Home
News

1.5 டன் ஏசி 8 மணி நேரத்தில் எவ்வளவு மின்சாரத்தை எடுக்கும்? எந்த ஏசி கம்மி மின்சாரத்தை எடுக்கும்? எது சிறந்தது?

வீட்டில் ஏசி (AC) பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் வரும்? எந்த ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை பயன்படுத்தினால் சிறந்தது? எது குறைந்தளவு மின் கட்டணத்தை வழங்கும்? என்பது போன்ற விஷயங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இப்போது சந்தையில் பல விதமான இன்வெர்டர் ஏசி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட ஏசி மாடல்கள் வருகின்றன. இதில் 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் 3 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி மாடல்களையே பல விற்பனையாளர்கள் விற்பனை செய்கிறாரகள். பொதுவாக ஒரு நடுத்தர அளவு கொண்ட படுக்கையறை அல்லது ஹாலை குளிர்விக்க 1.5 டன் ஏசி போதுமானது. இதை தான் பெரும்பாலானோர் வாங்குகிறார்கள்.

1.5 டன் ஏசி 8 மணி நேரத்தில் எவ்வளவு மின்சாரத்தை எடுக்கும்?

ஆனால், 1.5 டன் ஏசி மாடலை வாங்கும் போது, எந்த நட்சத்திர ரேட்டிங் கொண்ட மாடலை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசியை வாங்கினால், மொத்த மின்சார கட்டணத்தில் அதிக சேமிப்பை நீங்கள் பெற முடியும். அதுவே 3 ஸ்டார் ரேட்டிங் ஏசியை வாங்கினால், 5 ஸ்டார் ஏசியை விட அதிகமாக மின்சாரம் செலவாகும். இதனால் மின் கட்டணம் உயரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி, இப்படி வீடுகளில் 1.5 டன் ஏசி பயன்படுத்தினால் எவ்வளவு மின்சார கட்டணம் நமக்கு வரும் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. எந்த ஏசி மாடலை வாங்கினால் சிறந்தது என்பதை தெரிந்துகொளளலமா? வாங்க. 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசியை நீங்கள் பயன்படுத்துகிறீர் என்றால், 1 மணி நேரத்திற்கு சுமார் 840 வாட்ஸ் மின்சாரத்தை ஏசி எடுத்துக்கொள்கிறது. 1 நாளுக்கு 8 மணி நேரம் ஏசி இயங்கினால், 6.4 யூனிட் மின்சாரம் செலவாகிறது.

நீங்கள் வசிக்கும் இடத்தின் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50 என்றால், 1 யூனிட்டுக்கு தினசரி பில் ரூ.48 ஆக இருக்கிறது. ஒரு மாதத்திற்கான கட்டணம் என்றால் ரூ.1500 செலவாகிறது. இதேபோல், நீங்கள் ஒரு 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை ஒரு மணி நேரம் இயக்கினால், 1104 வாட்ஸ் மின்சாரம் செலவாகிறது. ஒரு நாளுக்கு 8 மணி நேரம் இயங்கினால் 9 யூனிட் மின்சாரம் செலவாகிறது. இதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.67.5 கட்டணமும், 1 மதத்திற்கு ரூ.2 ஆயிரம் கட்டணமும் செலவாகிறது.

1.5 டன் ஏசி 8 மணி நேரத்தில் எவ்வளவு மின்சாரத்தை எடுக்கும்?

இந்த 2 வித்தியாசமான ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்களை வைத்து பார்க்கையில், 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி உங்களுக்கு 500 ரூபாய் குறைந்த கட்டணத்தை வழங்குகிறது. 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்கள் சாற்றி விலை உயர்ந்தவை என்றாலும், ஒரு முறை நீங்கள் அதிகமாக செலவு செய்வதினால், வருடம் முழுக்க உங்களுக்கு ரூ.6000 சேமிக்கப்படுகிறது.

5 ஸ்டார் ஏசியின் விலை அதிகமாக இருக்கிறது என்று, 3 ஸ்டார் ரேட்டிங் ஏசியை வாங்கினால், உங்கள் மின்சார கட்டணம் வருடம் தோறும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், சந்தையில் தற்போது வாங்க கிடைக்கும் டூயல் இன்வெர்ட்டர் ஏசி மாடல்களை நீங்கள் வாங்கினால், இன்னும் கணிசமாக மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How much electricity will be used if 1.5 Ton AC runs for 8 hours a day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X