Jio-வுக்கு ரிவிட் அடித்த Airtel: 84 நாள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. OTT.. எந்த திட்டம்?
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் ஓடிடி மற்றும் அதிக டேட்டா நன்மையைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.
அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ரூ.909 ப்ரீபெயட் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனாலும் ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட திட்டத்திற்குப் போட்டியாக அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை ஏர்டெல் வைத்துள்ளது. முதலில் ஜியோவின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 909 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது இந்த திட்டம்.
Sony Liv மற்றும் Zee5 ஆகிய ஓடிடி தளத்தின் இலவச சந்தா வழங்குகிறது ஜியோவின் ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோவின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்திற்குப் போட்டியாக இருப்பது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் விலை சற்று அதிகம் ஆனாலும் அதிக பலன்களை வழங்குகிறது. இப்போது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தன் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 999 plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் இதில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி தளங்களின் இலவச சந்தா கொடுக்கிறது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதாவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே கீழ் சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களில் இலவச சந்தா வழங்கப்படுகிறது.

இதுதவிர 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல சிறப்பான சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.
எது சிறந்தது? ஜியோவின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா சலுகை மற்றும் அதிக ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. எனவே ஜியோவின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வதை விட ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications








