ஏர்டெல், ஐடியாவிடம் கிடையாது, ஆனால் ரிலையன்ஸிடம் உள்ளது. அதென்னது.?

By Muthuraj
|

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக போட்டி முனைப்பில் செயல்படும் பிற ஆப்ரேட்டர்கள் தொடங்கி அதன் வாடிக்கையாளர்கள் - வாடிக்கையாளராக இல்லாதவர்கள் என அனைவருமே ரிலையன்ஸ் நிறுவனத்தின், அதன் நெட்வெர்க்கின் பலத்தை நன்றாக உணர வேண்டிய காலம் இது.

விளம்பரம் செய்யவே கோடி கோடியாய் செலவு செய்யும் ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் நேற்று வரையிலான பிரபல ஆப்ரேட்டர்களாய் நிலைத்திருந்தது போலெ ஒரு ஞாபகம், ஆனால் இன்றோ - எங்கு திரும்பினால் ரிலையன்ஸ..! எப்படி ரிலையன்ஸ் இதை சாத்தியப்படுத்தியது. ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிடம் கிடையாது அப்படி என்ன ரிலையன்ஸிடம் உள்ளது. அதன் பலம் என்ன..?

ரிலையன்ஸ் பலம் #01

ரிலையன்ஸ் பலம் #01

அனைத்து மண்டலங்களிலும் 4G ஸ்பெக்ட்ரம் கொண்ட ஒரே நிறுவனம், ரிலையன்ஸ் தான்.

22  ஸ்பெக்ட்ரம் மண்டலங்கள் :

22 ஸ்பெக்ட்ரம் மண்டலங்கள் :

2010-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள 22 ஸ்பெக்ட்ரம் மண்டலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் வெற்றி பெற்றது மற்றும் இப்போது வரையிலாக நெட்வொர்க் உள்கட்டமைப்பில் ரிலையன்ஸ் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

4ஜி சேவை :

4ஜி சேவை :

ஜியோ அனைத்து 22 வட்டாரங்களிலும் 4ஜி சேவைகளை வழங்கும் திறன் உள்ளது, பார்தி ஏர்டெல் 15 இடங்களிலும், ஐடியா 10 இடங்களிலும் மற்றும் வோடபோன் 8 இடங்களிலும் மட்டுமே வழங்க முடியும். ஆக, இந்தியா முழுவதும் 4ஜி சேவை வழங்க தகுந்த ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் தான்.

ரிலையன்ஸ் பலம் #02

ரிலையன்ஸ் பலம் #02

இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க்..!

 விளம்பரங்கள் :

விளம்பரங்கள் :

இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி நெட்வெர்க் என்ற விளம்பரங்கள் எல்லாம் உண்மையில் உங்கள் மூளைக்குள் அப்படி ஒரு எண்ணத்தை பதிவு செய்யவே திணிக்கப் படுகின்றனவே தவிர உண்மை அல்ல.

 கவரேஜ் :

கவரேஜ் :

உண்மை என்னவென்றால் ஜியோ சுமார் 1.02 லட்சம் கிராமங்களை சென்றடைகிறது மற்றும் அவர்களின் முதல் கட்ட நடவடிக்கையின் கீழ் 18,000 நகரங்களில் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் பெறுகிறது. ஆக, ரிலையன்ஸ் தான் இந்தியாவின் நிஜமான மிகப்பெரிய 4ஜி நெட்வெர்க் ஆகும்.

ரிலையன்ஸ் பலம் #03

ரிலையன்ஸ் பலம் #03

மொத்தம், 250,000-க்கும் அதிகமான கிமீ நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல்-நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் நிறுவியுள்ளது.

ஒப்பந்தம் :

ஒப்பந்தம் :

பெரும்பாலான மற்ற நிறுவனங்களிடம், ரிலையன்ஸ் அளவிலான பைபர் நெட்வொர்க்குகளில் சொந்தமாக கிடையாது, ஒப்பந்தம் மூலமே பிற பைபர் நெட்வெர்க்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குகின்றன.

ரிலையன்ஸ் பலம் #04

ரிலையன்ஸ் பலம் #04

வெறும் முன்னோக்கு பற்றிய விஷயங்களை வைத்து மட்டுமே இந்த திட்டத்தில் ரூ.150,000 கோடி என்ற ஒரு மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ளது

ரிலையன்ஸ் பலம் #05

ரிலையன்ஸ் பலம் #05

ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இரண்டு சர்வதேச நீர்மூழ்கி கேபிள் லேண்டின்ங் ஸ்டேஷன்கள் சொந்தமாக உள்ளது.

 ரிலையன்ஸ் பலம் #06

ரிலையன்ஸ் பலம் #06

மற்றும் சூழல் நட்பு டவர்கள், அழைப்பிகளை டேட்டாக்களாக்கும் வோல்ட் (VoLTE) தொழில்நுட்பம், புதுமையான அல்லது முன்மாதிரியான விலை.

ரிலையன்ஸ் பலம் #06

ரிலையன்ஸ் பலம் #06

1 ஜிபிஎஸ் என்ற உச்சக்கட்டஇணைய வேகத்தை வழங்கும் தீவிர அதிவேக ஃபைபர் இணைப்பு திறன் என ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனத்திடம் இல்லாத பல பலங்களை ரிலையன்ஸ் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
How likely is that Reliance Jio 4G will revolutionize the internet market in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X