Home
News

ஐபோன் X வைட் ஸ்கிரீன் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

தொடர்ச்சியான அப்டேட்கள் மூலம் அதில் உள்ள உயர் ரக அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்பதில் ஆப்பிள் பெயர் பெற்ற நிறுவனமாக அறியப்படுகிறது.

உலகின் அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்றாக ஐபோன் X இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. தொடர்ச்சியான அப்டேட்கள் மூலம் அதில் உள்ள உயர் ரக அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்பதில் ஆப்பிள் பெயர் பெற்ற நிறுவனமாக அறியப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புத்தம் புதிய இயங்குதளத்தை வழங்குவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமாக இருக்கிறது.

ஐபோன் X வைட் ஸ்கிரீன் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோன்களை 30 மடங்கு வேகமாக இயங்க வழி செய்யும் என தெரிவித்துள்ளது. புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்காக வழங்கப்படுகிறது. புதிய இயங்குதளம் பயனர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குவதோடு, சில பிரச்சனைகளையும் வழங்குகிறது.

புதிய ஐ.ஓ.எஸ். 12 பல்வேறு ஐபோன்களுக்கும் பொருந்தும் என்பதால், இதில் ஒவ்வொரு மாடலிலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் ஐபோன் X பயனர்களுக்கு சற்றே நீள்கிறது. ஐமெசேஜ்கள் தவறானவர்களுக்கு செல்வதில் துவங்கி, சார்ஜிங் கோளாறு, ஸ்கிரீன் வாஷ் அவுட், பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவது, செயலிகள் சீராக வேலை செய்யாமல் போவது என பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இவ்வாறு ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளை திரை ஏற்படுவது. இவ்வாறு ஆகும் போது திரையில் சாட்களோ அல்லது கான்டாக்ட்களோ தெரியாது. வழக்கம் போல் ஐபோன் சீராக வேலை செய்தாலும், நோட்டிஃபிகேஷன்களை தொடும் போது திரை முழுக்க வெள்ளை நிறத்தில் மாறிவிடும். இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

ஐபோன் X வைட் ஸ்கிரீன் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

வழிமுறை 1: உங்களது ஐபோன் X மாடலை அன்லாக் செய்யவும்.

வழிமுறை 2: மெயின் மெனு செல்ல வேண்டும்.

வழிமுறை 3: வாட்ஸ்அப் ஐகானை அழுத்தி பிடிக்க வேண்டும்.

வழிமுறை 4: திரையில் தோன்றும் பாப்-அப்பில் உள்ள சிறிய கிராஸ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 5: இவ்வாறு செய்ததும் உங்களது ஐபோன் Xஇல் வாட்ஸ்அப் அன்-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்.

வழிமுறை 6: இனி உங்களது ஐபோன் X-ஐ ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

வழிமுறை 7: ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப்-ஐ தேடி, மீண்டும் அதனை ஐபோன் Xஇல் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் செயலியை ரீஇன்ஸ்டால் செய்ததும், ஐபோன் அல்லது கிளவுட்டில் இருந்து முழு பேக்கப்பை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.

ஐபோன் X வைட் ஸ்கிரீன் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

இதே பிரச்சனையை உங்களது ஐபோன் Xஇல் இருக்கும் மற்ற செயலிகளிலும் ஏற்பட்டால், இதே வழிமுறைகளின் மூலம் சரி செய்து கொள்ளலாம். மற்ற செயலிகளில் இவ்வாறு செய்யும் போது செயலியை ரீசெட் செய்தாலே போதுமானது.
Best Mobiles in India

English summary
How to fix white screen issue in iPhone X: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X