Google Pay-ல் பாக்கெட் மணி அம்சம்.. கிளிக் செய்தால் பணம் போயிடுமா? என்ன நடந்தது? இதோ முழு விவரம்..
கூகுள் பே செயலியை இந்தியா முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் சில நொடிகளில் பணம் அனுப்ப முடியும். அதேபோல் இந்த செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள் வகையில் இருக்கிறது.
இந்நிலையில் கூகுள் பே செயலியில் People பிரிவில் முதல் வரிசையில் Pocket Money என்ற அம்சம் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த Pocket Money ஐகான் குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் இந்த Pocket Money ஐகானைத் தொட்டால், வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காலியாகி விடும் என்று கூறுகிறார். மேலும் இது ஒரு மோசடி வலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கூகுள் பே செயலியில் உள்ள இந்த பாக்கெட் மணி (Pocket Money) அம்சம் எந்தவித மோசடியும் இல்லாத அம்சம் ஆகும். அதாவது BHIM செயலியில் இருப்பது போல யூபிஐ சர்கிள் சேவை தான் தற்போது கூகுள் செயலில் பாக்கெட் மணி என்ற பெயரில் வந்துள்ளது. அதுவும் இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாத உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் செய்ய உதவ கொண்டு வரப்பட்ட சேவை ஆகும். இது வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
உதாரணமாக, முன்பு நாம் கல்லூரிக்குச் செல்லும் போது அம்மா, அப்பா கையில் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். அது அந்த காலம். ஆனால் தற்போது இந்த டிஜிட்டல் காலத்தில், கூகுள் பே செயலியில் உள்ள பாக்கெட் மணி வசதி மூலம் ஒருவருக்கு மாதத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று செட் செய்துவிட்டால், அவர்கள் அந்த அளவிற்குச் செலவு செய்துகொள்ளலாம்.
அதாவது உங்கள் மகள் அல்லது மகனுக்கோ ரூ.3000 பாக்கெட் மணியாக செட் செய்துவிட்டால், அவர்கள் இந்த ஆப்ஷனில் செலவு செய்யும் ரூ.3000 உங்கள் வங்கி கணக்கில் இருந்து செல்லும். அதேசமயம் பாக்கெட் மணி இவ்வளவு என்று செய்ய முடியாது என்பவர்கள் Approve Every Payment என்கிற விருப்பத்தை பயன்படுத்தலாம்.
குறிப்பாக இந்த ஆப்ஷனில் அவர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து செலவு செய்யும் ஒவ்வொரு பேமென்டுகளுக்கும் உங்களது ஒப்புதல் தேவை. அதுவும் பாக்கெட் மணி அளவை செட் செயகிறீர்களோ, அப்ரூவ் எவ்ரி பேமென்ட் (Approve Every Payment) கொடுக்கிறீர்களோ, எதுவாக இருந்தாலும் முதலில் உங்களிடம் இருந்து நீங்கள் யாருக்கு பாக்கெட் மணி செட் செய்கிறீர்களோ அவர்களுக்கு ஒரு இன்வைட் செல்லும். அவர்கள் இதற்கு accept கொடுத்த உடன் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செல்ல ஆரம்பிக்கும்.
பாக்கெட் மணி வசதியின் முக்கிய கட்டுப்பாடுகள்
1.ஒருவர் அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே பாக்கெட் மணி செட் செய்ய முடியும்.
2.குறிப்பாக பாக்கெட் மணி யாருக்கு செட் செய்கிறோமோ, அவர்களின் மொபைல் நம்பர் உங்கள் போனில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் அவர்களும் கூகுள் பே ஆப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.
3.குறிப்பிட்ட தொகை செட் செய்யப்பட்டதும், அதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பேமென்ட்டுகளையும் செட் செய்தவர்கள் எளிதாக டிராக் செய்ய முடியும்.
4.இந்த பாக்கெட் மணி அம்சத்தில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு பேமெண்ட்களும் உங்கள் கணக்கில் இருந்து தான் கழிக்கப்படும்.

5.நீங்கள் இந்த பாக்கெட் மணி வசதியில் மாதம் மாதம் தொகையின் அளவை மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கூகுள் பே செயலி ஆனது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த செயலியில் மோசடியான ஒரு விஷயம் இருக்கவே இருக்காது.


Click it and Unblock the Notifications








