அமெரிக்க சுற்றுலா நீர்மூழ்கி மாயம்! இன்னும் எத்தனை மணி நேரத்திற்கு ஆக்சிஜன் இருக்கும்? 5 பேரின் கதி என்ன?
சமீபத்தில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் மிகவும் பிரபலமான டைட்டானிக் கப்பல் சிதைவுகளைப் பார்வையிடச் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது. குறிப்பாக தற்போது அந்த நீர்மூழ்கி கப்பலில் உள்ளவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
கடந்த 1912-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரின் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி டைட்டானிக் என்று சொகுசு கப்பல் புறப்பட்டது. குறிப்பாக இதில் 2 ஆயிரத்து 224 பேர் பயணம் செய்தனர். ஆனால் வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது ராட்சத பனிப்பாறையில் மோதி இந்த கப்பல் 2 ஆக உடைந்து கடலில் மூழ்கியது.

மேலும் இந்த விபத்தில் கடலில் மூழ்கி ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கடந்த 1985-ம் ஆண்டு இந்த டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போதுமுதல் ஆராய்ச்சியாளர்கள் நீர்மூழ்கி கப்பல்களில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கிடக்கும் பகுதிக்குச் சென்று பல ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் இந்த விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் 1997-ல் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது சுற்றுலாப் பயணிகளும் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைப் பார்க்க சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. அதன்படி ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் அமெரிக்காவின் ஓசன்கேட் என்ற நிறுவனம் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. 8 நாள் பயணமான இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 2லட்சம் 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2 கோடி) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
சமீபத்தில் இங்கிலாந்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் உள்பட 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைப் பார்க்க அழைத்து செல்லப்பட்டனர். இந்த ஓசன்கேட் டைட்டன் கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்பு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த நீர்மூழ்கி கப்பலை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

தற்போது அந்த கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். பின்பு விமானங்கள், நீர்மூழ்கி கப்பல் போன்றவையும் இந்த தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளன.
குறிப்பாக ஓசன்கேட் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது என்னவென்றால், இன்னும் நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் இருப்பு மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் அந்த கப்பலில் இருந்தவர்களை உயிருடன் மீட்க சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
குறிப்பாக ஓசன்கேட் டைட்டன் நீர்மூழ்கி மாயமானது மிகவும் ஆழமான பகுதி என்று கூறப்படுகிறது. பின்பு அங்கு வானிலை மிக மோசமாக இருப்பதாலும் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஓஷன்கேட் நிறுவனம் தங்களிடம் 3 நீர்மூழ்கிகள் இருப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் டைட்டன் நீர்மூழ்கி மட்டுமே டைட்டானிக் மூழ்கியுள்ள ஆழத்திற்குச் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 10,432 கிலோகிராம் எடை கொண்ட அந்த நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும் என்றும் அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications