Amazon CEO போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா

|

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் செய்தியாளர் ஜமால் கஷோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி நாட்டிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, கொலை நடைபெற்றது உலகக்கு தெரியவந்தது.

ஜமால் கஷோகி கொலை

ஜமால் கஷோகி கொலை

இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால், உலக நாடுகள் பலவும் சவுதி அரேபியாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தன. இந்தநிலையில், பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தில் பேசிய சவுதி இளவரசர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு. என்னுடைய கண்காணிப்பில்தான் இந்தக் கொலை நடைபெற்றது என்று தெரிவித்தார்.

முகமது பின் சல்மான் தெரிவிப்பு

முகமது பின் சல்மான் தெரிவிப்பு

கஷோகி மரணம் நடைபெற்று ஒரு ஆண்டு நினைவாக பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தின் ப்ரோமோவில் முகமது பின் சல்மான் மேற்கூறிய தகவலைத் தெரிவித்தார்.

வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக்

வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக்

வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக் செய்யப்படுகின்றன என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. வாட்ஸ் ஆப் மூலம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பல பெரும் புள்ளிகள் உளவு பார்க்கப்படுகின்றனர் என்று வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இது உலகின் டாப் பணக்காரருக்கும் நேர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல, ஜெஃப் பெஸோஸ் உலகின் டாப் பணக்காரரும் அமேசான் நிறுவனர் என்பது அனைவரும் அறிந்ததே.

வாஷிங்டன போஸ்ட் பத்திரிக்கையின் உரிமையாளர்

வாஷிங்டன போஸ்ட் பத்திரிக்கையின் உரிமையாளர்

அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் அதிபரும் இவர்தான். இது தான் அவரது போன் ஹேக் செய்யப்படக் காரணம் என்று கூறப்படுகிறது. வாஷிங்டன் போஸ்ட் உலக அரசியல் தலைவர்களை அஞ்சாமல் விமர்சனம் செய்யும் பிரபல நாளிதழ் ஆகும். இதையடுத்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் மீதும் அதன் உரிமையாளர் ஜெஃப் பொஸோஸ் மீது கடும் கோபம் இருக்கும்.

ஜெஃப் பொஸோஸ் செல்போன் ஹேக்

ஜெஃப் பொஸோஸ் செல்போன் ஹேக்

ஜெஃப் பொஸோஸ் மீது கோபமுள்ள முக்கிய உலக தலைவர்களில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முக்கியமானவர். ஆம், முகமது பின் சல்மானை விமர்சித்து வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்திருக்கிறது.

ஜமால் கஷோகி கொலை

ஜமால் கஷோகி கொலை

முகமது பின் சல்மானை விமர்சித்து பத்திரிகையாளர் ஜமால் கஷோகி தொடர்ந்து வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இதையடுத்து தான் கடந்த 2018 ஆம் ஆம்டு கஷோகி சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதற்கான காரணம் தற்போது வரை முழுமையாக தெரியவில்லை.

விசாரணையில் தகவல்

விசாரணையில் தகவல்

இந்த நிலையில் ஜெஃப் பொஸோஸின் போனை சவுதி இளவரசர் ஹேக் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெஃப் பொஸோஸின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக தனியார் நிபுணர்கள் குழு கொண்டு அவர் விசாரணை நடத்தினார். அதில் சவுதி அரசு தான் போனை ஹேக் செய்தது என்று தெரியவந்துள்ளது. முகமது பின் சல்மானின் நேரடி கண்காணிப்பில் இது நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் லீக்

பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் லீக்

2018 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முகமது பின் சல்மானுக்கு சொந்தமான எண்ணில் இருந்து ஜெப் பெஸோஸுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ பைல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் மூலமாகவே இந்த போன் ஹேக் செய்யப்பட்டு புகைப்படங்கள் திருடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் வெளியான பின்னரே ஜெப் பெஸோஸை அவரது மனைவி விவாகரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

அமெரிக்காவின் அரேபிய தூதரகம் அறிவிப்பு

அமெரிக்காவின் அரேபிய தூதரகம் அறிவிப்பு

இந்த நிலையில் ஜெப் பெஸோஸின் போன் ஹேக் செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக கூறுவது அபத்தமான உண்மை என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்று அமெரிக்காவின் அரேபியா தூதரகம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
How saudi prince mohammad bin salman hacked amazon founder jeff bezos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X