உங்க பெயர்ல எத்தனை SIM இருக்கு? 50 லட்சம் வரை அபராதம் போட போறாங்க.. உஷார்.. உடனே இதை ஆன்லைனில் கவனியுங்க..
இந்தியாவில் ஸ்மார்ட்போன் (ஸ்மார்ட்phone), மொபைல் போன் (Mobile phone), பியூச்சர் போன் (Feature phone) சாதனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மடமடவென உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சிம் கார்டுகளின் (SIM card) எண்ணிக்கையும் கூட டபுளாக அதிகரித்துவிட்டது. ஆம், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இப்போது இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் டூயல் சிம் (Dual SIM) அம்சம் வந்துவிட்டது. ஆகையால், போனில் இருக்கும் ஒரு சிம் சலட்டை (SIM slot) கூட யாரும் சும்மா விட்டு வைப்பதில்லை. இரண்டு சிம் ஸ்லாட்களிலும் இரண்டு சிம்களை பயன்படுத்துகிறார்கள்.
இதன் காரணமாக சிம் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை (Increase rate in SIM card usage) அதிகரித்துவிட்டது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட தனிநபரால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த இந்திய சட்டம் அனுமதிக்கிறது. அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறும் பொழுது, சட்டப்படி நடவடிக்கை அந்தநபரின் மீது எடுக்கப்படுகிறது. இப்போது டெலிகாம் சட்டங்கள் கடுமையாகிவிட்டன. இதனால், விரைவில் பல நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சட்டப்படி ஒரு நபர் எத்தனை சிம் கார்டுகளை இந்தியாவில் பயன்படுத்தலாம்? (How many SIM cards a person can use in India by law):
இதில் முதற்கட்டமாக, அடிப்படை சிம் கார்டு எண்ணிக்கையை (Basic SIM card count) மீறி பயன்படுத்தும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படவுள்ளது. இந்திய டெலிகாம் சட்டத்தின் (Telecom Rules) படி, ஒரு தனிநபர் அவருடைய ஆதார் விபரங்களை வைத்து அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் வரை வாங்கி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை மீறும் பொழுது அவர்கள் மீது ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.
அபராதம் விதிக்கப்பட்ட பிறகும், ஒரு நபர் அவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளை சரியான முறையில் முடக்கம் (SIM card block) செய்யாமல், மீண்டும்-மீண்டும் சிக் கார்டுகளை வாங்கி குவித்துக்கொண்டே இருந்தால், அவர்கள் மீது ரூ. 2 லட்சம் வரை அபராதம் (Rs 2 Lakh Fine) விதிக்கப்படுமென்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நபர் அவருடைய அடையாள ஆவணங்களுக்கு பதிலாக வேறொரு நபருடைய சிம் கார்டை பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும் மக்களே.
வேறொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு அல்லது மோசடி செய்யும் வகையில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய DoT எச்சரித்துள்ளது. 2 சிம் கார்டுகளை தற்போது பயன்படுத்தி வரும் அனைவரும் உங்கள் பெயரின் கீழ் எத்தனை சிம் கார்டுகள் இதுவரை வாங்கப்பட்டுள்ளது என்பதை உடனே ஆன்லைனில் (Online) செக் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனே இதை ஆன்லைனில் கவனியுங்க.. இல்லாட்டி சிக்கல் மக்களே:
- உடனே உங்கள் போனில் இருந்து sancharsaathi.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள்.
- இந்த பதிவில் உள்ள லிங்க் (Link) ஐ கிளிக் செய்தும் நேரடியாக செல்லலாம்.
- தற்போது Know your mobile connection விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைல் எண்ணை (Mobile number) உள்ளிடவும்.
- திரையில் காண்பிக்கப்படும் கேப்ட்சா கோடை (Captcha code) உள்ளிடவும்.
- உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP ஐ இப்போது உள்ளிடவும்.
இப்போது உங்கள் ஆதார் (Aadhaar card details) விவரத்துடன் வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டு விபரங்களும் திரையில் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் பயன்படுத்தாத அல்லது தேவையே இல்லை என்று உணரும் எண்களை இந்த தலத்தில் இருந்தபடியே பிளாக் (Block SIM card) செய்துகொள்ளலாம். இந்த முறை உடனே செய்து முடிப்பது, உங்களை தேவையில்லாத அபாரதங்களில் இருந்து காக்க செய்யும்.


Click it and Unblock the Notifications








