ஜியோவிற்கு போட்டியாக ஐடியா செல்லுலார் வழங்கும் மெகா கேஷ்பேக் ஆஃபர்.!
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐடியா நிறுவனம் ரூ.2000 வரை கேஷ்பேக் வழங்குகிறது.
ஜியோ ஃபுட்பால் ஆஃபர்-க்கு போட்டியாக தற்சமயம் ஐடியா செல்லுலார் நிறுவனம் மெகா கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது, அதன்படி புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்த கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும் என ஐடியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஜியோ ஃபுட்பால் ஆஃபர் என்ற பெயரில் பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.2200-வரை கேஷ்பேக் சலுகை என்று அறிவித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக மெகா கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது ஐடியா நிறுவனம்.

ஐடியா ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மெகா கேஷ்பேக் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை முன்னிட்டு பல்வேறு மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்த வண்ணம் உள்ளனர்.

ஐடியா "மெகா கேஷ்பேக்" ஆஃபர்:
ஐடியா செல்லுலார் அறிவித்த "மெகா கேஷ்பேக்" ஆஃபர் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஏப்ரல் 30 (2018) வரை மட்டுமே இந்த அட்காசமன கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரீசார்ஜ்:
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐடியா நிறுவனம் ரூ.2000 வரை கேஷ்பேக் வழங்குகிறது. அதன்பின்பு ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.199 அல்லது ரூ.398, ரூ 449, ரூ.459 மற்றும் ரூ.509 செலுத்தி கண்டிப்பாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் முதல் 18 மாதங்களில் ரூ.750 மற்றும் அடுத்த 18 மாதங்களில் ரூ.1250 கேஷ்பேக் கிடைக்கும் என ஐடியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இப்போது ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது, ஜியோ ஃபுட்பால் ஆஃபர் என்ற பெயரில் பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.2200-வரை கேஷ்பேக் சலுகை வழங்ப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மாடல்கள்:
பானசோனிக், ஸ்வைப், கோமியோ, செல்கான், சியோக்ஸ், சாம்சங், எல்.ஜி, நோக்கியா, மோட்டோரோலா, சியோமி, பிளாக்பெரி, அசுஸ், ஹூவாய், இன்டெக்ஸ், ஆல்காடெல், மைக்ரோமேக்ஸ், 10.ஆர், லைஃப், ஜிவி, சென், மற்றும் சென்ட்ரிக் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஜியோ கேஷ்பேக் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான ரீசார்ஜ்:
இந்த சிறப்பு சலுகை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் வாங்குவதோடு ஜியோ எண்களுக்கு தொடர்ச்சியான ரீசார்ஜ் செய்வோருக்குகேஷ்பேக் வழங்ப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மார்ச் 31:
குறிப்பாக ஜியோ 4ஜி சேவையை ஸ்மார்ட்போன்களில் ஆக்டிவேட் செய்ய வேண்டும், பின்பு வாடிக்கையாளர்கள் மார்ச் 31(2018)-ம் தேதிக்குள் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்கள் வடிவில் மைஜியோ செயலியில் கிரெடிட் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications