ஒரே நிமிடத்தில் 4 லட்சம் சம்பாதித்த கூக்ளர்.!!

Written By:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் கூக்ளரான சன்மே வேத் என்பவர் கூகுள்.காம் என்ற இணைய முகவரியை ஒரு நிமிடத்திற்கு வாங்கினார். ஒரு நிமிடம் கூகுள்.காம் முகவரியை வைத்திருந்த சன்மேவுக்கு கூகுள் நிறுவனம் பரிசு தொகை அளித்தது.

ஒரே நிமிடத்தில் 4 லட்சம் சம்பாதித்த கூக்ளர்.!!

கூகுள் பரிசு தொகை முழுவதையும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க சன்மே முடிவு செய்தார். கூகுள் நிறுவனம் வழங்கிய பரிசு தொகையை அந்நேரத்தில் தெரிவிக்க சன்மே மறுத்து விட்ட நிலையில் கூகுள் ப்ளாக் போஸ்ட் மூலம் இந்த விவரம் தெரியவந்திருக்கின்றது.

அந்நிறுவனம் சன்மேவுக்கு வழங்கிய சுமார் $6,006.13 பரிசு தொகையாக வழங்கியதாக தனது ப்ளாக் போஸ்ட் மூலம் உறுதி செய்திருக்கின்றது. இந்திய மதிப்பில் ரூ.4,07,752.86 ஆகும். பரிசு தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதால் சன்மேவின் பரிசு தொகை இரு மடங்கு அதிகரிக்கப்பட்டதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே நிமிடத்தில் 4 லட்சம் சம்பாதித்த கூக்ளர்.!!

கூகுளின் தேடுதல் சேவைகளில் பிழைகளை கண்டறியும் ஹேக்கர்களுக்கு அந்நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுமார் 300 ஹேக்கர்கள் மற்றும் செக்யூரிட்டி ஆய்வாளர்களுக்கும் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

Read more about:
English summary
how much Google paid the man who bought 'Google.com' Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot