Home
News

ஆப்பிள் வரலாற்றில் ஆரவார வெற்றி பெற்ற கருவிகள்.!!

By Meganathan

ஆப்பிள் நிறுவனம் உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனம் என அனைவரும் அறிந்ததே..
_ஏம்பா எல்லாத்தையும் கொல்லை விலைக்கு விப்பாங்களே, அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட டெக் நிறுவனம் அதானே.?

ஆமாங்க அதே நிறுவனம் தான்.!

கணினியில் துவங்கி இன்று பல்வேறு கருவிகளின் விற்பனை மூலம் டெக் சந்தையையே அதிர வைத்து கொண்டிருக்கும் நிறுவனம் தான். இந்நிறுவன கருவிகள் விலை அதிகம், என்றாலும் இவைகளின் விற்பனை அதிகமாகவே இருக்கின்றது.

இன்று இத்தகைய புகழ் பெற்ற நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனம் இந்நிலைமையை பிடிக்க என்னென்ன செய்தது என உங்களுக்கு தெரியுமா.??

என்ன செய்தது என அதிகம் யோசிக்காமல் ஸ்லைடர்களில் பார்த்து, அந்நிறுவனம் என்னென்ன செய்தது, எப்படி இந்த நிலையை அடைந்திருக்கின்றது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

Apple II

Apple II

ஏப்ரல் 1, 1976 கணினி நிறுவனமாக துவங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் I கணினி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் பின் 12 மாதங்கள் கழித்து ஆப்பிள் II கணினி வெளியானதோடு 1979 ஆம் ஆண்டு சுமார் $79 மில்லியன் வருமானம் பெற்றது.

The Mac

The Mac

ஆப்பிள் II வெற்றி பெற்றிருந்த போதும், ஆப்பிள் III வெற்றி பெறவில்லை. இதன் பின் ஆப்பிள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் 1984 ஆம் ஆண்டு மேக்கின்டோஷ் வகை கணினியை அறிமுகம் செய்தார். இந்த கணினி
மேக் என பொதுவாக அறியப்பட்டது. தனிப்பட்ட கணினி பயன்பாட்டில் புதிய வரலாறு படைத்ததை தொடர்ந்து இந்த கணினியின் இரண்டாம் தலைமுறை கணினிகள் மேக் 512K என்ற பெயரில் வெளியானது.

iMac

iMac

ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறிய பின் அந்நிறுவனம் சில கருவிகளில் தோல்விகளை சந்தித்தது. இதை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் திரும்பிய பின் அந்நிறுவனம் பல்வேறு வகையான கணினிகளை வெளியிட்டது. ஐமேக் 3ஜி, என்ற பெயரில் வெளியான கணினி அதிகம் விற்பனை செய்யப்பட்டது. பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டூயல் ஹெட்போன் ஜாக் கொண்டிருந்தது.

iTunes

iTunes

ஐட்யூன்ஸ் மென்பொருள் மூலம் ஆப்பிள் நிறுவனம் அந்த காலத்தில் அனைவரையும் கவர்ந்தது. டிஜிட்டல் ஜூக் பாக்ஸ் போன்ற சேவையை ஜனவரி 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த சேவை அதிகப்படியான வெற்றி பெற்றதோடு ஆப்பிள் நிறுவனத்தின் நிலைமையை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

iPod

iPod

ஐட்யூன்ஸ் வெற்றியை தொடர்ந்து அந்நிறுவனம் அக்டோபர் 2001 ஆம் ஆண்டு ஐபாட் எனும் புதிய கருவியை சந்தையில் அறிமுகம் செய்தது. டச் சென்சிட்டிவ் கொண்ட இந்த கருவியில் 5 / 10 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இரு மாடல்களிலும் சுமார் 100 டாலர் வித்தியாசத்தில் விலை நிர்ணயம் செய்திருந்தது.

First iPhone

First iPhone

ஜனவரி 2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோன் கருவியை வெளியிட்டது. புதுமைகளை புகுத்தி அந்நிறுவனம் மொபைல் சந்தையை திரும்பி பார்க்க வைத்தது. வடிவமைப்பில் துவங்கி கருவியின் அனைத்து அம்சங்களிலும் புதுமை புகுத்தியதால் அந்நிறுவனம் ஐபோன் வியாபாரத்திலும் வெற்றி பெற்றது. இதன் பின் அந்நிறுவனத்தின் 50% வருமானத்தை ஐபோன் கருவிகள் மட்டும் ஈர்த்தது.

First iPad

First iPad

ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தன் முதல் ஐபேட் டேப்ளெட் கருவிகளை வெளியிட்டு டேப்ளெட் சந்தையை திரும்பி பார்க்க வைத்தது. தோல்விகளை மட்டும் சந்தித்திருந்த டேப்ளெட் சந்தையின் வரலாற்றை ஐபேட் கருவிகளின் விற்பனை மாற்றியமைத்தது. ஆப்பிள் ஐபேட் கருவிகள் வெளியான முதல் நாளே முழுமையாக விற்று தீர்ந்ததே இதற்கு சான்று.

Siri

Siri

ஐபோன் சந்தையில் அதிக பிரபலமானதை தொடர்ந்து அந்நிறுவனம் பல்வேறு புதிய கருவிகள் மற்றும் சேவைகளை சந்தையில் அறிமுகம் செய்து வந்தது. அந்த வரிசையில் ஐபோன் 4எஸ் கருவிகளில் அந்நிறுவனம் சிரி எனும் பெர்சனல் அசிஸ்டன்ட் சேவையை அறிமுகம் செய்தது.

 iPhone 5S

iPhone 5S

முந்தைய ஐபோன்களை விட அதிகப்படியான மாற்றங்களை கொண்டிருந்த ஐபோன் 5எஸ் கருவியானது அதிக சக்தி வாய்ந்த கருவியாக பார்க்கப்பட்டது. கணினியில் செய்ய கூடிய பல்வேறு சேவைகளை மொபைலில் செய்ய கூடிய வசதியை ஐபோன் 5எஸ் வழங்கியது. மேலும் இந்த கருவியில் டச் ஐடி எனப்படும் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டது.

Apple Watch

Apple Watch

அணியக்கூடிய ஸ்மார்ட் கருவிகளை ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. 2010 ஆம் ஆண்டில் இருந்து அந்நிறுவனம் வழங்கிய புதிய கருவியாக ஆப்பிள் வாட்ச் அமைந்தது. உடல் நலன் சார்ந்து பல்வேறு சேவைகளை வழங்கிய ஆப்பிள் வாட்ச் விலை 349 டாலர்களில் துவங்கி 24 கேரட் கோல்டு எடிஷன் விலை 17,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Best Mobiles in India

English summary
How the iPhone maker became what it is today Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X