விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி? மோடி வெளியிட்ட ரகசியம் இதுதான்.!

மேலும் இதை சொன்னது அமெரிக்காதான். அதைப் பற்றி இப்போது நான் எதுவும் சொல்வதற்கு இல்லை, நேரம்வரும்போது இதுபற்றி சொல்வேன் எனவும் அவர் கூறினார்.

|

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டுகளை போட்டு அழித்தன. பின்பு பிப்ரவரி 27-ம் தேதி பாகிஸ்தான் தனது அதிநவீன எப்-16 ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது.

 விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி?மோடி வெளியிட்ட ரகசியம்

அனால் விழிப்புடன் இருந்த இந்திய விமானப்படை, அந்த விமானங்களை விரட்டியடித்தது. பாகிஸ்தானின் 'எப்-16' ரக போர் விமானம் ஒன்றை சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். ஆனாலும் அவரது விமானமும் தாக்குதலுக்கு உள்ளானது. அவரும் சிறை பிடிக்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்பு மார்ச் 1-ந் தேதி அவர் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தன்

அபிநந்தன்

அபிநந்தன் எப்படி விடுவிக்கப்பட்டார் என்ற ரகசியத்தை தனது சொந்த மாநிலமான குஜராத்தில் படான் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், அபிநந்தன் பிடிபட்ட உடனேயே இது குறித்து நான் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அதிகமாக குரல் கொடுத்தன. நாங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினோம். பின்பு எங்கள் விமானிக்கு ஏதாவது நேர்ந்தால், எங்களுக்கு மோடி இப்படி செய்து விட்டார் என்று நீங்கள் உலகத்துக்கு கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என பாகிஸ்தானை எச்சரித்தோம்" என மோடி அவர்கள் கூறினார்.

12 ஏவுகணை

12 ஏவுகணை

அதன்பிறகு இரண்டாம் நாளில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர், மோடி 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார் என்றும் அவற்றை கொண்டு கொண்டு அவர் தாக்குதல் நடத்துவார். நிலைமை மோசமாகி விடும்
என்று எச்சரித்தார். அதைத் தொடர்ந்துதான் நமது விமானியை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது" என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அமெரிக்கா

அமெரிக்கா

மேலும் இதை சொன்னது அமெரிக்காதான். அதைப் பற்றி இப்போது நான் எதுவும் சொல்வதற்கு இல்லை, நேரம் வரும்போது இதுபற்றி சொல்வேன் எனவும் அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தனது மகள் சுப்ரியா சுலே போட்டியிடும் மராட்டிய மாநிலம், பாரமதி தொகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். இப்போது அவர், "அடுத்து மோடி என்ன செய்வார் என்பது எனக்கு தெரியவில்லை, அதை நினைத்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது" என குறிப்பிட்டார்.

தாழ்ந்து போக விட மாட்டார்

தாழ்ந்து போக விட மாட்டார்

குஜராத் பிரசாரத்தை முடித்து விட்டு ராஜஸ்தானில் சித்தோர்காரில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போதும் அவர் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர், "மோடி தனது மீதான தாக்குதல்களை தாங்கிக்கொள்வார், தனது அரசியல் எதிர்காலம் குறித்து எந்த ஆபத்தையும் தாங்கிக்கொள்வார். ஆனால் இந்த நாட்டை தாழ்ந்து போக விட மாட்டார் என்று நாடு
என்மீது நம்பிக்கை வைத்துள்ளது" என்று கூறினார்.

Best Mobiles in India

English summary
How-Pakistan-freed-Indian-Air-Force-pilot-Abinandhan: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X