சாதாரண வாகனங்களை ஸ்மார்ட் காராக மாற்றுவது எப்படி?

|

ஸ்மார்ட் கார் வைத்திருப்பது தற்போதைய டிரெண்ட் ஆக மாறி வருகிறது. வாய்ஸ் கமாண்ட் மூலம் காரின் சில அம்சங்களை இயக்குவது பலருக்கும் அலாதியான மகிழ்ச்சியை தரும். சாதாரண வாகனத்தை ஸ்மார்ட் காராக மாற்றும் ஒற்றை வழிமுறை பற்றிய விவரங்களை பார்ப்போம். இந்த சாதனம் கொண்டு பெரும்பாலான ஸ்மார்ட் கார் அம்சங்களை இயக்க முடியும்.

சாதாரண வாகனத்தை ஸ்மார்ட் காராக மாற்றலாம்

சாதாரண வாகனத்தை ஸ்மார்ட் காராக மாற்றலாம்

கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்க சந்தையில் அதிகளவு சாதனங்கள் இருக்கும் பட்சத்திலும், Pioneer DMH-Z5290BT சாதனத்தை பயன்படுத்துவது பற்றி பார்ப்போம். இந்த சாதனம் ஸ்மார்ட் காரில் இருக்கும் அதிகளவு அம்சங்களை வழங்குகிறது. ஸ்மார்ட் கார் அம்சம் பெரும்பாலும் குரல் வழி கட்டுப்பாடுகள் நிறைந்தது ஆகும்.

Pioneer DMH-Z5290BT ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு பயணிக்கும் போது குரல் வழி கட்டுப்பாடுகளில் அம்சங்களை இயக்கி சாலையில் மட்டும் கவனம் செலுத்தலாம். கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வெப்லின்க் மூலம் இயங்குகிறது. இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் Pioneer DMH-Z5290BT எப்படி செயல்படுத்த வேண்டும் என பார்ப்போம்

ஆண்ட்ராய்டு சாதனங்களில் Pioneer DMH-Z5290BT எப்படி செயல்படுத்த வேண்டும் என பார்ப்போம்

- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வெப்லின்க் ஹோஸ்ட்டை டவுன்லோடு செய்ய வேண்டும்.

- ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை யு.எஸ்.பி. கேபிள் மூலம் கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்க வேண்டும்.

- சாதனத்தில் வெப்லின்க் அனைத்து செயலிகளையும் டவுன்லோடு செய்யும் வரை காத்திருக்க வேண்டும்.

- டவுன்லோடு ஆனதும் வெப்லின்க் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஐகான்களை கார் சிஸ்டத்தின் டிஸ்ப்ளேவில் பார்க்க முடியும்.

- ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தை க்ளிக் செய்து கூகுள் அசிஸ்டண்ட் சார்ந்த வாய்ஸ் கமாண்ட் மூலம் கூகுள் மேப்ஸ், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு இதர செயலிகளை இயக்க முடியும்.

- வெப்லின்க் க்ளிக் செய்து யூடியூப், சொமாட்டோ மற்றும் பல்வேறு இதர செயலிகளை கார் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவில் இயக்க முடியும். இதுதவிர மீடியா தரவுகளையும் யு.எஸ்.பி. ஃபைல் மற்றும் ஆக்ஸ் இன் கேபிள் மூலம் இயக்கலாம். வெப்லின்க் கொண்டு ஸ்மார்ட்போன் வீடியோக்களையும் கார் சிஸ்டத்தின் டிஸ்ப்ளேவில் இயக்க முடியும்.

455 நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!455 நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!

ஆண்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சம் கொண்டு ஸ்மார்ட் கார் அம்சங்களை சாதாரண வாகனத்தில் இயக்க வழி செய்யும். இதற்கு காரில் Pioneer DMH-Z5290BT போன்று முறையான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதன் இன்டர்ஃபேஸ் வாகனம் ஓட்டும் போது பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ கொண்டு நீங்கள் விரும்பும் அனைத்து செயலிகளையும் கார் சிஸ்டத்தின் தொடுதிரை டிஸ்ப்ளேவில் பயன்படுத்த முடியும். Pioneer DMH-Z5290BT இன் 7 இன்ச் WVGA HD டிஸ்ப்ளேவில் கபாசிட்டிவ் டச் வசதசி வழங்கப்படுவதால், இதை கொண்டு பெரும்பாலான செயலிகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

இதன் பெரிய ஹெச்.டி. ஸ்கிரீன் கொண்டு நேவிகேஷன், மெசேஜிங், போன் காண்டாக்ட் மற்றும் பல்வேறு செயலிகளை பயன்படுத்த முடியும். இந்த ஸ்கிரீன் அதிக பிரகாசமாகவும் இருக்கும். இது வாகனத்தை அதிக சூரிய வெளிச்சத்தில் ஓட்டும் போதும் சிறப்பாக தெரியும்.

அழைப்புகளை மேற்கொள்ளலாம், கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்

அழைப்புகளை மேற்கொள்ளலாம், கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு ஆட்டோ கொண்டு அழைப்புகளை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும்,. இத்துடன் மியூசிக், மெசேஜிங், நேவிகேஷன் என பெரும்பாலான அம்சங்களை குரல் வழி கட்டுப்பாடு மூலம் இயக்கலாம். இதற்கு எளிய குரல் வழி மற்றும் டச் கண்ட்ரோல்கள் மட்டும் போதுமானது. இது கூகுள் அசிஸ்டண்ட் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்றே இயங்கும்.

இதுதவிர இதை கொண்டு ஸ்மார்ட்போனின் பிளே லிஸ்ட்களையும் ஸ்டிரீம் செய்யலாம். ஆண்ட்ராய்டு ஆட்டோ கொண்டு லைவ் பிராட்காஸ்ட் மற்றும் இண்டர்நெட் ரேடியோ போன்ற அம்சங்களையும் செயலி வழியே இயக்க முடியும்.

கூகுள் பே-வை தூக்கிசாப்பிடும் சியோமி மி பே டிஜிட்டல் பேமெண்ட்: இப்போது அனைவருக்கும்!கூகுள் பே-வை தூக்கிசாப்பிடும் சியோமி மி பே டிஜிட்டல் பேமெண்ட்: இப்போது அனைவருக்கும்!

பில்ட் இன் ஸ்பாடிஃபை மற்றும் 1080 பிக்சல் வீடியோ பிளேபேக் வசதி

பில்ட் இன் ஸ்பாடிஃபை மற்றும் 1080 பிக்சல் வீடியோ பிளேபேக் வசதி

புதிய Pioneer DMH-Z5290BT சாதனத்தில் புதிய ஏ.வி. ரிசீவர் உள்ளது. இதை கொண்டு ஸ்பாடிஃபையில் உள்ள மியூசிக் பிளே லிஸ்ட்களை பிரவுஸ் செய்து போனில் இருந்தபடி இயக்க முடியும். இதற்கு போனினை ஒருமுறை கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ப்ளூடூத் மூலம் இணைக்க வேண்டும்.

பின் அடுத்த முறை காரில் அமர்ந்து கார் சிஸ்டத்தை ஆன் செய்ததும், ஸ்பாடிஃபை பிளே லிஸ்ட்களை இயக்க துவங்கி விடும். இது கார் சிஸ்டத்தின் ஸ்பாடிஃபை பகுதியில் இருந்து இயங்கும்.

இதுதவிர Pioneer DMH-Z5290BT யூடியூப் வீடியோக்களை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் 1080 பிக்சல் தரத்தில் ஸ்டிரீம் செய்ய முடியும். இது காரினுள் ஸ்மார்ட் ஹப் ஒன்றை உருவாக்கி போனுடன் மிக எளிமையாக இணைந்து கொண்டு சாதாரன வாகனத்தை ஸ்மார்ட் காராக மாற்றுகிறது.

கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் விலை ரூ. 20,999 என அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆஃப்லைன் சந்தையில் இதன் விலை வேறுபடலாம்.

Best Mobiles in India

English summary
How Pioneer DMH-Z5290BT Turns Your Ordinary Vehicle Into A Smart Car: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X