உங்களுடைய ஸ்மார்ட்போனில் எவ்வளவு ரேம் இருந்தால் நல்லது? எது சிறப்பானது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..

|

கடந்த சில தசாப்தத்தில், ஸ்மார்ட்போனில் உள்ள ரேமின் அளவு நம்பமுடியாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு அளவிலான ரேம் வழங்கப்பட்டு வருகின்றது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் 2 ஜிபி ரேம் முதல் துவங்கி ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு இப்போது 12 ஜிபி ரேம் வரை ரேம்களின் அளவு அதிகரித்துள்ளது. இந்த அசாதாரணமான வளர்ச்சி போக்கு அனைவரிடமும் ஒரு பொதுவான கேள்வியை எழுப்பியுள்ளது. உண்மையில் ஒரு ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் தேவை? என்பதே அந்த கேள்வியாக இருக்கிறது.

எவ்வளவு ரேம் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் சூப்பராக செயல்படும்?

எவ்வளவு ரேம் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் சூப்பராக செயல்படும்?

சரி, ஒரு ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் இருப்பது அவசியம்? எவ்வளவு ரேம் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் சூப்பராக செயல்படும்? அதிகபட்ச ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகப் பணம் கொடுத்து வாங்குவது சிறப்பானது தானா? என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை இறுதி வரை படித்து பயன்பெறுங்கள். ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல் இது. சரி, ரேம் தேவையை எப்படிக் கணிப்பது? உங்களுக்குத் தேவையான ரேம் அளவு நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளைப் பொறுத்தே அமைகிறது.

முதலில் ஸ்மார்ட்போனுக்கு ஏன் ரேம் தேவை?

முதலில் ஸ்மார்ட்போனுக்கு ஏன் ரேம் தேவை?

அதிக ரேம் தேவையா அல்லது எது சிறந்தது என்று ஆராய்வதற்கு முன், ரேம் ஏன் ஒரு ஸ்மார்ட்போனில் முக்கியமாகக் கருதப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ரேண்டம் அக்சஸ் மெமரி (ரேம் - RAM) என்பது ஒரு பொதுவான கணினி வன்பொருளாகும். உங்கள் டெஸ்க்டாப் கணினி, மடிக்கணினிகள் மற்றும் பிற கையடக்க சாதனங்கள் அடிக்கடி அணுகப்படும் தகவல்களைச் சேமிக்க தற்காலிக நினைவகமாக RAM பயன்படுத்துகின்றது. ரேம் சாதனங்கள் முழுவதும் வெவ்வேறு வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால் ரேம் அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரியான செயல்பாட்டையே கொண்டுள்ளது.

இன்டர்நெட் இல்லாமல் Google Pay, PhonePe, Paytm போன்ற UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி?இன்டர்நெட் இல்லாமல் Google Pay, PhonePe, Paytm போன்ற UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி?

உங்களுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை?

உங்களுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை?

இந்தக் கேள்விக்கான பதில் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. சில ஸ்மார்ட்போன் பயனர்கள் குறைவான பிரௌசிங், குறுஞ்செய்தி அனுப்புதல், அழைப்பு மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை மட்டுமே அவர்களின் ஸ்மார்ட்போனில் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு அதிக ரேம் என்பது தேவையில்லை. இதற்கிடையில், பிற பயனர்கள் மொபைல் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவற்றைச் செய்கிறார்கள், இவர்களைப் போன்ற ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நிச்சயமாக அதிக ரேம் தேவைப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் போனில் உள்ள ஆப்ஸ் எவ்வளவு ரேம் அளவை பயன்படுத்துகிறது தெரியுமா?

உங்கள் போனில் உள்ள ஆப்ஸ் எவ்வளவு ரேம் அளவை பயன்படுத்துகிறது தெரியுமா?

உங்களுக்கு எவ்வளவு ரேம் தேவை என்பதைக் கண்டறிய உதவ, மக்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் செய்யும் சில பொதுவான செயல்பாடுகளைப் பார்ப்போம். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகப் பயன்பாடுகள் பயன்பாட்டைப் பொறுத்து 100 முதல் 300 எம்பி வரை ரேம் எடுக்கும். குரோம் மற்றும் யூடியூப் போன்ற உலாவிகள் மற்றும் வீடியோ பிளேயர்கள் முறையே, எத்தனை டேப்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் நீங்கள் பார்க்கும் வீடியோவின் தரத்தைப் பொறுத்து சுமார் 500 எம்பி பயன்படுத்துகிறது.

கேமரா விரும்பிகளே இனி ஒரே ஒரு பெரிய கேமரா போதும்.. ஒன்பிளஸ் மேக்னெட்டிக் ரொடேடிங் கேமரா.! டெமோ வீடியோ..கேமரா விரும்பிகளே இனி ஒரே ஒரு பெரிய கேமரா போதும்.. ஒன்பிளஸ் மேக்னெட்டிக் ரொடேடிங் கேமரா.! டெமோ வீடியோ..

ஹை கிராபிக்ஸ் கேம் விளையாட எவ்வளவு ரேம் தேவை?

ஹை கிராபிக்ஸ் கேம் விளையாட எவ்வளவு ரேம் தேவை?

மொபைல் கேம்கள் அவற்றின் கிராஃபிக் தரம் மற்றும் நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விளையாடுகிறீர்களா என்பதைப் பொறுத்து பெரிதும் மாறுபடும். ஆண்ட்ராய்டில் FIFA Soccer போன்ற கேம்கள் இயங்கும் போது 1 GB RAM விட அதிகமாகப் பயன்படுத்தலாம். உங்கள் இயக்க முறைமையால் பயன்படுத்தப்படும் ரேமையும் நீங்கள் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. சில மொபைல் நிறுவனங்கள் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி நினைவகத்தை வழங்குகின்றன என்பதை இங்கிருந்து நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் ரேம் பயன்பாட்டை எவ்வாறு சரிபார்க்கலாம்?

உங்கள் ஸ்மார்ட்போனில் ரேம் பயன்பாட்டை எவ்வாறு சரிபார்க்கலாம்?

  • உங்கள் ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் தேவை என்பதைப் புரிந்து கொள்ள, நீங்கள் தற்போது எவ்வளவு நினைவகத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • உங்கள் போனின் Settings செல்லவும் > Device Care or Device Maintenance என்பதைத் தட்டவும்.
  • BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

    டெவலப்பர் விருப்பங்களை ஆக்டிவேட் செய்ய என்ன செய்ய வேண்டும்?

    டெவலப்பர் விருப்பங்களை ஆக்டிவேட் செய்ய என்ன செய்ய வேண்டும்?

    • Memory என்பதைத் தட்டவும். இங்கிருந்து, உங்கள் மொபைலின் மொத்த RAM அளவு, தற்போது இயங்கும் ஆப்ஸ் மற்றும் சேவைகளால் தற்போது எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம்.
    • சில ஃபோன் மாடல்களில், முந்தைய இரண்டு படிகளை முடிப்பதற்கு முன் டெவலப்பர் விருப்பங்களை இயக்க வேண்டும்.
    • இதைச் செய்ய, Settings > About என்பதற்குச் செல்லவும். உங்கள் பின்னை உள்ளிடுவதற்கு முன் கீழே ஸ்க்ரோல் செய்து, பில்ட் எண்ணை ஏழு முறை தட்டவும்.
    • ஸ்மார்ட்போனிற்கு 8ஜிபி ரேம் அவசியமா?

      ஸ்மார்ட்போனிற்கு 8ஜிபி ரேம் அவசியமா?

      ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ஸ்மார்ட்போனின் ரேம் 1 ஜிபி உச்சவரம்பைக் கூட எட்டவில்லை என்பதே இன்றைய தலைமுறையினர் அறிந்திடாத உண்மை. இன்று ரேம் அளவின் வளர்ச்சி மிக வேகமாக முன்னேறி வருகிறது. மேலும், சில ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் அவற்றின் ஈர்க்கக்கூடிய அம்சங்களுக்கு மேல் இப்போது 12 ஜிபி ரேம் அளவு வரை கொண்டுள்ளது. மிட் ரேஞ்ச் போன்களில் இப்போது பொதுவாக 8ஜிபி ரேம் கிடைக்கிறது.

      வங்கியில் எளிதாக கடன் வாங்க வேண்டுமா? அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்லைன் CIBIL ஸ்கோர் செக்..வங்கியில் எளிதாக கடன் வாங்க வேண்டுமா? அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்லைன் CIBIL ஸ்கோர் செக்..

      PUBG, ஃபிரீஃபயர் மற்றும் பிளாக் டெசர்ட் ஆன்லைன் விளையாட எவ்வளவு ரேம் தேவை?

      PUBG, ஃபிரீஃபயர் மற்றும் பிளாக் டெசர்ட் ஆன்லைன் விளையாட எவ்வளவு ரேம் தேவை?

      இருப்பினும், இந்த அளவு ரேம் நீங்கள் நினைப்பது போல் தேவைப்படாமல் இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அதிக ரேம் வைத்திருப்பதன் முக்கிய நன்மை என்னவென்றால், இது உங்களுடைய ஸ்மார்ட்போனை மெதுவாகாமல் பார்த்துக்கொள்கிறது. அதேவேளையில், மூட வேண்டிய கட்டாயத்தில் இல்லாமல் ஒரே நேரத்தில் அதிக பயன்பாடுகளை இயக்க இது அனுமதிக்கிறது. இதன் விளைவாக, PUBG மற்றும் பிளாக் டெசர்ட் ஆன்லைன் போன்ற சில கிராஃபிக் தீவிர கேம்களை நீங்கள் விளையாடுவதற்கு உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வைத்திருப்பது அவசியம்.

      8 ஜிபி ரேம் எந்த வழியில் சிறந்தது? 4ஜிபி ரேம் போதுமானது தானா?

      8 ஜிபி ரேம் எந்த வழியில் சிறந்தது? 4ஜிபி ரேம் போதுமானது தானா?

      உண்மையில் 8 ஜிபி நினைவகம் இன்றைய பயன்பாட்டிற்கு சிறந்தது. ஆனால், எல்லா பயனர்களுக்கும், எல்லா நேரத்திலும், எப்போதும் இது தேவையில்லை என்பது கவனிக்கத்தக்கது. நீங்கள் உயர்நிலை மொபைல் கேம்களை விளையாட அல்லது தொடர்ந்து பல்பணி செய்ய விரும்பினால் மட்டும் உங்களுக்கு 8 ஜிபி ரேம் தேவைப்படும். மற்ற நேரத்தில் உங்களுக்கு வெறும் 4 ஜிபி ரேம் அல்லது அதற்கும் குறைவான ரேம் இருந்தால் கூட போதுமானது தான். 4ஜிபி ரேம் அளவிற்கும் குறைந்த ரேம் ஸ்மார்ட்போனகளை கூட வாங்கி பயன்படுத்தலாமா? அது சிறந்தது தானா?

      நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா? எப்படி அதை கண்டறிவது? ஈஸி டிப்ஸ்..நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா? எப்படி அதை கண்டறிவது? ஈஸி டிப்ஸ்..

      ஸ்மார்ட்போனிற்கு 2ஜிபி ரேம் போதுமா?

      ஸ்மார்ட்போனிற்கு 2ஜிபி ரேம் போதுமா?

      நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு மாடலை பயன்படுத்தும் பயனர் என்றால், வீடியோக்களை பார்ப்பதை விட அதிகமாக சில வேலைகளை செய்ய விரும்பினால் 2ஜிபி ரேம் சில கவலைகளை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் வழக்கமான தினசரி பணிகளை முடிக்கும்போது OS தொடர்பான மந்தநிலையை நீங்கள் சந்திக்கலாம். ஆண்ட்ராய்டு 10 அல்லது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் போன்களில் குறைந்தபட்சம் 2ஜிபி ரேம் இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கூகுள் அறிவித்தது கவனிக்கத்தக்கது. இருப்பினும், உங்கள் ரேமை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தக்கூடிய ஒரு தந்திரமும் உள்ளது.

      அதிக ஸ்மார்ட்போன் ரேம் சிறந்ததா? எந்த ரேம் அளவை தேர்வு செய்வது?

      அதிக ஸ்மார்ட்போன் ரேம் சிறந்ததா? எந்த ரேம் அளவை தேர்வு செய்வது?

      நீங்கள் பயன்படுத்தும் சில பொதுவான பயன்பாடுகளை இயக்கும் போது உங்கள் ஃபோன் வேகம் குறைவதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், அதிக ரேம் கொண்ட சாதனத்திற்கு மேம்படுத்துவது பற்றி நீங்கள் பரிசீலிப்பது நல்லது. உங்கள் ஸ்மார்ட்போன் மந்தமடைகிறது என்றால், உங்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்பது பொருள். உங்கள் தேவைக்கேற்ப 2ஜிபி அல்லது 12ஜிபி வரை நீங்கள் ரேமை பயன்படுத்தலாம். அடுத்த பெரிய அப்டேட் வந்தாலும், உங்கள் ஸ்மார்ட்போன் நன்றாக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் கூடுதல் ரேமை ஒதுக்குவதே சிறந்த விஷயமாகும். இவற்றை எல்லாம் கவனித்து ரேம் அளவை தேர்வு செய்வது உங்களுக்கு சிறந்தது.

Best Mobiles in India

English summary
How Much RAM Does a Smartphone Need And How Much RAM Is Need For Better Performance Of Your Phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X