பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர் காரணங்களை பாருங்கள், ஷாக் ஆகிடுவீங்க
ஆப்பிள் முதல் அமேசான் வரை, மைக்ரோசாப்ட் முதல் ட்விட்டர் வரை ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர் காரணம் குறித்த தகவல்கள் மிகவும் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருக்கும்.
அவ்வாறு பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர் காரணங்களை தான் இங்க பார்க்க போறீங்க,

1
போட்டோஷாப் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் கொண்டு தொழில்நுட்ப சந்தையில் நீங்க இடம் பிடித்திருக்கும் அடோப் நிறுவனத்தின் பெயர் அடோப் கிரீக் என்ற சிறிய ஓடையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஓடை அடோப் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜான் வார்னாக் வீட்டின் பின் புறம் தான் அமைந்திருந்தது.

2
2001 ஆம் ஆண்டு ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் தனது ஈமெயில் மெசேஜ் கருவிக்கு பெயர் வைக்க தனியார நிறுவனத்திடம் கேட்டு கொண்டது, அதன் படி அந்நிறுவனம் கருவியில் இருக்கும் பட்டன்கள் ப்ளாக்பெரி பழம் போன்று இருந்ததை கண்டு ப்ளாக்பெரி என்ற பெயரை பரிந்துரைத்தது.
ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தின் பெயர் ஜனவரி 2013 ஆம் ஆண்டில் இருந்து ப்ளாக்பெரி என்று மாற்றப்பட்டது.

3
ஆப்பிள் நிறுவனத்தின் பெயர் அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பரிந்துரைத்தது தான், இது குறித்து தன் சுயசரிதையில் ஜாப்ஸ் ஆப்பிள் என்ற பெயர், இனிமையாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்

4
ட்விட்டர் என்றால் ஒரு வித சத்தம் எழுப்புவதாகும், இந்த வார்த்தை ட்விட்டர் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது என்று இதன் நிறுவனர் ஜாக் டோர்ஸி தெரிவித்தார்

5
வெரிஸான் பெயர் லத்தீன் மொழியின் வெரிட்டாஸ் மற்றும் ஹாரிஸான் என்ற இரு வார்த்தைகளை இனைத்து பெயர் வைக்கப்பட்டுள்ளது.

6
1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமேசான் நிறுவனத்தின் பெயர் காரணம் எளிதாக முடிந்து விடுகிறது.
ஆங்கிலத்தில் முதல் எழுத்து ஏ மற்றும் அமேசான் ஆறு பல பெருமைகளை கொண்டிருப்பது என பல காரணங்களை முன்வைத்து அமேசான் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

7
ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மாணவர்களின் டைரக்ட்ரி புத்தகங்களை பேஸ்புக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, அதை தழுவி பேஸ்புக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

8
மைக்ரோபிராசஸர் மற்றும் சாப்ட்வேர் வார்த்தைகளை இநைத்து மைக்ரோசாப்ட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

9
குவாலிட்டி கம்யூனிகேஷன்ஸ் என்ற வார்த்தை தான் குவால்காம் என்றானது

10
ஆரம்பத்தில் லெஜென்ட் என்று இருந்து பின்னர் லெ மற்றும் நோவோ என்ற லத்தீன் வார்த்தையை இனைத்து லெனோவோ என்று மாற்றப்பட்டது


Click it and Unblock the Notifications