நீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா?

குறைந்த செலவில் அதிக டேட்டா ஸ்டோரேஜ் விரும்புவோர் ஹார்டு டிஸ்க் டிரைவ்களை தேர்வு செய்வர்.

|

உலகில் ஹார்டு டிஸ்க் டிரைவ்கள் (HDD) பயன்பாட்டுக்கு வந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போதைய கம்ப்யூட்டர்களில் சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SDD) அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவில் அதிக டேட்டா ஸ்டோரேஜ் விரும்புவோர் ஹார்டு டிஸ்க் டிரைவ்களை தேர்வு செய்வர்.

சிஸ்டத்துடன் உங்களது பயன்பாடு ஃபைல்கள் எத்தனை வேகத்தில் பரிமாற்றப்படுகின்றன மற்றும் எத்தனை ஃபைல்களை ஒரே சமயத்தில் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை வைத்தே முடிவு செய்ய முடியும்.

உங்களது ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், சாலிட் ஸ்டேட் டிரைவ்கள் மற்றும் இதர ஸ்டோரேஜ் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்:

வழிமுறைகள்

வழிமுறைகள்

1) விண்டோஸ் 10 சிஸ்டம் விவரங்கள்

2) மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முந்தைய வெர்ஷன்கள்

3) ஐ.பி.எம். பயனர்கள்

4) ஆர்.பி.எம். வேகத்தை நிர்ணயிப்பது

5) மூன்ராம் தரப்பு பயன்பாடுகள்

6) மற்ற டிஸ்க் பயன்பாடுகள்

7) மற்ற வழிமுறைகள்

விண்டோஸ் 10 சிஸ்டம் விவரங்கள்

விண்டோஸ் 10 சிஸ்டம் விவரங்கள்

விண்டோஸ் 10 சிஸ்டம் இன்ஃபர்மேஷ் யூடிலிட்டி (System Information Utility) மூலம் உங்களது ஹார்டுவேர் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

- ஸ்டார்ட் மெனு செல்லவும்.

- மெனுவின் W, ஆப்ஷனில் உள்ள Windows Administrative Tools அம்சத்தை க்ளிக் செய்யவும்.

- இனி சிஸ்டம் இன்ஃபர்மேஷன் (System Information) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.


ரன் பாக்ஸ் பயன்படுத்தியும் சிஸ்டம் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்:


- கீபோர்டில் Win + R பட்டனை க்ளிக் செய்யவும்.


- இனி ரன் பாக்ஸ் இல் msinfo32 என டைப் செய்யவும்.

c) இறுதியில் OK, அல்லது Enter பட்டனை க்ளிக் செய்யவும்.


சிஸ்டம் இன்ஃபர்மேஷன் விண்டோவின் இடதுபுறத்தில் ஹார்டுவேர் பிரிவுகள் காணப்படும். இங்கு காம்போனென்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்டோரேஜ் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து டிரைவ், டிஸ்க் அல்லது நீங்கள் பார்க்க விரும்பும் பிரிவை க்ளிக் செய்யவும்.

முந்தைய விண்டோஸ் வெர்ஷன்கள்

முந்தைய விண்டோஸ் வெர்ஷன்கள்

நீங்கள் முந்தைய விண்டோஸ் வெர்ஷனை பயன்படுத்தினால், கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

- ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து ப்ரோகிராம்ஸ் "Programs" ஃபோல்டரை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து, அக்சஸரீஸ் "Accessories" ஆப்ஷனில் சிஸ்டம் இன்ஃபர்மேஷன் "System Information" அல்லது சிஸ்டம் டூல்ஸ் "System Tools" ஃபோல்டரை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி சிஸ்டம் இன்ஃபர்மேஷன் "System Information" ஃபைலை திறக்க வேண்டும்.


- சிஸ்டம் இன்ஃபர்மேஷன் விண்டோவில் உள்ள + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து ஸ்டோரேஜ் "Storage" ஆப்ஷன் அருகில் இருக்கும் "+" பட்டனை க்ளிக் செய்து டிரைவ்ஸ் "Drives" பட்டனை க்ளிக் செய்யவும். விண்டோவின் வலது புறத்தில் ஹார்டு டிரைவ் கொள்ளலவு, சீரில் நம்பர் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

ஐ.பி.எம். பயனர்கள்

ஐ.பி.எம். பயனர்கள்

ஐ.பி.எம். பயனர்கள் ஹார்டு டிரைவ் சார்ந்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள கம்ப்யூட்டரின் CMOS செட்டப் செல்ல வேண்டும். இதில் ஹார்டு டிரைவின் சீரியல் நம்பர், மாடல் நம்பர், சிலிண்டர்கள், ஹெட்கள், செக்டர்கள் மற்றும் ஹார்டு டிரைவ் அளவு உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

ஹார்டு டிரைவ் வேகம் அல்லது ஆர்.பி.எம்.
ஹார்டு டிரைவின் ஆர்.பி.எம். அறிந்து கொள்ள உற்பத்தியாளர் மற்றும் ஹார்டு டிரைவ் மாடலை பார்க்க வேண்டும். பின் உற்பத்தியாளரின் வலைத்தள பக்கத்தில் ஹார்டு டிரைவின் ஆர்.பி.எம். விவரங்களை பார்க்கலாம்.


சில ஹார்டு டிரைவ் உற்பத்தியாளர்கள் ஹார்டு டிரைவ் ஆர்.பி.எம். விவரங்களை பட்டியலிடுகின்றன. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிரைவை வெளியே எடுத்து அதில் உள்ள ஸ்டிக்கரில் ஆர்.பி.எம். பட்டியலிடப்பட்டிருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பு பயன்பாடுகள்

மூன்றாம் தரப்பு பயன்பாடுகள்

கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிரைவ் விவரங்களை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டு இருக்கும் இலவச மென்பொருள்களை பயன்படுத்தியும் ஹார்டு டிரைவ் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மற்ற டிஸ்க் பயன்பாடுகள்
சில டிஸ்க் பயன்பாடுகள் ஹார்டு டிரைவ் திறனை பயனருக்கு வழங்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருக்கும். இவை பயனர் எதிர்பார்க்கும் கூடுதல் விவரங்களை வழங்கும்.

மற்ற வழிமுறைகள்
ஹார்டு டிஸ்க் வாங்கும் போதோ அல்லது கம்ப்யூட்டரில் இருந்து வெளியே எடுத்தோ அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை பார்த்து அதன் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to know your hard disk type: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X