Elon Musk-ன் அடுத்த சம்பவம்! எவ்வளவு பணம் கொடுத்தால் ஷாருக், கோலிக்கு Twitter Blue Tick திரும்ப கிடைக்கும்?
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ட்விட்டர் நிறுவனமானது தனது ட்விட்டர் ப்ளூ திட்டங்களுக்கு (Twitter Blue Plans) இன்னும் சந்தா பணம் செலுத்தாத பயனர்களிடமிருந்து ப்ளூ டிக்களை (Blue Tick) அகற்ற தொடங்கி உள்ளது.
அதனொரு பகுதியாக, நடிகர் ஷாருக்கான், அமிதாப் பச்சன், நடிகை ஆலியா பட் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற அரசியல்வாதிகள் மற்றும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் தங்களது ட்விட்டர் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதியன்று ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் 'வார்னிங் ட்வீட்' ஒன்றும் பதிவிட்டுருந்தார். அதில், ப்ளூ பிளானிற்காக இன்னும் பணம் செலுத்தாத அனைத்து பயனர்களும் ஏப்ரல் 20 முதல் தங்களுடனுய ப்ளூ பேட்ஜ்களை (Blue Badge) இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சொன்னபடியே, ட்விட்டர் நிறுவனம் இன்று (ஏப்ரல் 21) காலை முதலே ப்ளூ பேட்ஜ்களை அகற்ற தொடங்கியதாக தெரிகிறது. ஒருவேளை ஷாருக் கான், விராட் கோலி, ராகுல் காந்தி உட்பட, தங்களுடைய ட்விட்டர் ப்ளூ டிக்களை இழந்த எவருமே அதை திரும்ப பெற விரும்பினால் ட்விட்டருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமென்று தெரியுமா?
நீங்கள் மொபைல் வழியாக ட்விட்டரை பயன்படுத்த விரும்பினால் (அது ஐஓஎஸ் ஆக இருந்தாலும் சரி அல்லது ஆண்ட்ராய்டாக இருந்தாலும் சரி) மாதம் ரூ.900 சந்தா பணம் செலுத்த வேண்டும், ஒருவேளை வெப் வழியாக ட்விட்டரை பயன்படுத்தினால் மாதம் ரூ.650 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுதவிர்த்து ட்விட்டர் நிறுவனம் ரூ.6,500 மதிப்புள்ள தள்ளுபடி வருடாந்திர திட்டத்தை வழங்குகிறது, இது உங்களுடைய ஒரு மாத சந்தா தொகையை ரூ.566 ஆக குறைக்கும். மேற்கண்ட திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் பட்சத்தில், புதுப்பிக்கப்பட்ட ட்விட்டர் ப்ளூ சேவையின் கீழ் விரிவான சரிபார்ப்பு நடைமுறைக்கு செல்லாமலேயே உங்களுக்கு ப்ளூ டிக் கிடைக்கும்.
பணம் செலுத்துவதன் மூலம் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் தங்களுடைய அக்கவுண்ட்டில் ப்ளூ பேட்ஜை பெறுவது மட்டுமின்றி, உரையாடல்களில் முன்னுரிமை (Prioritised ranking in conversations), பாதி எண்ணிக்கையிலான விளம்பரங்கள் (Half the number of advertisements) போன்ற நன்மைகளையும் பெறுவார்கள்.
மேலும் அவர்களுக்கு நீளமான ட்வீட்கள் (long-form tweets), புக்மார்க்கிங் ஃபோல்டர்ஸ் (bookmarking folders), கஸ்டம் நேவிகேஷன் (custom navigation), எடிட் ட்வீட் (editing tweets), அன்டூயிங் ட்வீட்ஸ் (undoing tweets) மற்றும் பல பிரத்யேக அம்சங்களும் ட்விட்டர் ப்ளூ சாந்தாவின் கீழ் அணுக கிடைக்கும்.
ட்விட்டர் நிறுவனத்தின் இந்த "ப்ளூ டிக் நீக்க" நடவடிக்கையானது சில எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. தங்களுடைய ப்ளூ டிக்களை இழந்த ரேஸ்பெர்ரி பை (Raspberry Pi) நிறுவனம் மற்றும் தி வெர்ஜ்ஜின் (The Verge) மூத்த ஆசிரியரான டாம் வாரன் (Tom Warren) உட்பட பலரும் ட்விட்டரில் தங்களுடைய எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications