ISRO கணக்கு தப்பல.. 4 வினாடி தாமதத்தில் குறிவைத்து ஏவப்பட்ட சந்திரயான்-3.. 1 வருடம் கழித்து வெளியான உண்மை..
இஸ்ரோ (ISRO) சமீபத்தில் வெளியிட்ட அதன் ரிப்போர்ட்டில், கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தாலும் கூட, சந்திரயான்-3 விண்கலம் நிலவை அடையும் முன்பே விண்வெளியில் தொலைந்து போயிருக்க கூடும் என்று ISRO தெரிவித்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
என்னது? சந்திரயான்-3 நிலவை அடையும் முன்பே விண்வெளியில் தொலைத்து போய்யிருக்குமா? என்று உங்களில் சிலர் அதிர்ச்சியாக பார்ப்பது எங்களுக்கு தெரிகிறது. எங்களுக்கும் இந்த செய்தியை முதலில் கேட்டவுடன் அப்படி தான் இருந்தது. இஸ்ரோவின் தகவல் படி, 4 வினாடிகள் காலம் தாமதிக்கப்பட்டு சந்திரயான்-3 விண்ணில் சரியான நேரத்தில் ஏவப்படவில்லை என்றால், இன்று அது விண்வெளியில் எங்கோ ஒரு மூலையில் தொலைத்திருக்கக்கூடும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

ISRO கணக்கு தப்பல.. 4 வினாடி தாமதத்தில் உயிர்தப்பிய சந்திரயான்-3.. என்ன காரணம்?
ஆனால், இஸ்ரோ வெளியிட்டுள்ள அதன் முழு ரிப்போர்ட்டையும் படித்த பிறகு தான், உண்மை என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது மக்களே. உண்மை தெரிந்த பிறகு, நமது இஸ்ரோ மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளப்போகிறீர்கள். குறிப்பாக, இஸ்ரோ விஞ்ஞானிகளின் கணிப்பு எவ்வளவு துல்லியமானது என்பதை கண்டு நீங்கள் வியப்படைய போகிறீர்கள் மக்களே.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை நிறுவிய சந்திரயான்-3 வெற்றிக்கு பின்னால், ஒரு 4 வினாடி கால தாமதம் தான் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே அது தான் உண்மை. வெறும் 4 வினாடி காலம் தாமதிக்கப்பட்டு, அதற்கு பிறகு, இஸ்ரோவின் சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் ஏவிய காரணத்தினால் தான் உயிர் தப்பித்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆம், இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்தபடி, 4 வினாடிகள் தாமதிக்கப்பட்ட பிறகே சந்திரயான்-3 விண்வெளி ஏவப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்திராயன்-3 மயிரளவு இடைவெளியில் விண்வெளி குப்பையில் மோதாமல் உயிர் தப்பித்துள்ளது என்று இஸ்ரோ அதன் ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்த உண்மை கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கு பிறகு உலகிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி குப்பைகளுடன் 23 மோதல்களை கடந்த சந்திரயான்-3.. கணிப்பின் உச்சம் ISRO:
கடந்த வருடம், ஜூலை 14, 2023 இல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பே, இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை எப்படி காப்பாற்றினார்கள் என்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தற்போது வெளிப்படுத்தியுள்ளது. இஸ்ரோ தனது சமீபத்திய அறிக்கையில், சந்திராயன்-3 விண்கலம் சுமார் 23 மோதல் விபத்தை சந்திக்க நேரிடும் என்று முன்பே இஸ்ரோ அதிகாரிகள் கணித்துள்ளனர்.
23 மோதல்களை எப்படி தவிர்ப்பு என்பதை பற்றியும் இஸ்ரோ அதிகாரிகள் மிகவும் துல்லியமாக கணக்கிட்டு சந்திராயன்-3 விண்கலத்தின் ஏவுதல் நேரத்தை சரியாக நிர்ணயித்துள்ளார்கள். இருப்பினும், சந்திராயன்-3 விண்ணில் பாய தயாராக இருந்த நிலையில், இஸ்ரோவின் நுணுக்கமான கண்காணிப்பு அமைப்பு மற்றொரு சாத்தியமான அபாயத்தைக் கண்டறிந்து அதிகாரிகளை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திராயன்-3 இன் முக்கியமான ஆரம்ப சுற்றுப் பாதையுடன் குறுக்கிடக்கூடிய அதே பாதையில் விண்வெளி குப்பைகளின் துண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த குப்பைகள், முந்தைய விண்வெளி பயணங்களின் எச்சங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் பொருள்கள் பயணிக்கும் அதிக வேகத்தின் காரணமாக, இது சந்திராயன்-3 திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டறிந்தவுடன் விரைவாகச் செயல்பட்ட இஸ்ரோவின் பணிக் கட்டுப்பாட்டுக் குழு, ஏவுதலை நான்கு வினாடிகள் தாமதப்படுத்த முடிவு செய்தது. துல்லியமான 4 வினாடி தாமதத்தினால், சந்திராயன்-3 மிகவும் சரியான நேரத்தில் விண்ணில் பாய்ந்து, வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. இது இஸ்ரோவின் துல்லியமான மற்றும் செயல்திறன் மிக்க விண்வெளி மேலாண்மையை நமக்கு தெளிவாக காண்பித்துள்ளது. இந்தியர்களின் கணிப்பு திறனை பற்றி நாம் உண்மையில் பெருமிதம் கொள்ளவேண்டிய தருணம் இதுவாகும்.


Click it and Unblock the Notifications








