ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7, மரணித்த பின் பால் வாக்கர் மீண்டும் நடித்தது எப்படி?

Posted By:

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 திரைப்படம் படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் உயிரழந்தது அனைவரும் அறிந்ததே, அதன் பின் அவர் நடிக்க வேண்டிய பல காட்சிகள் படமாக்கப்பட இருந்தது பழைய செய்தி.

சமீபத்தில் வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகின்றது. இதில் பால் வாக்கர் முழு திரைப்படத்தில் காட்சியளிப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு பல சந்தேகங்களுக்கும் வழி வகுக்கின்றது.

இந்நிலையில் இறந்த பால் வாக்கர் திரைப்படம் முழுவதிலும் நடித்து எப்படி என்று தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஜிட்டல்

டிஜிட்டல்

பால் வாக்கர் இறந்த பின் மீதம் இருக்கும் காட்சிகளில் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

நிறுவனம்

நிறுவனம்

பீட்டர் ஜாக்சனின் WETA நிறுவனம் இப்பணிகளை செய்ததாக கூறப்பட்டாலும் இது குறித்து கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

பல திரைப்படங்களில் இறந்த நடிகர்களின் டிஜிட்டல் உருவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே முறை இப்படத்திலும் பின் பற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

தம்பி

தம்பி

பால் வாக்கரின் எடுக்கப்படாத காட்சிகளில் அவரது தம்பி கலெப் மற்றும் கோடி நடித்திருப்பதாகவும், சரியான கேமரா கோணம் மற்றும் லைட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு பால் வாக்கரை உருவாக்கியிருக்கின்றனர்.

க்ளாடியேட்டர்

க்ளாடியேட்டர்

ஆலிவர் ரீட் க்ளாடியேட்டர் திரைப்படத்திற்காக டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டார். இதே முறை பல ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி

வளர்ச்சி

மரணித்த ஒருவரை மீண்டும் திரையில் காண்பிக்கும் அளவு இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது பெருமைப்பட வேண்டிய விஷயமாகவே இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How ‘Furious 7’ Created a Digital Paul Walker. Here you will come to know How ‘Furious 7’ Created a Digital Paul Walker.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot