ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபரிலும் அன்லிமிட்டெட் டேட்டா பெறுவது எப்படி?

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் மூலம் இலவச அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் மெசேஜ்களை டிசம்பர் 31, 2016 வரை வழங்குகின்றது.

ஆனால் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் 4ஜிபி டேட்டா மட்டுமே 4ஜி வேகத்தில் வழங்கப்படும், அதன் பின் வேகம் நொடிக்கு 128 கேபியாக மாறி விடும். இதனால் அன்லிமிட்டெட் தரவில் 4ஜி வேகம் முழுமையாக வழங்கப்படுவதில்லை.

பிரீவியூ சலுகையில் பயனர்கள் அன்லிமிட்டெட் டேட்டாவினை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே பயன்படுத்த முடிந்தது. இந்தச் சேவையில் வேகம் குறைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு வெல்கம் ஆஃபரிலும் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டாவினை பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போமா..

பிரீவியூ சலுகை

பிரீவியூ சலுகை

பிரீவியூ ஆஃபர் மூலம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையினை முழு வேகத்தில் பயன்படுத்த முடியும். தற்சமயம் வெல்கம் ஆஃபரில் 4ஜிபி வரை 4ஜி வேகத்திலும் அதன் பின் வேகம் நொடிக்கு 128 கேபியாக குறைக்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரீவியூ ஆஃபருக்கு மாற வேண்டும்

பிரீவியூ ஆஃபருக்கு மாற வேண்டும்

வெல்கம் ஆஃபரில் நிர்ணயம் செய்யப்பட்ட 4ஜிபி அளவை அதிகரிக்க வெல்கம் ஆஃபருக்கு மாறுவதே சரியான தீர்வு ஆகும். இவ்வாறு செய்யும் போது 4ஜிபி என்ற டேட்டா அளவு இல்லாமல் அன்லிமிட்டெட் டேட்டாவினை 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும்.

எளிய வழிமுறை

எளிய வழிமுறை

ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபரினை பிரீவியூ ஆஃபராக மாற்றியமைப்பது கடினமான விடயம் கிடையாது. எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இதனை செய்திட முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மைஜியோ ஆப்

மைஜியோ ஆப்

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து மைஜியோ ஆப்தனை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஆப்பினை அப்டேட் செய்யக் கூடாது. மைஜியோ ஆப்பினை மீண்டும் இன்ஸ்டால் செய்ததும் அதனைத் திறந்து மைஜியோ ஆப்பில் இருக்கும் அனைத்து ஆப்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

அனைத்து ஆப்களையும் இன்ஸ்டால் செய்ததும் வை-பை மற்றும் மொபைல் டேட்டாக்களை ஆஃப் செய்ய வேண்டும். பின் அனைத்து ஆப்களையும் க்ளோஸ் செய்து கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இனி மொபைலில் எவ்வித இண்டர்நெட் இணைப்பும் இன்றி மைஜியோ ஆப்பினை ஓபன் செய்ய வேண்டும். ஓபன் செய்யக் கோரும் பட்டனை கிளிக் செய்ததும் 'Get Jio SIM' என்ற ஆப்ஷன் கிடைக்கும் இதை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது சேவை பிரீவியூ சேவைக்கு மாறியிருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X