Subscribe to Gizbot

ஓடும் ரயில், பிரசவ வலி, மருத்துவ மாணவர், வாட்ஸ்ஆப் க்ரூப், நடந்தது என்ன.?

Written By:

24 வயது நிறைந்த ஒரு எம்.பி.பி.எஸ் மாணவரான விபின் கட்ஸே ஓடிக்கொண்டிருக்கும் அகமதாபாத்-பூரி எக்ஸ்பிரஸ் இரயலில் ஒரு தொழிலாளர் பெண்ணின் பிரசவ நடவடிக்கையில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது.

ஓடும் இரயிலில் விபின் நிகழ்த்திய இந்த பிரசவத்திற்கு வாட்ஸ்ஆப் உதவிகரமாக இருந்து என்று கூறினால் நீங்கள் நம்பியே ஆக வேண்டும். ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டதையடுத்து எக்ஸ்பிரஸ் இரயிலின் டிக்கெட் கலெக்டர் இரயில் முழுக்க ஒரு மருத்துவரை தேடி அலைகிறார். இரயிலின் மற்றொரு கம்பார்ட்மன்டில் இருந்து மருத்துவ கல்லூரி மாணவரான விபினை அடையாளம் காண்கிறார், உதவிக்காக கையேடு அழைத்தும் வருகிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நிலைமை

நிலைமை

வேறு எதாவது அனுபவம் மிக்க மருத்துவர் இரயிலில் பயணம் செய்கிறாரா என்றும் தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் ஒரு மருத்துவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நிலைமையை உணர்ந்த விபின் அவரே மருத்துவ உதவியை செய்ய வேண்டியதாயிற்று.

நலன் கருதி

நலன் கருதி

இரயிலேயே பிரசவம் நிகழ்த்தவும், தாய் மற்றும் செய் நலன் கருதியும், சில பெண்கள் மற்றும் விபின் தவிர்த்து அந்த முழு இரயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் அருகாமை கம்ப்பார்ட்மென்ட்டுக்கு அனுப்பபடுகின்றனர்.

நிபுணத்துவம்

நிபுணத்துவம்

பிரசவம் மிகவும் சிக்கலான ஒன்றாக தெரிந்துள்ளது. ஏனெனில் தலைக்கு பதிலாக குழந்தையின் தோள் பட்டை பிறப்புறுப்பிற்கு வெளியே தொங்கி கொண்டு இருந்துள்ளது. விபின், குழந்தை பெற உதவியாக இருக்கும் பொருட்டு, மேலும் நிபுணத்துவம் பெற்ற ஆலோசனைகளை பெறும் பொருட்டு மருத்துவர்கள் நிறைந்த ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் அறிவுரைகள் கேட்க தொடங்குகிறார்.

ஆலோசனை

ஆலோசனை

உடனே விபின் மருத்துவர்கள் நிறைந்த அவரின் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் அந்த புகைப்படத்தை அப்லோட் செய்து அனுபவம் மிக்க மருத்துவரக்ளிடம் இருந்து ஆலோசனை கேட்கிறார். மூத்த மருத்துவரான ஷிகா மாலிக் பிரசவம் நிகழ்த்த தொலைபேசி மூலம் விபினை வழிநடத்தியுளார்.

ஒன்றாக இணைந்து

ஒன்றாக இணைந்து

பின்னர் தாய்க்கு இரத்தப்போகை நிறுத்தும் பொருட்டு குளிர்ந்த நீர் பாட்டில்களை விபின் பயன்படுத்தியுளார் அதிர்ஷ்டவசமாக இரயிலில் பிரசவ அனுபவம் மிக்க ஒரு பெண் இருந்ததால் அவருடன் ஒன்றாக இணைந்து பாதுகாப்பாக ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடிந்துள்ளது.

மருத்துவ சிகிச்சை

மருத்துவ சிகிச்சை

ரயில் நாக்பூர் ரயில் நிலையத்திற்கு வந்ததுமே ரயில் மருத்துவமனையில் இருந்து ஒரு பெண் மருத்துவர் இரயில் பெட்டிக்குள் நுழைந்து தாய் மற்றும் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளார்.

பேஸ்புக்

பேஸ்புக்

ஒரு சிறந்த மருத்துவராக உருவாகும் எண்ணம் கொண்டு நாக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் விபின் தனது இந்த அசாதாரணமான சம்பவத்தை அவரின் பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

சாலச்சிறந்த எடுத்துக்காட்டு

சாலச்சிறந்த எடுத்துக்காட்டு

இளைய சமுதாயத்திற்கு பொறுப்பே இல்லை, வாட்ஸ்ஆப் நொண்டுவர்கள் அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவார்கள் இவ்வளவுதான் தெரியும். வேறெதுக்குமே 'லாயக்கி' இல்லை என்று எல்லா இளைஞர்களையும் குறைச்சொல்லி விடக்கூடாது என்பதற்கு விபின் ஒரு சாலச்சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். வளர்ச்சி அடைந்த தொழில்நுட்பத்தை சரியாக கையாண்டால் அடு நமக்கு கீழ் இயங்கும், நம்மை சரியாக வழிநடத்தும் என்பது இந்த சுவாரசியமான சம்பவம் மூலம் நிரூபணமாகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஒரு ரூபாய் கூட கரெண்ட் பில் கட்டாமல் ஏசி வீட்டில் வாழும் தினேஷ்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How This MBBS Student Used WhatsApp to Help Deliver a Baby on a Moving Train. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot