சும்மா கைமாத்தாதிங்க., ஸ்மார்ட்போனில் கொரோனா எத்தனை நாள் உயிர் வாழும்?- ஆய்வு முடிவு
தற்போது மூன்றாது கையாக மாறி தம்மோடே ஒட்டி இருக்கும் ஸ்மார்ட் போன்களில் வைரஸ் எத்தனை நாள் உயிர் வாழும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்
சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை
இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.

24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்
உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்
அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு ஊரடங்கு
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

பொழுதை போக்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர்
இதன்காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டு வருவதோடு, இளைஞர்கள் வீட்டுக்குழந்தைகள் என பெரியோர்கள் வரை தங்களின் பொழுதை போக்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர். டிவி பார்த்து நேரத்தை செலவிட்டாலும் எப்போது உடலில் உள்ள மூன்றாவது கை போல செல்போன் மாறி உள்ளது.

செல்போனை ஒவ்வொருவர் கையாக மாற்ற வேண்டிய நிலை
முதலில் பொழுது போக்குக்கிற்காக செல்போன் பயன்படுத்தினார்கள், தற்போது செல்போன் பயன்படுத்தியே போர் அடித்து விடுகிறது என புலம்பல் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கு டேட்டா என்பதும் பிரதானமானதாக உள்ளது. அதேபோல் போன் பேசும் போது வீடியோ பார்ப்பதற்கு என அனைவரும் தங்களின் செல்போனை ஒவ்வொருவர் கையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றினால் எத்தனை நாள்கள் உயிர் வாழும்
அப்படி மாற்றும் போது தங்களின் செல்போனி்ல் வைரஸ் தொற்றினால் அது எத்தனை நாள்கள் உயிர் வாழும் என்ற தகவல் வெளி வந்துள்ளது. உலக சுகாதார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 2003-ம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ச்-கோவ் வைரஸ் கிளாஸ் மீது 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்கள் உயிர் வாழும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

72 மணி நேரங்கள் உயிர் வாழும்
அதேபோல் கிளாஸை தவிர்த்து கடுமையான பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின் ஸ்டீல் பொருட்களில் 72 மணி நேரங்கள் உயிர் வாழும் என்பதும் தெரியவந்துள்ளது. அதே போல தற்போது கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என ஆரோக்கியத்திற்கான தேசிய மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது கொரோனா வைரஸ் 72 மணி நேரம் உயிர் வாழும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சூடான பதத்தால் அழிந்து விடும்
அதேபோல் கொரோனா வைரஸ் சூடான பதத்தால் அழிந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில செல்போன் தாமாகவே சூடாகும் என்பதால் அதில் உள்ள வைரஸ்கள் அழிந்து விடும் என வெளியான ஆய்வுத் தகவலுக்கு நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அனைத்தையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்
கார்டுபோர்டில் 24 மணி நேரம் பித்தளை மீது 4 மணி நேரம், ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட், லேப்டாப் போன்ற கண்ணாடி பேனல்களில் 96 மணி நேரம் வரை உயிர்வாழும் என்று தெரிவிக்கப்படுவதால் அனைத்தையும் பாதுகாப்பாக சுத்தம் செய்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications