ஸ்மார்ட்போன் உயிரை கொல்லும் : ஆய்வில் தகவல்..!!
இதை ஏற்று கொண்டு பின்பற்றுவது சிரமம் தான், ஸ்மார்ட்போனினை இரவு நேரங்களில் பயன்படுத்துவது பல்வேறு பாதப்புகளுக்கு உங்களை உட்படுத்தும்.
ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு..!!
பகலில் சூரிய வெளிச்சத்திலும் இரவில் அதிக பிராகசமாகவும் இருக்கும் ஸ்மார்ட்போன் திரைகளில் இருந்து வெளியாகும் நீல நிற வெளிச்சமானது இரவில் பயன்படுத்தும் போது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மெலடோனின்
இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் திரையை பார்த்து கொண்டிருந்தால் மூளையில் சுரக்கும் மெலடோனின் தடை படும்.

தூக்கம்
மூளையில் சுரக்கும் மெலடோனின் ஹார்மோன் மனிதனை தூங்க செய்யும் தன்மை கொண்டது.

பாதிப்பு
தூக்கத்தை கொடுக்கும் முக்கிய சுரப்பி பாதிப்படைவதால் தூக்கம் தடை படுவதோடு இதனால் பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகின்றது.

ஞாபகம்
தூங்கும் நேரம் குறைந்தால் அடுத்த நாள் வேலைகளில் சரியான கவனம் செலுத்த முடாயமல் போவதோடு ஞாபகம் சார்ந்த கோளாறுகளும் ஏற்படும்.

படிப்பு
தூக்கம் தடை படுவதால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும்.

விழித்திரை
நீல நிற விளக்குகள் கண்களின் விழித்திரையை பாதிக்கும் அபாயம் இருக்கின்றது.

கண்புரை
மேலும் நீல நிற விளக்குகள் கண்புரை ஏற்பட காரணமாக இருக்குமா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நியுரோடாக்சின்
நீண்ட நாட்கள் தூக்கம் தடைப்பட்டால் நியுரோடாக்சின் உற்பத்தி அதிகரிப்பதோடு மேலும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்
உடலில் மெலடோனின் அளவு குறைந்தால் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

உடல் பருமன்
தூக்கமின்மை, ஸ்மார்ட்போன் வெளிச்சம் இவை இரண்டும் பசியை தூண்டும் சுரப்புகளை பாதித்து உடல் பருமன் ஏற்பட காரணமாக இருக்கும்.

வெளிச்சம்
இரவில் தூக்கத்தை கெடுக்கும் வெளிச்சம் கண்களில் படும் போது மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கின்றது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications