கூகுள் கிரோமில் உள்ள லாகின் டேட்டா மற்றும் பாஸ்வேர்டுகளை பேக்அப் செய்ய வேண்டுமா?

மேலே குறிப்பிட்டுள்ள பெறப்படும் CSV கோப்பை, யார் வேண்டுமானாலும் அணுக முடியும் என்பதால், அது பாதுகாப்பானது அல்ல. எனவே அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைப்பது நல்லது.

|

நீங்கள் சேமித்து வைத்துள்ள எல்லா லாகின் விவரங்களையும் வேறொரு பிரவுஸரில் இயக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் எல்லா பாஸ்வேர்டுகளையும் பேக்அப் எடுக்க வேண்டும் என்றோ விரும்புகிறீர்களா? இந்த விருப்பத்திற்கு இப்போது கூகுள் நிறுவனம் தீர்வை அளித்துள்ளது.

கூகுள் கிரோமில் உள்ள இந்த அம்சம் தெரியுமா?

உங்கள் லாகின் விவரங்களுடன் சேமித்து வைத்துள்ள எல்லா பாஸ்வேர்டுகளையும், தொடர்பு பேக்அப் கோப்பு போல பெற்று கொள்ளும் வசதியை, கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் கிரோமின் நவீன புதுப்பிப்பில், இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தங்களின் எல்லா இணைய பாஸ்வேர்டுகளையும் ஒரு CSV (கமா மூலம் பிரிக்கப்படும் மதிப்புகள்) கோப்பு மூலம் பெற முடியும். ஒரு பிரவுஸரில் இருந்து இன்னொரு பிரவுஸருக்கு மாறி செல்லும் போது, இந்த லாகின் விவரங்கள் பெரிதும் பயன்படும்.


சேமிக்கப்பட்ட எல்லா இணைய பாஸ்வேர்டுகளையும் எப்படி பெறுவது என்று நீங்கள் வியந்தால், இதோ அதற்கான வழிமுறைகள்:

கூகுள் கிரோமில் உள்ள இந்த அம்சம் தெரியுமா?

முதல் காரியம் முதலில்:

கீழ்க்காணும் படிகளைச் செய்யும் முன், சில காரியங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

• மேலே குறிப்பிட்டுள்ள பெறப்படும் CSV கோப்பை, யார் வேண்டுமானாலும் அணுக முடியும் என்பதால், அது பாதுகாப்பானது அல்ல. எனவே அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைப்பது நல்லது.

• இந்த CSV கோப்பை, மைக்ரோசாஃப்ட் எக்ஸல் அல்லது கூகுள் ஸ்ப்ரேட்ஷீட்ஸ் பயன்படுத்தி பயனர்கள் அணுகலாம்.

• பல்வேறு பிரபல பாஸ்வேர்டு மேனேஜர்களைப் பயன்படுத்தி, லாகின் தரவைப் பெறலாம்.

கூகுள் கிரோமில் உள்ள இந்த அம்சம் தெரியுமா?

முன் தேவைகள்:

• கூகுள் கிரோமின் (பதிப்பு 66) நவீன பதிப்பு

பின்பற்ற வேண்டிய படிகள்:

கூகுள் கிரோமில் உள்ள இந்த அம்சம் தெரியுமா?

கூகுள் கிரோமில் இருந்து பாஸ்வேர்டுகளைப் பெற

1. உங்கள் PC அல்லது மேக் மூலம் கூகுள் கிரோமை திறக்கவும்.

2. மேலே வலது முனையில் தெரியும் மூன்று கிடைமட்டமான புள்ளிகள் மீது கிளிக் செய்யவும்.

3. அமைப்புகளுக்கு செல்லவும்.

4. கீழே உருட்டி, மேம்பட்ட தேர்வுகள் (அட்வான்ஸ்டு ஆப்ஷன்) மீது கிளிக் செய்யவும்.

5. பாஸ்வேர்டு அண்டு ஃபார்ம்ஸ் பிரிவில் மேனேஜ் பாஸ்வேர்டை தேடவும்.

6. மேனேஜ் பாஸ்வேர்ட்ஸ் பிரிவில் உள்ள மூன்று கிடைமட்ட வரிசையில் உள்ள புள்ளிகளின் மீது கிளிக் செய்யவும்.

7. எக்ஸ்போர்ட் பாஸ்வேர்ட்ஸ் தேர்வு மீது கிளிக் செய்யவும்.

8. எக்ஸ்போர்ட் பாஸ்வேர்ட்ஸ் தேர்வில் உள்ள பாப்அப் மீது மீண்டும் கிளிக் செய்யவும்.

9. உங்கள் PC அல்லது மேக் தொடர்பான உங்கள் லாகின் விவரங்களை அளித்து, உங்கள் அடையாளத்தை இங்கு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

10. சேமிக்க வேண்டிய இருப்பிடத்தை தேர்வு செய்து, உங்களின் எல்லா பாஸ்வேர்டுகளையும் வெற்றிகரமாக பெற, சேமிக்கவும் என்பதன் மீது கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
How to export your passwords and login data from Google Chrome: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X