Home
News

அடேங்கப்பா.. Google சிஇஓ சுந்தர் பிச்சை பாதுகாப்புக்கு இவ்வளவு செலவு பண்றாங்களா? சபாஷ்..

மெட்டா (Meta), கூகுள் (Google), ஆப்பிள் (Apple) நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனங்கள் தொடர்ந்து புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

இந்நிலையில் கூகுள், மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது சிஇஓ-க்களின் பாதுகாப்புக்காக செலவிடும் தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக எஸ்&பி 500 நிறுவனங்கள் பாதுகாப்பு சார்ந்து செலவிடும் விகிதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகத் தரவு சார்ந்த விவரங்கள் வெளியிடும் ஈக்விலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google சிஇஓ சுந்தர் பிச்சை பாதுகாப்புக்கு இவ்வளவு செலவு பண்றாங்களா?

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்கின் பாதுகாப்புக்காக 24.4 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறது. மேலும் இவரது தனிப்பட்ட குடும்ப நபர்களின் பாதுகாப்பு சார்ந்து சுமார் 9.4 மில்லியன் டாலர்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு சார்ந்த செலவாக 14 மில்லியனும் செலவிடுகிறது மெட்டா நிறுவனம். குறிப்பாக இது அவரது இல்லம் மற்றும் பயண நேர பாதுகாப்பையும் உள்ளடக்கிய தொகை. இதுதவிர மெட்டா நிறுவனம் 9 லட்சம் டாலர்களை சிஓஓ ஜேவியரின் பாதுகாப்புக்குச் செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இரண்டாவது உள்ள கூகுள் நிறுவனம் சிஇஓ சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக 6.8 மில்லியன் டாலர்களை செலவிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் அமேசான் உள்ளது. அதாவது கடந்த ஆண்டு மட்டும் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸ் உள்ளிட்ட அமேசான் நிறுவன தலைமை பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கு 2.7 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் என்விடியா சிஇஒ ஜென்சென் ஹுவாங் பாதுகாப்புக்கு 2.5 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. பின்பு எலான் மஸ்க் பாதுகாப்புக்காக 2.4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்கின் பாதுகாப்புக்காகக் கடந்த ஆண்டு 8.2 லட்சம் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google சிஇஓ சுந்தர் பிச்சை பாதுகாப்புக்கு இவ்வளவு செலவு பண்றாங்களா?

குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (sundar pichai) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.

படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ (Google CEO) என்ற பதவியைப் பெற்றார் இவர். குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ.8,342 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How much do leading companies such as Apple and Google spend on their CEO security?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X