பிட்காயின் வைத்துள்ளீர்களா? பாதுகாப்பாக சேமிப்பது எப்படி?

ஒரே ஒரு வழிமுறையை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை. சிறிய பணபரிமாற்றம், பெரிய பரிமாற்றம், நீண்டகால முதலீடு என பல தேவைகள் உங்களுக்கு இருக்கலாம்.

|

கடந்த சில வருடங்களாக பிட்காயின் மதிப்பு மட்டுமில்லாமல், பிட்காயினை சேமித்து வைக்கும் வழிமுறைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வழிமுறைகள் கூட பிட்காயினை புதிகாக வாங்குபவர்களின் பயத்தின் காரணமாகத்தான்.

எந்த வழிமுறையை தேர்வு செய்தாலும், சவுகரியத்திற்கும் பாதுகாப்பிற்கும் இடையே ஓர் பரிமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. இதில் தனியுரிமை கூட முக்கிய காரணியாக உள்ளது. அதில்லாமல் இதில் நீங்கள் பொருளாதார பாதையை முற்றிலும் அநாதமேயாமாக அல்லது ஒழிக்கவோ விரும்பமாட்டீர்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பிட்காயினை பாதுகாப்பது என்பது யாரும் அதை அணுக முடியாமல் செய்வதே. ஒன்று அது இருக்கும் லேப்டாப்பை இயற்பியல் ரீதியில் பாதுகாப்பது. மற்றொன்று எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்து என்கிரிப்ட் செய்து பாதுகாப்பு தருவது என்பது. ஆனால் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்கள் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். மேலும் போனை தொலைக்கும் போதும், கடவுச்சொல்லை மறக்கும் போதும், இயற்கை பேரிடரின் போதும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படும்.

சவுகரியம்

சவுகரியம்

பாதுகாப்பை விட சவுகரியத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும். எவ்வளவு விரைவாக உங்கள் பிட்காயினை அணுகி, எவ்வளவு சுலபமாக அதை செலவளிக்க முடிகிறது என்பதே சவுகரியம். ஆன்லைன் வாலெட் என்பது மிகவும் சவுகரியமானது. ஏனெனில் கணிணி அல்லது மொபைல் வாயிலாக எப்போதும் எங்கும் பிட்காயினை அணுக முடியும்.

உலகம் முழுக்க பயன்படுத்தப்படும் மல்டி-சிக்நேச்சர் பேப்பர் வாலெட்-ஐ திருடர்கள், அரசு மற்றும் ஹேக்கர்கள் என யாரும் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் நீங்கள் அந்த வாலெட்டை பெறுவது மிகவும் கடினம்.

 பாதுகாப்பா? சவுகரியமா?

பாதுகாப்பா? சவுகரியமா?

நீண்டகாலம் பிட்காயினை வைத்திருக்க போகிறீர்கள் எனில், மிகவும் பாதுகாப்பான வழிமுறையை தேர்வு செய்ய வேண்டும். ஷாப்பிங் செய்வதற்காக பிட்காயினை பயன்படுக்கின்றீர் எனில், எவ்வளவு தேவையோ அதை மட்டும் மொபைலில் வைத்துக்கொள்ளுங்கள்.

பிட்காயினை எப்படி சேமிப்பது என்பதற்கான முறையான வழிமுறை:

பிட்காயினை எப்படி சேமிப்பது என்பதற்கான முறையான வழிமுறை:

பிட்காயின் பயன்பாட்டை இரு காரணிகள் கொண்டு மதிப்பிடலாம். பரிமாற்ற அளவு மற்றும் பரிமாற்ற மதிப்பு. இவற்றின் மதிப்புகள் அதிகமாக இல்லை குறைவா என்பதை பொறுத்து உங்களுக்கான சிறந்த பிட்காயின் வாலெட்-ஐ தேர்ந்தெடுக்கலாம்.

பரிமாற்ற அளவு என்பது எவ்வளவு பிட்காயின் பரிமாற்றங்களை செய்கிறோம் என்பதாகும். பரிமாற்ற மதிப்பு என்பது பரிமாற்றத்தின் போது ஒரு பிட்காயினின் மதிப்பை குறிக்கும்.

 ஆபத்தை குறைக்க பல வாலெட்டுகள்

ஆபத்தை குறைக்க பல வாலெட்டுகள்

ஒரே ஒரு வழிமுறையை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை. சிறிய பணபரிமாற்றம், பெரிய பரிமாற்றம், நீண்டகால முதலீடு என பல தேவைகள் உங்களுக்கு இருக்கலாம். எனவே ஒரே நேரத்தில் பல்வேறு வழிகளை பாதுகாப்பிற்காகவும், சவுகரியத்திற்காகவும் பயன்படுத்தலாம்.

பல்வேறு வித பிட்காயின் வாலெட்கள் மற்றும் அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

மொபைல் வாலெட்

மொபைல் வாலெட்

சிறிய அளவிலான பரிமாற்றத்தை அடிக்கடி தொடர்ந்து செய்வீர்கள் என்றால் மொபைல் வாலெட் சிறந்தது. மேலும் மொபைல் வாலெட் என்பதால் எங்கும் எப்போதும் அணுக முடியும்.

ஹார்ட்வேர் வாலெட்

ஹார்ட்வேர் வாலெட்

அதிக மதிப்பிலான பரிமாற்றங்களை அடிக்கடி செய்வதற்கு இது ஏற்றது. யூ.எஸ்.பி கருவி போல இருக்கும் இதை கடவுச்சொல் மூலம் பாதுகாக்கலாம். உங்கள் கணிணியோ அல்லது லேப்டாப்போ ஹேக் செய்யப்பட்டாலும்,இது பாதுகாப்பாக இருக்கும்.

பேப்பர் வாலெட்

பேப்பர் வாலெட்

அதிக மதிப்புடைய பிட்காயின் பரிமாற்றத்தை எப்போதாவது ஒரு முறை (low frequency) செய்வதற்கு இது ஏற்றது. ஆனால் இந்த பேப்பரை தொலைக்காத வரை உங்கள் பிட்காயின் பாதுகாப்பாக இருக்கும்.

ஆன்லைன் வாலெட்

ஆன்லைன் வாலெட்

குறைந்த மதிப்பிலான பரிமாற்றத்தை எப்போதாவது பயன்படுத்தினால் இந்த முறை சிறந்தது. மொபைல் போன்ற கருவிகளை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் எங்கிருந்தும் இணைய வழியில் இதை அணுக முடியும்.

Best Mobiles in India

English summary
How to securely store your Bitcoin : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X