வெறும் ரூ.93/-க்கு 10 ஜிபி ஜியோ 4ஜி தரவு பெறுவது எப்படி..?
தனது மலிவான மற்றும் கவர்ச்சிகரமான 4ஜி கட்டண திட்டங்களால் இந்திய தொலைதொடர்பு சந்தையில் புரட்சியியை உண்டாக்கிய ரிலையன்ஸ் ஜியோ சேவை வழங்குநர் 4ஜி சேவையுடன் சேர்த்து கூடுதலாக அதிவேக ஜிகாபைபர் (Gigafiber) பிராட்பேண்ட் சேவையை தொடங்கவுள்ளது என்ற வதந்தியும் நிலவுகிறது.
இதற்கிடையில், 4ஜி சேவைக்கு மாற விரும்புபவர்களுக்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பயனர்களை ஈர்க்கக்கூடிய வாய்ப்பொன்றை ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது.

சிடிஎம்ஏ :
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பயனர்கள் இந்த சிறப்பு சலுகையை பெற முடியும். அவர்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ன் சிடிஎம்ஏ சேவை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் என்றால் அந்தந்த வட்டாரங்களில் இருந்து ஜியோவின் கட்டண சேவைகளை தேர்ந்தெடுக்க முடியும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

10 ஜிபி :
அப்படியாக ஜியோ வழங்கும் ஒரு கவர்ச்சிகரமான சலுகை தான் ரூ.93/- திட்டம் இத்திட்டத்தின் ஆர்காம் சேவையில் இருந்து ஜியோ சேவைக்கு மாறும் பயனர்கள் 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெற முடியும் அதாவது ரூ.9/-க்கு 1 ஜிபி என்ற விலையில் தரவு கிடைக்கப்பெறும். நீங்கள் இருக்கும் வட்டத்தை பொருத்து ரூ,.97 வரையிலாக கட்டணம் மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

90 சதவீதம் பயனர்கள் :
இந்த வாய்ப்பை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த தினத்திலிருந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நெட்வொர்க்கில் உள்ள 8 மில்லியன் சந்தாதாரர்களில் 90 சதவீதம் பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை தேர்வு செய்துள்ளனர்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மலிவான கட்டண சேவை :
ரூ.93 முதல் ரூ.97/- வரையிலாக 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவின் மிக குறைந்த 4ஜி கட்டண திட்டங்களை கொண்டுள்ளதோடு சேர்த்து பிற சேவை வழங்குநர்களையும் மலிவான கட்டண சேவையின் பக்கம் தள்ளுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜிக்கு சேவை :
ஆர்காம் நிறுவனம் நாடு முழுவதும் சிடிஎம்ஏ சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது மற்றும் அதன் மூலம் இன்னும் அதிக பயனர்கள் ஜியோ திட்டத்தின் நலன்களை ரிலையன்ஸ் ஜியோ 4ஜிக்கு சேவைக்கு மாறுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடிகிறது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
போலி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை கண்டறிவது எப்படி..?


Click it and Unblock the Notifications