Home
News

Google கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ஜெமினி 3 இறக்கிய ஒரு ஏஜென்ட்..ஜெனரேட்டிவ் இன்டர்பேஸ்.. இது அடுத்த லெவல்!

கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெமினி ஆப் (Gemini App) ஆனது ஜெமினி 3 மாடல் மூலமாக அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் கிடைக்கும் ஜெனரேட்டிவ் இன்டர்பேஸ், ஜெமினி ஏஜென்ட் ஆகிய 2 அப்கிரேட்கள் ஏஐ சாட் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன. விசுவல் லேய்அவுட் தொடங்கி ஜெமினி ஆப் மூலமாகவே கூகுள் ஆப்களை அணுகுவது வரையில் வைப் கோடிங் கேபபிலிட்டிகளை சேர்த்துள்ளது. அப்படியென்ன விசுவல் மற்றும் ஏஜென்ட்டிக் அப்கிரேட்கள் கிடைக்கின்றன.

* ஜெமினி 3 (Gemini 3)
* ஜெனரேட்டிவ் இன்டர்பேஸ் (Generative Interfaces)
* ஜெமினி ஏஜென்ட் (Gemini Agent)

Google கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ஜெமினி 3 இறக்கிய ஒரு ஏஜென்ட்!

ஜெமினி 3:
இந்த ஏஐ மாடலின் பர்ஃபாமென்ஸ் முந்தைய மாடல்களைவிட கூடுதல் ஹெல்ப், சிறந்த டிசைன் மற்றும் ஸ்மார்ட்டாக இருக்குமென்று கூகுள் சொல்கிறது. கூகுளின் பெஸ்ட் வைப் கோடிங் மூலமாக பில்ட் செய்யப்பட்ட இந்த மாடல் மூலம் ஃபுல்-பீச்சர்டு (Full-featured) கேன்வாஸ்களை உருவாக்க முடியும். ஹோம் வொர்க் போட்டோக்களை அப்லோட் செய்வது, லெக்ச்சர்களில் மிஸ் செய்த நோட்களை எடுப்பது,

போன்ற டெக்ஸ்ட் மட்டுமல்லாமல், போட்டோ மற்றும் வீடியோக்களிலும் அவுட்புட் கொடுக்கும்படியான அப்கிரேடட் மல்டிமாடலாக வருகிறது. கூகுள் ஏஐ பிளஸ் (Google AI Plus), கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) மற்றும் கூகுள் ஏஐ அல்ட்ரா (Ultra) ஆகிய சந்தாக்களை வைத்திருக்கும் சந்தாதாரர்களுக்கு இந்த ஜெமினி 3 பயன்படுத்த கிடைக்கிறது. இன்டர்பேஸ், ஏஜென்ட்டிக் பீச்சர்கள் அடுத்த கட்டத்தில் உள்ளன.

Google கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ஜெமினி 3 இறக்கிய ஒரு ஏஜென்ட்!

ஜெனரேட்டிவ் இன்டர்பேஸ்:
இதுவரையில் கிடைத்த மாடல்களில் இல்லாத ஜெனரேட்டிவ் இன்டர்பேஸ் இந்த ஜெமினி 3 மாடலில் கிடைக்கிறது. கிளீன் மற்றும் மாடர்ன் லுக் கொடுக்கிறது. உங்களது சாட்டில் ஜெனரேட் செய்யப்பட்ட இமேஜ்கள், வீடியோக்கள் போன்றவற்றை இனிமேல் தனித்தனியாக தேட வேண்டியது கிடையாது. புதிய மை ஸ்டஃப் (My Stuff) போல்டரில் அதை ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

ஷாப்பிங் செய்ய திட்டமிட்டால், 50 பில்லியன் ப்ரொடெக்ட்களுக்கும் மேலாக தேடி அதை லிஸ்ட் செய்யலாம், டேபிள் போட்டு கம்பாரிசன் செய்யலாம், விலைகள் மற்றும் ஷாப்பிங் கிராஃப்களை பார்த்து கொள்ளலாம். இது புதிய இன்டர்பேஸ் கொண்டு காண்பிக்கப்படுகிறது. ஆகவே, விசுவல் லேய்அவுட் மற்றும் டைனாமிக் வியூ என்று பிரிக்கப்பட்டு வருகிறது.

Google கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ஜெமினி 3 இறக்கிய ஒரு ஏஜென்ட்!

1. விசுவல் லேய்அவுட் (Visual Layout)
2. டைனாமிக் வியூ (Dynamic View)

விசுவல் லேய்அவுட் மூலமாக மேகசின்-ஸ்டைல் வியூ (Magazine-style View) கொடுக்கப்படுகிறது. ஆகவே, டெக்ஸ்ட்களுக்கு பதிலாக விசுவல் அனுபவம் அதிகமாக இருக்கும். இது உங்களின் ப்ராம்ப்ட்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. டிராவல், ஹெல்த் போன்ற ஏதாவதொரு ப்ராம்ப்ட்களை கொடுத்து பாருங்கள். மேகசினை போல இன்டர்பேஸ் கிடைக்கும்.

டைனாமிக் வியூ மூலமாக ஏஜென்டிக் கோடிங் கேபபிலிட்டிகளை அணுக முடிகிறது. அதாவது, உங்களது ப்ராம்ப்ட்களின் அடிப்படையில், கஸ்டம் மேட் யூசர் இன்டர்ஸ்பேஸ் (Custom Made User Interface) கிடைக்கிறது. இதை ரியல்-டைமில் யூசர்கள் செய்து கொள்ளலாம். டேப் மற்றும் ஸ்க்ரோல் செய்து எளிதாக அதை அணுகி கொள்ளலாம்.

Google கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ஜெமினி 3 இறக்கிய ஒரு ஏஜென்ட்!

ஜெமினி ஏஜென்ட்
இந்த ஜெமினி ஏஜென்ட் ஆனது ஜெமினி ஆப் மூலமாக நேரடியாக மல்டி-ஸ்டெப் டாஸ்க்களை (Multi-step Tasks) செய்ய கொண்டுவரப்பட்ட சோதனை முறை பீச்சராகும். உங்களது ஜெமினி ஆப் மூலமாக கூகுள் ஆப்களை கனெக்ட் செய்யலாம். காலண்டர்களை மேனேஜ் செய்வது, ரீமைண்டர்களை ஆட் செய்வது, இன்பாக்ஸ்களில் ஆர்கனைஸ் செய்வது போன்றவற்றை செய்ய முடியும்.

இதுபோன்ற பல்வேறு கூகுள் ஆப்களை கனெக்ட் செய்து கொள்ள முடியும். தனித்தனியாக ஓப்பன் செய்து பயன்படுத்த வேண்டியது கிடையாது. ஜெமினி ஆப் மூலமாக நேரடியாக அவற்றை அணுகலாம். அதே நேரத்தில் ஜெமினியில் கிடைக்கும் டீப் ரிசர்ச் (Deep Research), கேன்வாஸ் (Canvas) ஆகியவற்றை கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace) ஆப்களிலும் அணுக முடியும்.

இதில் ஜிமெயில் (Gmail), காலண்டர் (Calendar) உள்ளிட்டவை அடங்கும். இது நேரடியாக ஆப்களை அணுகுவதால், கூகுள் நிறுவனம் முதலில் யூசர்களிடம் அனுமதி கேட்கிறது. அதை கொடுத்தால் மட்டுமே இதை முழுமையாக பயன்படுத்த முடிகிறது. இதில் ஏஜென்ட் அணுகல் மட்டும் அமெரிக்காவில் இருக்கும் கூகுள் ஏஐ அல்ட்ரா (Google AI Ultra) யூசர்களுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How the Gemini 3 Update Enhances Gemini App With Generative Interfaces And Gemini Agent Capabilities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X