Home
News

CC போட்டு சாவடிக்கிறாங்களா? Google கொண்டு வந்த சாப விமோசனம்.. Gmail சேவைக்கு வந்த சூப்பர் அப்டேட்!

சிலருக்கு 1 மாதத்திற்கு 100 இமெயில்கள் கூட வராது. அவர்களுக்கும் கூகுள் கொண்டுவந்துள்ள இந்த லேட்டஸ்ட் ஜிமெயில் அப்டேட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் எப்போதும் போல.. தங்களுக்கு வரும் இமெயில்களை மொத்தமாக 'செலெக்ட்' செய்து அதை 'ரீட்' ஆக மாற்றிவிட்டு அல்லது அவைகளை மொத்தமாக 'டெலிட்' செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு தினமும் 30-40 இமெயில்கள் வரும் என்றால்.. சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் கொண்டுவந்துள்ள இந்த ஜிமெயில் அப்டேட்.. உங்களுக்கான ஒரு சாப விமோசமானாக இருக்கலாம்!

அதிலும் குறிப்பாக உங்களுக்கு வரும் இமெயில்கள் எல்லாமே பக்கம் பக்கமாக கன்டென்ட்டை கொண்டிருக்கும் என்றால்.. கிட்டத்தட்ட எல்லா இமெயில்களிலும் நீங்கள் சிசி செய்யப்படுவீர்கள் என்றால்.. கூகுளுக்கும், சுந்தர் பிச்சைக்கும் பெரிய கும்பிடு ஒன்றை போட்டுவிடவும். ஏனென்றால், ஒருவழியாக ஜிமெயில் சேவையில் ஏஐ பவர்டு சம்மரீஸ் பட்டன் (Gmail AI Powered Summaries Button) வெளியிடப்பட்டுள்ளது.

CC போட்டு சாவடிக்கிறாங்களா? Gmail சேவைக்கு வந்த சூப்பர் அப்டேட்!

பெயர் குறிப்பிடுவது போலவே, இது மிகவும் நீளமான இமெயில்களை படிக்கும் நேரத்தை மிச்சப்படுத்த உதவும் ஒரு ஏஐ அம்சமாகும். இந்த அம்சம் உங்களுக்கு வரும் மிகவும் நீளமான, அதிக கன்டென்ட்களை கொண்ட இமெயில்களில் நடக்கும் உரையாடல்களின் சுருக்கத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் தங்கள் இன்பாக்ஸிற்கு வரும் நீளமான இமெயில்களை, முழுவதுமாக படிக்காமல், ஏஐ உதவியுடன் அதில் உள்ள முக்கியமான விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் படிப்பதன் மூலம் நிறைய நேரத்தை மிச்சப்படுத்த முடியும். இது ஜிமெயில் வெப் சேவையில் உள்ள ஜெமினி சைட் பேனலின் ஒரு பகுதியாக உள்ளது.

9-டூ-5 வலைத்தளம் வழியாக பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டின்படி, இந்த அம்சத்திற்கான சம்மரைஸ் பட்டன் (Summarise Button) சிங்கிள்-த்ரெட் இமெயில்களில் தோன்றவில்லை. மாறாக குறைந்தது 2 ரெஸ்பான்ஸ்களை கொண்டிருக்கும் கான்வேர்ஷேஷன்களில் அணுக கிடைக்கிறது. இது மொத்த உரையாடல்களையும் சுருக்கவும், அதில் உள்ள முக்கியமான குறிப்புகளை தவறவிடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.

சம்மரைஸ் பட்டனை நீங்கள் கிளிக் செய்ததும், சில நொடிகளில் அது புல்லட் பாயிண்ட்ஸ் வடிவில் சம்மரியை உருவாக்குகிறது. இதற்கிடையில், கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி 1.5 ப்ரோ மூலம் இயங்கும் புதிய சைட் பேனல் அம்சத்தையும் வெப் ஜிமெயிலில் வெளியிடுகிறது.

ஏஐ கொண்டு இயங்கும் இந்த சைட் பேனல் ஆனது ஒரு இமெயிஸ் சீரீஸை சுருக்கவும், பதில்களை பரிந்துரைக்கவும், இமெயில்களை எழுதுவதற்கும் உதவம். மேலும் இன்பாக்ஸில் உள்ள இமெயில்கள் அல்லது கூகுள் டிரைவ் ஃபைல்களில் இருந்து குறிப்பிட்ட தகவலை கண்டறியவும் உதவும். ஜிமெயில் வெப்பில், மேல் வலது மூலையில் உள்ள ஜெமினி ஸ்பார்க்கிள் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் இந்த அம்சங்களை அணுகலாம்.

இதே சைட் பேனல் ஆனது கூகுள் டாக்ஸ் பயனர்களுக்கு சில உதவிகளை செய்யும். டாக்ஸ் சைட் பேனலில் உள்ள ஜெமினி டூல் ஆனது பயனர்களுக்கு கன்டென்ட்டை எழுதுவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தகவல்களை சுருக்கி, யோசனைகளை உருவாக்குவதற்கும், பிற ஃபைல்களின் அடிப்படையில் கன்டென்ட்டை உருவாக்குவதற்கும் உதவும்

கூகுள் ட்ரைவ்வை பொறுத்தவரை, இதே டூல் - ஒன்று அல்லது பல டாக்குமெண்ட்களை சுருக்கவும், ஒரு திட்டத்தை பற்றிய விரைவான உண்மைகளை வழங்கவும் மற்றும் பல டாக்குமெண்ட் கிளிக் செய்ய வேண்டிய அவசியமின்றி ஒரு தலைப்பின் கீழ் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் உதவும்.

கூகுள் ஸ்லைட்ஸ் சேவையில், இந்த அம்சம் புதிய ஸ்லைடுகளை உருவாக்கவும், கஸ்டம் படங்களை உருவாக்கவும், ப்ரெசன்ட்டேஷன்களை சுருக்கவும் உதவும். கூகுள் ஷீட்ஸ்ல் உள்ள சைட் பேனலின் கீழ், டேட்டாவை கண்காணிக்கவும் ஒழுங்கமைக்கவும் முடியும், விரைவாக அட்டவணைகளை உருவாக்கவும், பார்மூலாக்களை உருவாக்கவும் மற்றும்ஷீட்டில் சில குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான வழிகாட்டுதலை கோரவும் முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How Google Gemini AI Powered Summarise Button in Gmail Helps and Save Users From Long Emails
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X