Home
News

5ஜி சேவையை பற்றி கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.!

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக 5ஜி சேவை ஆனது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

5ஜி எனப்படும்

அதேசமயம் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறன்றன. அதுவும் ஒரு சில நிறுவனங்கள் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை
கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

1ஜி சேவையானது

5ஜி சேவை என்று கூறப்படும் போது முதலில் நாம் நினைப்பது வேகம் தான், அதன்படி Gigabits-per-second (Gbps)வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும். அதாவது 1ஜி சேவையானது வெறும் கால் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அடுத்து 2ஜி சேவையான டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டது. அதன்பின்பு 3ஜி சேவையில் கால் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்எம்எஸ் என அனைத்தும் பயன்படுத்த முடிந்தது. மேலும் 4ஜி சேவையானது சிறந்த இன்டர்நெட் வேகத்தை கொடுத்தது, இதன் மூலம் வீடியோ கால் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மிகவும் அருமையாக பயன்படுத்த முடிந்தது.

வரும் 5ஜி சேவையானது 4ஜி விட

ஆனால் இனிவரும் 5ஜி சேவையானது 4ஜி விட 100 மடங்கு வேகத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் இப்போது பயன்படுத்தும் 4ஜி சேவை ஆனது Mbps வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனவே விரைவில் வரும் 5ஜி சேவையானது வேகமாக இணையத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

5ஜி சேவையில்

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 4ஜி வேகத்தில் ஒரு முழு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய 7 அல்லது 8 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த 5ஜி சேவையில் மிகவிரைவில் அதாவது சில வினாடிகளில் டவுன்லோடு செய்ய முடியும்.

5ஜி தொழில்நுட்பத்தினால்

5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும்,வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள். ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்துதுறைகளிலும்
ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் புகுத்துவதன்

5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.

ர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட்

குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.

Best Mobiles in India

English summary
How fast is 5G speed compared to 4G service: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X