Home
News

மீண்டும் UPI சேவையில் மாற்றம்.. 10 பைசா செலவு இல்லாமல் ரூ.1 லட்சம்.. வெளிநாடு டூ இந்தியா!

யுபிஐ சேவையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த 3 முக்கிய மாற்றங்களோடு சேர்த்து தற்போது மேலுமொரு மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது என்ஆர்ஐ-களுக்கான.. அதாவது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான.. யுயிஐ அணுகலை (UPI Access) நெறிப்படுத்தியுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, நான்-ரெசிஸ்டென்ட் எக்ஸ்டர்னல் (Non-resident external - NRE) அல்லது நான்-ரெசிஸ்டென்ட்ஆர்டினரி (Non-resident ordinary - NRO) அக்கவுண்ட்களை வைத்து இருக்கும் என்ஆர்ஐ-களுக்கு, அவர்களின் சர்வதேச மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ-ஐ பயன்படுத்தி, அவர்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்து யுபிஐ பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மீண்டும் UPI சேவையில் மாற்றம்.. 10 பைசா செலவு இல்லாமல் ரூ.1 லட்சம்!

அதாவது என்ஆர்ஐ-க்கள் இப்போது யுபிஐ சேவையை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தங்களுடய குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு மிகவும் எளிமையாக பணம் அனுப்பலாம் அல்லது வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் பணம் செலுத்தலாம். எல்லாவற்றை விட முக்கியமாக இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் ஒரு சேவையாக இருக்கும்.

மேலும் இந்தியா அல்லது பிற நாடுகளுக்கு பயணம் செய்யும் போதும் கூட என்ஆர்ஐ-க்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும். அமெரிக்கா (US), கனடா (Canada), யுகே (UK), யுஏஇ (UAE), சிங்கப்பூர் (Singapore), ஆஸ்திரேலியா (Australia) மற்றும் பல நாடுகளில் உள்ள என்ஆர்ஐகளுக்கு இந்த சேவை அணுக கிடைக்கும்.

மேலும் என்ஆர்ஐ-க்கள் ஏயு ஸ்மால் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, டிபிஎஸ் வங்கி, ஈக்விட்டாஸ்பைனான்ஸ், பெடரல் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, இன்டஸ்லேன்ட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மற்றும் சவுத் இந்தியன் வங்கி போன்ற குறிப்பிட்ட வங்கிகளில் இருந்து யுபிஐ வழியாக பணம் செலுத்தலாம். .

பீம் ஏயு (BHIM AU - ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூலம்), பெட்மொபைல் (FedMobile - ஃபெடரல் வங்கி மூலம்), ஐமொபைல் (iMobile - ஐசிஐசிஐ வங்கி மூலம்), பீம் இன்டஸ் பே (BHIM Indus Pay - இன்டஸ்லேன்ட் வங்கி மூலம்), எஸ்ஐபி மிரர் பிளஸ் (SIB Mirror Plus - சவுத் இந்தியன் வங்கி மூலம்) மற்றும் போன்பே ஆப்களை பயன்படுத்தியும் யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யலாம்.

இருப்பினும், ஒரு நாளைக்கு அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத வரம்பு வங்கியைப் பொறுத்து சிறிது மாறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. புதிய ஐடிகளுக்கு, முதல் 24 மணிநேரத்திற்கு ரூ.5,000 என்கிற வரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் என்ஆர்ஐ-க்கள் தங்களுடைய என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ கணக்குகளுக்கு இடையேயும் பரிவர்த்தனை செய்யலாம். அதே போல் குடியுரிமை பெற்ற இந்திய கணக்குகள் (Resident Indian Accounts) மூலமும் பரிவர்த்தனை செய்ய முடியும், ஆனால் என்ஆர்ஓ கணக்கிலிருந்து என்ஆர்இ கணக்கிற்கு செய்ய முடியாது.

பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஒவ்வொரு கணக்கிலும் தனிப்பட்ட யுபிஐ ஐடி இருக்க வேண்டும் மற்றும் கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, முதன்மைக் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே யுபிஐ ஐடி கிடைக்கும் என்றும் வரையறுக்கப்பட்டு உள்ளது. என்ஆர்ஐ-க்கள் யுபிஐ-யில் பதிவு செய்யாவிட்டாலும் கூட யுபிஐ ஆப்பில் உள்ள சென்ட் டூ அக்கவுண்ட் (Send to account) மூலம் நிதியை பெறலாம்.

என்ஆர்ஐ-க்கள் தங்களுக்கான யுபிஐ-ஐ செட் செய்வது எப்படி? என்ஆர்ஐ-க்கள் தங்கள் சர்வதேச மொபைல் எண்களை தங்கள் என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ வங்கிக் கணக்குகளுடன் இணைக்க வேண்டும். ஐமொபைல் அல்லது போன்பே போன்ற சர்வதேச மொபைல் எண்களுடன் இணக்கமான யுபிஐ ஆப்பை பதிவிறக்க வேண்டும்.

பின்னர் மொபைல் எண் சரிபார்ப்பு, தனிப்பட்ட யுபிஐ ஐடி அல்லது விர்ச்சுவல் கட்டண முகவரியை உருவாக்குதல், அவர்களின் வங்கி கணக்கைத் தேர்ந்தெடுத்து விவரங்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட ஆன்போர்டிங் செயல்முறைகளை செய்ய வேண்டும். பின்னரே என்ஆர்ஐ-க்கள் தங்களுடைய யுபிஐ ப்ரோபைல்-ஐ ஆக்டிவேட் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
How NRIs Can Transfer Money Up to Rs 1 Lakh Without Any Fee Using UPI Service
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X