கொரோனா வைரஸால் இறப்பவர்களின் உடல்கள் எவ்வாறு அகற்றப்பட வேண்டும்? WHO சொன்னது இதுதான்!

|

COVID-19 பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவ பலனின்றி உயிர் இறப்பவர்களின் உடலை எவ்வாறு அகற்ற வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைச்சகம் பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் மருத்துவர் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, அவரின் உடல் தகனம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவரின் உடலிற்குச் செய்யப்பட்ட இந்த அவமரியாதை மிகவும் வருத்தத்திற்குரியது.

இறந்தவர்களின் உடலை பார்த்து பயப்படும் மக்கள் - உண்மை என்ன?

இறந்தவர்களின் உடலை பார்த்து பயப்படும் மக்கள் - உண்மை என்ன?

இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பாதிப்பு ஏற்படுமென்று மக்கள் அஞ்சுவதற்கான முக்கிய காரணம் பயமே, சம்பந்தமில்லாதவர்கள் உடலின் அருகில் செல்லாமல் இருக்கும் வரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதே உண்மை. அதேபோல், உடலை தகனம் செய்து முடிந்த பின் இருக்கும் சாம்பல் மூலமும் கொரோனா பரவாது என்றும் சுகாதாரத்துறை தெளிவாகத் நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களின் உடலை எப்படி அகற்ற வேண்டும்?

கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களின் உடலை எப்படி அகற்ற வேண்டும்?

சுகாதார வசதி கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் இறக்கும் நபரின் மரணத்தை, சுகாதார வல்லுநர்கள் சான்றளிக்க வேண்டும் மற்றும் நியமிக்கப்பட்ட பொதுச் சுகாதார அதிகாரி மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமாக பணியாற்றி இறந்தவரின் உடலை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒருவேளை சுகாதார நிலையத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவரின் மரணம் பதிவாகியிருந்தால், உடலைப் பாதுகாப்பாக அகற்றுவது மிக முக்கியமானது.

Network சிக்கலிலிருந்து விடுபட லேட்டஸ்ட் வழி - உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!Network சிக்கலிலிருந்து விடுபட லேட்டஸ்ட் வழி - உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

அடக்கம் செய்யும் செயல்முறை

அடக்கம் செய்யும் செயல்முறை

 • அடக்கம் செய்யும் பணியைத் தொடங்குவதற்கு முன், இந்த செயல்முறை குறித்து குடும்பத்திற்கு முழுமையாகத் தெரிவிக்க வேண்டும்.
 • ஏதேனும் குறிப்பிட்ட கோரிக்கைகள் இருந்தால் குடும்ப உறுப்பினர் / பிரதிநிதி கேட்கப்படுவார்.
 • உடல் அகற்றும் குழுவில் ஒரு குடும்ப பிரதிநிதி, ஒரு பொதுச் சுகாதார அதிகாரி, உள்ளூர் நிர்வாகி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் மற்ற கூட்டுறவு சுகாதார நிபுணரும் இருக்க வேண்டும்.
 • கிருமி நீக்கம் மிகவும் அவசியம்

  கிருமி நீக்கம் மிகவும் அவசியம்

  • இறந்தவரின் உடல் இருக்கும் அறை கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • ஒருவேளை சவப்பெட்டியைப் பயன்படுத்த வேண்டுமானால், அதை வீட்டிற்கு வெளியே தான் வைக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவரின் உடலிலிருந்து ஒரு மாதிரி சேகரிக்கப்பட வேண்டும்.
  • PPE அணிந்த நபர்களால், இறந்தவரின் உடலை உட்செலுத்த முடியாத பொருட்களின் உடல் பையில் வைக்க வேண்டும்.
  • Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!

   குடும்பத்திலிருந்து ஒரே ஒரு நபருக்கு மட்டும் அனுமதி

   குடும்பத்திலிருந்து ஒரே ஒரு நபருக்கு மட்டும் அனுமதி

   • குடும்பம் விரும்பினால் இறந்தவரின் ஆடைகளைச் சவப்பெட்டியின் உள்ளே வைக்க அனுமதிக்கலாம்.
   • குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைச் சவப்பெட்டியை மூட அனுமதிக்கலாம், ஆனால், அவரின் கைகளில் எல்லா நேரங்களிலும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
   • குடும்பத்திலிருந்து ஒரே ஒரு நபர் மட்டுமே இந்த செயல்முறைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
   • சவப்பெட்டியைக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
   • குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

    குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

    • குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் கோரிக்கைக்கு இணங்க இறுதி நேரத்தை அதிகரித்து வழங்க அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும்.
    • சவப்பெட்டி நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.
    • உடலை பின்னர் மரியாதையான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்.
    • எந்த பொருளையும் அப்படியே விட்டுவிடக் கூடாது

     எந்த பொருளையும் அப்படியே விட்டுவிடக் கூடாது

     • இறந்தவர் தொட்டிருக்கக்கூடிய அனைத்து பொருட்களின் மேற்பரப்புகளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
     • இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பாய் மற்றும் மெத்தையை குடும்பத்தின் அனுமதியுடன் வீட்டிலிருந்து தூரத்தில் கொண்டு சென்று எரிக்கபட வேண்டும்.
     • உலக நடுகல் அனைத்தும் இதை பின்பற்ற வேண்டும்

      உலக நடுகல் அனைத்தும் இதை பின்பற்ற வேண்டும்

      இப்படி தான் கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களின் உடலை அகற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வழிமுறைகளைத் தொகுத்துள்ளது. இந்த குறிப்பிட்ட வழிமுறைகளை உரிய சுகாதார துறை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்தது, அவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக உடலை அகற்ற வேண்டும். இந்த வழிமுறைகளையே உலக நடுகல் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்றும் உலக சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

Best Mobiles in India

English summary
How Should The Bodies Of Those Who Died Of Corona Virus Be Removed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X