Home
News

உங்களது லின்க்டுஇன் டேட்டாவை முழுமையாக டவுன்லோடு செய்வது எப்படி?

லிங்க்டுஇன் சேவை பணிரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தளமாக இருக்கிறது.

லிங்க்டுஇன் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியது மிகமுக்கிய முடிவு. மேலும் இதற்கென 2620 கோடி அமெரிக்க டாலர்களை செலவிட்டது மிகப்பெரிய திட்டம் ஆகும்.

லிங்க்டுஇன் சேவை பணிரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தளமாக இருக்கிறது. சுமார் 43.3 கோடி பயனர்களை கொண்ட லிங்க்டுஇன் தளத்தில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டணம் செலுத்தி சேவையை பயன்படுத்துகின்றனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆஃபீஸ் சேவையை சுமார் 120 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் சமூக வலைத்தள நோக்கில் ஃபேஸ்புக், லிங்க்டுஇன் மற்றும் இதர தளங்களை நாட வேண்டிய சூழலில் இருக்கிறது.

உங்களது லின்க்டுஇன் டேட்டாவை முழுமையாக டவுன்லோடு செய்வது எப்படி?

அந்த வகையில் லிங்க்டுஇன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு 43.3 கோடி பேர் பயன்படுத்தும் சமூக தளத்திற்கு வழிசெய்கிறது. அலுவல் ரீதியிலான அம்சங்கள் நிறைந்த லிங்க்டுஇன் மைக்ரோசாஃப்ட் வழங்கி வரும் இதர சேவைகள் மற்றும் மென்பொருள்களுக்கு ஒற்றுப்போகும்.

இருநிறுவனங்கள் இணைப்பு மூலம் லிங்க்டுஇன் சேவையில் அதிகப்படியான மைக்ரோசாஃப்ட் செயலிகளை வழங்க முடியும். லிங்க்டுஇன் தளத்தில் நீங்கள் பதிவு செய்திருக்கும் விவரங்கள் மைக்ரோசாஃப்ட் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு சப்போர்ட் செய்யும்.

உங்களைப் பற்றி லிங்க்டுஇன் தளத்தில் இருக்கும் டேட்டா விவரங்களை அறிந்து கொள்ள நிங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

1) லிங்க்டுஇன் சென்று ப்ரோஃபைல் படத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

2) செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷனை டிராப்-டவுன் மெனுவில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

3) பிரைவசி டேப் க்ளிக் செய்ய வேண்டும். இதில் How LinkedIn uses your data ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4) எந்தந்த தகவல்கள் டவுன்லோடு செய்யப்பட வேண்டும், எவற்றை டவுன்லோடு செய்யக் கூடாது என்ற விவரங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இதற்கு உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஆப்ஷன்களை செக்பாக்ஸ் மூலம் தேர்வு செய்யலாம். உங்களுக்கு டவுன்லோடு செய்ய வேண்டிய விவரங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

5) உங்களது விவரங்கள் ஆர்ச்சிவ் ஆகி, அவை டவுன்லோடு நிறைவுற எத்தனை நேரம் ஆகும் என்பதை லிங்க்டுஇன் கணக்கிடும். பின் மீண்டும் ஒரு முறை பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்

6) உங்களது அனைத்து விவரங்களும் டவுன்லோடு செய்ய தயாரானதும் உங்களுக்கு மின்னஞ்சல் வரும். நீங்கள் தேர்வு செய்த ஆப்ஷன்களுக்கு ஏற்ப டேட்டா டவுன்லோடு வேகம் மாறும். தேர்வு செய்யப்பட்ட டேட்டாக்களை ஆர்ச்சிவ் செய்வது மிகவும் எளிமையான விஷயம் என்பதால் டவுன்லோடு வேகமாக நடைபெறும். இந்த வழிமுறை நிறைவு பெற 24 மணி நேரம் கூட ஆகலாம்.

டவுன்லோடு துவங்கியதும், இந்த பகுதி சாம்பல் நிறத்தில் மாறியிருக்கும். இவ்வாறு ஆகும் பட்சத்தில் டவுன்லோடு இன்னும் நிறைவுறவில்லை என அர்த்தம் ஆகும். மேலும் டவுன்லோடு நிறைவுறும் வரை மற்றொரு கோரிக்கையை விடுக்க முடியாது. நீங்கள் விரும்பும் விவரம் ஆர்ச்சிவ் பகுதியில் இல்லாத சமயத்தில், அந்த விவரத்தை டேட்டா அக்சஸ் ரிக்வஸ்ட் படிவம் மூலம் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
How to download all your data from LinkedIn: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X