Home
News

குழந்தைகள், சிறுவர்கள் எவ்வளவு நேரம் Mobile பயன்படுத்தலாம்? பெற்றோர்களே கவனியுங்க.. அலட்சியம் ஆபத்தானது..

குழந்தைகள் (children) ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் ஸ்மார்ட்போன் (smartphone), மொபைல் (mobile), டேப்லெட் (Tablet), லேப்டாப் (Laptop) அல்லது டெஸ்க்டாப் (Desktop) போன்ற சாதனங்களை பயன்படுத்த என்று நிபுணர்கள் கூறிய முக்கியமான தகவலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். குழந்தைகள் ஏன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி போன்ற டிஸ்பிளே சாதனங்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டுமென்று (avoid screen timing) நிபுணர்கள் எச்சரிக்கும் தகவலையும் இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம். உங்கள் வீட்டில் எந்த வயதில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இருந்தாலும் சரி, இது முக்கியம்.

நீங்கள் ஒரு பெற்றோர் (parent) என்றால் கட்டாயம் இந்த தகவலை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது மக்களே. குழந்தைகள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக ஸ்மார்ட் கேட்ஜெட்களுடன் (children with smart gadgets) ஒன்றிவிடுகிறார்கள். இதற்கு பெற்றோர்களே ஒரு முக்கியமான காரணம் என்கின்றனர் நிபுணர்கள். ஸ்மார்ட்போன், டேப்லெட், டிவி போன்ற சாதனங்களுடன் அதிகமாக நேரம் செலவிடும் குழந்தைகளை தான் நாம் (kids using smartphones) இன்று அதிகம் பார்க்க முடிகிறது.

குழந்தைகள், சிறுவர்கள் எவ்வளவு நேரம் Mobile பயன்படுத்தலாம்?

குழந்தைகள், சிறுவர்கள் எவ்வளவு நேரம் Mobile, ஸ்மார்ட்போன், டிவி போன்ற டிஸ்பிளே சாதனங்களை பயன்படுத்தலாம்?

குழந்தைக்கு கதை சொல்லி, நிலவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் உரையாடி, கதை கூறி அவர்களுடன் நேரம் செலவிடும் பழக்கமும் இப்போது இல்லாமல் போய்விட்டது. இன்றைய காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் பழக விடாமல், அவர்களை அதிகமாக ஸ்மார்ட் கேட்ஜெட்களுடன் பழக விடுவதாக (Kids using display gadgets more) நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பி உணவு ஊட்டுவதற்காக பெரும்பாலான பெற்றோர்கள் இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. உணவு ஊட்டுவதற்காக மட்டும் துவக்கப்பட்ட இந்த பழக்கம் இப்போது பெரும்பாலான குழந்தைகளை சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் மற்றும் டிஸ்பிளே கேட்ஜெட்களுக்கு (display gadgets) அடிமையாக்கியுள்ளதாக (kids and children addicted to mobile phones) நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அதிக நேரம் மொபைல் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு என்ன ஆபத்துகள் ஏற்படலாம்?

இதனால், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இப்போது ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வீடியோ (video) பார்ப்பது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். ஓடி விளையாடி, இயற்கையுடன் ஒன்றி சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில், இப்போது சிறுவர்கள் வீட்டிற்குள் அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து ஸ்மார்ட்போன் மற்றும் டிஸ்பிளே கேட்ஜெட்களுக்குள் மூழ்கிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் பெரியளவு உடல் உபாதைகளை சந்திக்க நெருடுகிறது என்று நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஓடி விளையாடாத குழந்தைகள் வேகமாக உடல் பருமன் சிக்கலுடன் சில உறுப்புகளின் ஆரோக்கியத்தை இழக்க நேரிடுகிறது என்றும், மறுபுறம் மனளவில் சேதமடைகிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் (risk of children using mobile and smartphones). ஆகையால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு மொபைல் மற்றும் டிஸ்பிளே சாதனங்களை வழங்கும் பொழுது கட்டாயம் ஸ்கிரீன் டைம் கட்டுப்பாடுகளை (scree time restrictions) கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளனர்.

2 வயது குழந்தை மற்றும் 6 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு எவ்வளவு ஸ்கிரீன் நேரம் பாதுகாப்பானது?

நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2 வயது முதல் 5 வயதிற்குள் உள்ள குழந்தைகள் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக வெறும் 1 மணி நேரத்திற்கு வேண்டுமானால் ஸ்மார்ட்போன், டிவி போன்ற டிஸ்பிளே சாதனங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். அதற்க்குமேல் ஸ்கிரீன் டைம் இருப்பது பாதுகாப்பானதில்லை (danger of exceeding screen time usage) என்றும் எச்சரித்துள்ளனர். நீண்ட நாள் மற்றும் நீண்ட நேர ஸ்கிரீன் டைம் பழக்கம் மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்.

அடுத்தபடியாக, 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை ஸ்கிரீன் டைம் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மேல் பயன்படுத்தும் குழந்தைகள் நிச்சயமாக சிறு வயதிலேயே மன அழுத்தம், உடன் ஆரோக்கியம்,தூக்கமின்மை, கண் பார்வை கோளாறு போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஸ்கிரீன் டைம் நேரத்தை கட்டுப்படுத்த பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று நிபுணர்கள் அறிவுரைத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
How long can children and young people use mobile phones Parents be careful This is very dangerous to your kids
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X