புதிய ஐபோன் கருவிகளை முன்பதிவு செய்வது எப்படி.??

Posted By:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவிகள் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்ற நிலையில், இந்தியாவின் அனைத்து இணைய வர்த்தகர்களும் புதிய கருவிகளுக்கான முன்பதிவை துவங்கி இருக்கின்றன.

விரைவில் இந்தியாவை அசத்த வரும் ஸ்மார்ட்போன்கள்..!!

புதிய ஐபோன்களின் விலை குறித்து ஆப்பிள் நிறுவனம் எவ்வித அறிவிப்புகளையும் கொடுக்காத நிலையில், இணைய வர்த்தகர்கள் புதிய கருவிகளின் விலையை அறிவித்து விட்டனர். அதன்படி புதிய ஐபோன் 6எஸ் 16ஜிபி விலை ரூ.62,000, 64 ஜிபி விலை ரூ.72,000 மற்றும் 128 ஜிபி ரூ.82,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் ப்ளஸ் 16, 64, 128 ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ.72,000, ரூ.82,000 ரூ.92,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி பேக்கப் : ஆண்ட்ராய்டை பின் தள்ளும் ஐபோன்..!!

அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிய ஐபோன் கருவிகளை முன்பதிவு செய்வது எப்படி என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும். மேலும் மாத தவணைகளிலும் கருவிகளை பெற்று கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமேசான்

அமேசான்

ப்ளிப்கார்ட் போன்றே அமேசான் தளத்திலும் வாடிக்கையாளர்கள் கருவிகளை முன்பதிவு செய்ய முடியும். அசேமான் தளத்தில் முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் முதலில் செலுத்த வேண்டும், அக்டோபர் 16 ஆம் தேதிக்கு பின் கருவி டெலிவரி செய்யப்படும், மேலும் வாடிக்கையாளர்கள் மாத தவணைகளிலும் கருவியை முன்பதிவு செய்ய முடியும்.

வோடஃபோன்

வோடஃபோன்

அமேசான் தளத்தில் கருவியை முன்பதிவு செய்வோருக்கு வோடாஃபோன் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன் படி 'வோடாஃபோன் ரெட் 1299' ப்ளான் ஆக்டிவேட் செய்து 4000 நிமிட டாக்டைம், 3ஜிபி 3ஜி டேட்டா, மற்றும் 1500 இலவச எஸ்எம்எஸ் என ஒவ்வொரு மாதமும் பெற முடியும், இந்த சலுகை ஆறு மாதம் வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

சென்னை, பெங்களூரு, ஹைத்ராபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் முன்பதிவினை துவங்கி இருக்கின்றது. ஸ்னாப்டீல் தளத்தில் முதல் நாளே கருவியை பெற அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இன்ஃபிபீம்

இன்ஃபிபீம்

இன்ஃபிபீம் தளத்தில் புதிய ஐபோன்கலை முன்பதிவு செய்ய ரூ.1000 செலுத்த வேண்டும், சென்னை, பெங்களூரூ, அகமதாபாத், தில்லி, காஸியாபாத், குர்ஜான், ஹைத்ராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, நொய்டா மற்றும் பூனே நகரங்களில் வசிப்போருக்கு முதல் நாள் டெலிவரி செய்யப்படும் என இன்ஃபிபீம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம்

பேடிஎம்

பேடிம் தளத்தில் ஐபோன்களை முன்பதிவு செய்ய அக்டோபர் 13 ஆம் தேதி வரை தினமும் மதியம் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சிறிய பக்கம் துவங்கப்பட்டுள்ளது. ரூ.2,000 செலுத்து சரியாக முன்பதிவு செய்வோருக்கு அக்டோபர் 14 ஆம் தேதி கருவியை வாங்க சரியான லின்க் அனுப்பப்படும். பேடிஎம் தளத்திலும் கருவியை மாத தவணைகளில் வாங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஷாப்க்ளூஸ்

ஷாப்க்ளூஸ்

ஷாப்க்ளூஸ் தளத்தில் அக்டோபர் 13 முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஐபோன் கருவியை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ.1000 என்பதோடு சரியான முன்பதிவு செய்வோருக்கு கருவியை வாங்க லின்க் அனுப்பப்படும் என்பதோடு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல்

சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பரோடா, பெல்லாரி, சண்டிகர், குர்ஜான், ஹோஸ்பெட், ஹூப்ளி, ஹைத்ராபாத், இன்டூர், ஜெய்பூர், ஜலான்தர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மங்களூரு, மும்பை, மைசூர், நவ்யுக், நொய்டா, பன்ச்குலா, பாட்டியாலா, பாட்னா, பூனே, சூரத், திருவனந்தபுரம், விஜயவாடா மற்றும் விசாகபட்டினம் ஏர்டெல் ஸ்டோர்கலில் நேரடியாக முன்பதிவு செய்யலாம்.

தி மொபைல் ஸ்டோர்

தி மொபைல் ஸ்டோர்

அகோடபர் 13 ஆம் தேதி வரை மொபைல் ஸ்டோர் கிளைகளில் புதிய ஐபோன் கருவிகளை ரூ.2000 செலுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம், இங்கும் வாடிக்கையாளர்கள் மாத தவணை பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to pre-order the Apple iPhone 6s, iPhone 6s Plus in India. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்