளை துவங்கும் திட்டங்களையும் தாமதப்படுத்தும் என்கின்றனர் இந்திய தொலைதொடர்புத்துறை வல்லுநர்கள்.
Best Mobiles in India

English summary
How this move by govt may hurt RJio, Airtel: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X