ஜியோவின் ரூ.399/- பயன்படுத்துபவரா நீங்கள்.? 'போர்' அடிக்கலயா உங்களுக்கு.?

Written By:

நம்மில் பெரும்பாலானோர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் குறிப்பிட்ட ரூ.399/- என்கிற ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களாக உள்ளோம். ஏனெனில் நமக்கு தெரிந்த மற்றும் நமக்கு நன்கு பழக்கப்பட்ட ஜியோ திட்டத்தில் அதுதான் முதன்மை வகிக்கிறது.

ஜியோவின் ரூ.399/- பயன்படுத்துபவரா நீங்கள்.? போர் அடிக்கலயா உங்களுக்கு?

மூன்று மாத கால இலவச சலுகைகளை மொத்தம் இரண்டு முறை அனுபவித்த பின்னர் ரிலையன்ஸ் ஜியோவின் அதே மூன்றுமாத கால திட்டத்துடனேயே நாம் சிக்கிகொண்டுள்ளோம் என்றே கூறலாம். ஆனால் ஜியோ மிகவும் போட்டித்திறன் வாய்ந்த விலையிலான மொபைல் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வெள்ளம் போல் வழங்கிக்கொண்டே தான் இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
49 நாள் முதல் 91 நாட்கள் வரை

49 நாள் முதல் 91 நாட்கள் வரை

அப்படியாக, 49 நாள் முதல் 91 நாட்கள் வரை செல்லுபடியாகும் அதே சமயம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் திட்டங்களை தான் இங்கு தொகுத்துள்ளோம். ரூ.309/- தொடங்கி ரூ.509/- வரை ஜியோ வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ள திட்டங்களின் டேட்டா நன்மைகள் அதன் மற்றும் செல்லுபடி காலம் ஆகிய விவரங்களை பற்றி மட்டும் இங்கு காண்போம்.

ரூ.399 ரீசார்ஜ் பேக்.!

ரூ.399 ரீசார்ஜ் பேக்.!

முதலில் உச்சகட்ட பிரபலமான ரூ.399/- திட்டத்தின் நன்மைகளை பார்ப்போம். பின்னரே இதற்க்ய் சரியான மாற்றாக உள்ள இதர திட்டங்களை பற்றி காண்போம். இந்த ரூ.399/- ரீசார்ஜ் பேக் ஆனது, நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் மற்றும் மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவை அனுபவிக்கலாம்.

ரூ.309/- ரீசார்ஜ் பேக்.!

ரூ.309/- ரீசார்ஜ் பேக்.!

இந்த ரீசார்ஜ் திட்டமானது மொத்தம் 49 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 49 ஜிபி அளவிலான அதிவேக தரவை அனுபவிக்கலாம். 1ஜிபி என்கிற அதிவேக தரவானது 64 கேபிபிஸ் வேகத்தில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.459 ரீசார்ஜ் பேக்.!

ரூ.459 ரீசார்ஜ் பேக்.!

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் பேக் ஆனது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஜியோ வலைத்தளத்தின்படி, இந்த காலகட்டத்தில், சந்தாதாரர்கள் 1 ஜிபி அளவிலான தினசரி வரம்பில் மொத்தம் 84 ஜிபி அளவிலான அதிக வேக தரவை பெறுவார்கள்.

ரூ.499/- ரீசார்ஜ் பேக்.!

ரூ.499/- ரீசார்ஜ் பேக்.!

இந்த ரீசார்ஜ் திட்டமானது மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 91 ஜிபி அளவிலான அதிவேக தரவை அனுபவிக்கலாம். 1ஜிபி என்கிற அதிவேக தரவானது 64 கேபிபிஸ் வேகத்தில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.509/- ரீசார்ஜ் பேக்.!

ரூ.509/- ரீசார்ஜ் பேக்.!

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் பேக் ஆனது, வழக்கமான 1ஜிபி டேட்டாவிற்கு மாறாக 2ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டம் மொத்தம் 49 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஜியோ வலைத்தளத்தின்படி, இந்த காலகட்டத்தில், சந்தாதாரர்கள் 2 ஜிபி அளவிலான தினசரி வரம்பில் மொத்தம் 91 ஜிபி அளவிலான அதிக வேக தரவை பெறுவார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How To Get 1GB/2GB Data Per Day On Jio Prepaid Number. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot