அடப்பாவி ஆப்பிள்.. இப்படி ஏமாத்திட்டீயே.. iPhone 15, iPhone 15 Pro Max வாங்கியவர்களை கதற வைக்கும் தகவல்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் புதிய ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) மாடல்களை அறிமுகம் செய்யும் போது, உற்பத்தி செலவு (Manufacturing Cost) அதிகரித்ததின் விளைவாக, இவைகளின் விற்பனை விலையும் (Sale Price) அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருந்தது.
இதற்கிடையில் ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது. அந்த அறிக்கை, ஒவ்வொரு ஐபோன் 15 சீரிஸ் மாடலுக்கான தனிப்பட்ட கூறுகளின் விலையை (Individual component price) பற்றிய விவரங்களை வெளிப்படுத்தி, அவற்றை தயாரிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை போட்டு உடைத்துள்ளது.

ஃபோமல்ஹாட் டெக்னோ சொல்யூஷன்ஸ் (Fomalhaut Techno Solutions) மற்றும் ஜப்பானிய செய்தித் தளமான நிக்கேய் (ஆப்பிள் இன்சைடர் வழியாக) வழியாக வெளியான அறிக்கையின்படி, ஸ்டாண்டர்ட் ஐபோன் 15 மாடலை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் செலவு செய்த தொகை $423 ஆகும். அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.35,200 ஆகும்!
இதே போல ஐபோன் 15 பிளஸ் மாடலை தயாரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனமானது $442 செலவு செய்கிறது. அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.36,800 ஆகும். ஒப்பிடுகையில், இவ்விரு மாடல்களும் முறையே $799 மற்றும் $899 முதல் என்கிற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ப்ரோ மாடல்களை பொறுத்தவரை, ஐபோன் 15 ப்ரோ மாடலை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் செலவு செய்த தொகை $523 ஆகும். அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.43,500 ஆகும். கடைசியாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை தயாரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் $558 செலவு செய்துள்ளது.
அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.46,400 ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விற்பனை விலையானது முறையே $999 மற்றும் $1199 க்கு தொடங்குகிறது. அதாவது ஐபோன் 15 சீரிஸின் தயாரிப்பு விலைகளானது, அவைகளின் விற்பனை விலையில் பாதியாக உள்ளன.
இந்த ஆண்டு வெளியான புதிய ஐபோன்களில், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை தவிர மற்ற மாடல்கள் எதுவும் விலை உயர்வை காணவில்லை என்கிற மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு ஆப்பிளின் செய்யும் செலவை வெளிப்படுத்திய இந்த சமீபத்திய அறிக்கை ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம்.
ரூ.35,200 என்கிற உற்பத்தி செலவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம்: 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.79,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.89,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.1,09,900 க்கும் அறிமுகமானது.
ரூ.36,800 என்கிற உற்பத்தி செலவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம்: 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ.89,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ.99,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ.1,19,900 க்கும் அறிமுகமானது
ரூ.43,500 என்கிற உற்பத்தி செலவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம்: 128ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,44,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,64,900 க்கும் மற்றும் 1டிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,84,900 க்கும் அறிமுகமானது
ரூ.46,400 என்கிற உற்பத்தி செலவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம்: 256 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,79,900 க்கும் மற்றும் 1டிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,99,900 க்கும் அறிமுகமானது.


Click it and Unblock the Notifications








