உங்கள் நெட்வெர்க்கில் டாக்டைம் மற்றும் டேட்டா கடன் பெறுவது எப்படி.?

|

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் ஏர்டெல் தொடங்கி சமீபத்தில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் ஆக்கிரமிப்பு நடத்திய ரிலையன்ஸ் ஜியோ வரையிலாக அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தங்களது ஒவ்வொரு சந்தாதாரரையும் மிக முக்கியமான ஒரு நபராகவே கருதுகிறது. ஆகையால் தான் வாடிக்கையாளர்களுக்கு மிக வசதியான பல சேவைகளையம், புதிய அம்சங்களையும் நெட்வெர்க் நிறுவனங்கள் வழங்குகின்றன.

அப்படியான ஒரு சேவை தான் - டாக்டைம் மற்றும் டேட்டா கடன் வழங்கும் அம்சம். அவசர நிலையில் இருக்கும் போது இந்த சேவை மூலம், சிறிய அளவிலான டாக்டைம் மற்றும் தரவு கடனை நீங்கள் பெற முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்துவதில் மூலம் அடுத்த ரீசார்ஜ் செய்யும் போது ரூ.1 அல்லது ரூ.2 என்ற குறைந்தபட்ச வட்டி விலையை நீங்கள் திருப்பி தர வேண்டியது இருக்கும்.

விவரம் :

விவரம் :

ப்ரீபெய்ட் ஜிஎஸ்எம் பயனாளிகளுக்கு மிக சிறந்த அம்சங்களில் ஒன்றான இந்த டாக்டைம் மற்றும் டேட்டா கடனை ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ், ஐடியா, ஏர்செல் ஆகிய நேர்வேர்ட் பயனர்கள் பெறுவது எப்படி என்ற விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் டாக்டைம் லோன்

ஏர்டெல் டாக்டைம் லோன்

உங்கள் ஏர்டெல் எண்ணில் ரூ.5/-க்கும் குறைவான பேலன்ஸ் இருப்பின் *141*10 # அல்லது 52141 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் ரூ.10/- டாக்டைம் கடனை நீங்கள் பெற முடியும். நீங்கள் உங்கள் எண்ணிற்கு அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது, குறிப்பிட்ட கடன் அளவை ஏர்டெல் எடுத்துக் கொள்ளும்.

ஏர்டெல் டேட்டா லோன்

ஏர்டெல் டேட்டா லோன்

*141*567# என்ற குறியீடுக்கு டயல் செய்ய உங்கள் எண்ணிற்கு 2 நாட்களுக்கு செல்லுபடியாகும் 50எம்பி டேட்டா வழங்கபப்டும் பின்னர் நீங்கள் அந்த எண்ணிற்கு அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது, ஏர்டெல் ரூ.15/- கழித்துக்கொள்ளும்.

வோடாபோன் டாக்டைம் லோன்

வோடாபோன் டாக்டைம் லோன்

1241 என்ற எண்ணை டயல் செய்தோ அல்லது 144 என்ற எண்ணிற்கு 'எஸ்எம்எஸ் கிரெடிட்' (SMS CREDIT) என்று மெசேஜ் செய்தோ அல்லது *111*10# என்ற எண்ணிற்கு டயல் செய்தோ சோட்டா கிரெடிட் மூலம் ரூ.10/- கடனை பெற்றுக்கொள்ளலாம் அடுத்தமுறை நீங்கள் தொலைபேசி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.13 கழித்துக்கொள்ளப்படும்.

வோடாபோன் டேட்டா லோன்

வோடாபோன் டேட்டா லோன்

வோடாபோன் டேட்டா கடன் பெற *111*10# என்ற எண்ணிற்கு டயல் செய்து 2 என்று பதில் அளிக்கவும், அல்லது சோட்டா கிரெடிட் தேர்வு செய்யவும் அல்லது 144 என்ற எண்ணிற்கு 'எஸ்எம்எஸ் கிரெடிட்' என்று குறுந்தகவல் அனுப்பவும். உங்களுக்கு 1 நாள் செல்லுபடியாகும் 30எம்பி டேட்டா வழங்கபப்டும் பின்னர் நீங்கள் அந்த எண்ணிற்கு அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது, வோடாபோன் ரூ.10/- கழித்துக்கொள்ளும்.

பிஎஸ்என்எல் டாக்டைம் கடன் குறியீடு

பிஎஸ்என்எல் டாக்டைம் கடன் குறியீடு

பிஎஸ்என்எல் டாக்டைம் கடன் பெற நீங்கள் 53738 என்ற எண்ணிற்கு 'எஸ்எம்எஸ் கிரெடிட்' என்ற குறுந்தகவல் அனுப்ப வேண்டும், அதன் மூலம் நீங்கள் ரோ.10/- கடன் பெறுவீர்கள். இதை நிகழ்த்திய 24 மணி நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்தால் ரூ.10/- திரும்பி செலுத்த வேண்டும் 24 மணி நேரம் தாண்டினால் ரூ.11 செலுத்த நேரிடும்.

ரிலையன்ஸ் டாக்டைம் கடன் குறியீடு

ரிலையன்ஸ் டாக்டைம் கடன் குறியீடு

ரிலையன்ஸ் இரண்டு டாக்டைம் கடன் தொகையை வழங்குகிறது. ரூ.5 கடன் தொகை பெற நீங்கள் *141*5# என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும் மற்றும் ரூ.10/- பெற *141*10# என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். மாற்றாக, நீங்கள் 51234 என்ற எண்ணிற்கு 'YCR' என்ற குறுந்தகவல் அனுப்பியும் கடன் பெறலாம்.

ஐடியா டேட்டா லோன்

ஐடியா டேட்டா லோன்

ஐடியா டேட்டா லோன் பெற 150*06# என்ற எனிற்கு டயல் செய்ய 25 எம்பி அளவிலான 2ஜி தரவு கடன் பெற பின் உங்களிடம் இருந்து ரூ.6/- திரும்பி பெறப்படும். *150*333# என்ற எண்ணிற்கு டயல் செய்வதின் மூலம் 35 எம்பி அளவிலான 3ஜி தரவு கடன் பெற பின் உங்களிடம் இருந்து ரூ.11/- திரும்பி பெறப்படும். ஐடியா கடன் தொகை வட்டி ஏதும் வசூலிப்பதில்லை.

ஏர்செல் டாக்டைம் கடன் குறியீடு

ஏர்செல் டாக்டைம் கடன் குறியீடு

உங்கள் ஏர்செல் பேலன்ஸ் ரூ.10/-க்கும் குறைவாக இருந்தால் *414# என்ற எண்ணிற்கு டயல் செய்ய அல்லது 12880 என்ற எண்ணிற்கு அழைக்க அல்லது 55414 என்ற எண்ணிற்கு 'எஸ்எம்எஸ் லோன் ' என்று அனுப்புவதன் மூலம் ரூ.10/- டாக்டைம் கடன் பெற முடியும். பின்னர் ரூ.12/- திருப்பி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தெரியுமா..? பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...! - அதை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..!

Best Mobiles in India

English summary
How to Get Talktime and Data Loans on Airtel, BSNL, Vodafone, Reliance and Idea Network. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X