லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்: இதோ வழிமுறைகள்!

|

கொரோனா பூட்டுதல் அறிவிக்கப்பட்ட காலம் முதல் பலரும் தங்களின் பணிகளை அலுவலகம் செல்லாமலயே வீட்டில் இருந்தபடியே செய்து வருகின்றனர். அதேபோல் பள்ளி கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்தது.

லேப்டாப்பில் வாட்ஸ்அப் ஓபன் செய்வது எப்படி

அலுவலகம் ஊழியர்களையும் ஆசிரியர்களுடன் மாணவர்களையும் இணைத்து தொடர்பில் வைத்திருந்ததில் வாட்ஸ்அப் செயலிக்கு முக்கிய பங்கு உண்டு. அலுவலக மீட்டிங், ஆன்லைன் வகுப்புகளுக்கான லிங்க் வாட்ஸ் அப் குரூப்பில் வந்தால் அதை எப்படி லேப்டாப்பில் ஓபன் செய்வது என்ற கேள்வி பலரிடம் இருந்தது.

வாட்ஸ்அப்பை லேப்டாப் உடன் இணைப்பது எப்படி

அதேபோல் லேப்டாப்பில் தொடர்ச்சியாக பணி செய்துக் கொண்டிருக்கும் போது ஸ்மார்ட்போனை எடுத்து மெசேஜ் செக் செய்வதற்கு நேரம் இருக்காது. அதேசமயத்தில் பெரிதாக டைப் செய்தோ, ஆன்லைன் தேர்வு எழுதியோ அனுப்ப வேண்டும் அது லேப்டாப் மூலமாகவே மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப்பை லேப்டாப் உடன் இணைப்பது எப்படி என பார்க்கலாம்.

அரசு லேப்டாப்பிற்கும் இந்த வழிமுறைகள் பொருந்தும்a

அரசு லேப்டாப்பிற்கும் இந்த வழிமுறைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. கூகுள் க்ரோம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் சென்று வாட்ஸ்அப் வெப் என்ற தேர்வை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும். அதில் க்யூ ஆர் கோட் காண்பிக்கப்படும்.

மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் வெப்

ஸ்மார்ட்போன் வாட்ஸ்அப் பயன்பாட்டை ஓபன் செய்து அதில் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் வெப் என காண்பிக்கப்படும் அதை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள். அதை கிளிக் செய்ததும் ஸ்மார்ட்போனில் கேமரா ஓபன் ஆகும். ஸ்மார்ட்போனில் கேமரா பயன்பாட்டை லேப்டாப்பில் இருக்கும் க்யூஆர் கோட் முன்பு காட்ட வேண்டும். அவ்வளவுதான் அப்படியே ஸ்மார்ட்போன் வாட்ஸ்அப் பயன்பாடு லேப்டாப்பில் ஓபன் ஆகும்.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாடு

அதேபோல் ஸ்மார்ட்போனில் ப்ளே ஸ்டோர் போல் லேப்டாப்பில் இருக்கும் மைக்ரோசாஃப் ஸ்டோர் பயன்பாட்டை ஓபன் செய்து அதில் வாட்ஸ்அப் என டைப் செய்தால், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் என்ற பயன்பாடு இருக்கும் அதை கிளிக் செய்து ஓபன் செய்துகொள்ளுங்கள். டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும் முன்பாக மைக்ரோசாஃப்ட் லாக்இன் என கேட்கும் அதை க்ளோஸ் செய்து மீண்டும் டவுன்லோட் கொடுத்தால் டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும்.

க்யூஆர் கோட் ஸ்கேன் செய்ய வேண்டும்

டவுன்லோட் ஆகி முடிந்ததும் ஓபன் செய்தால் அதேபோல் க்யூஆர் கோட் காண்பிக்கப்படும். ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்அப் வெப் தேர்வை கிளிக் செய்து ஸ்கேன் செய்தால் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் சேட் ஸ்க்ரீன் லேப்டாப்பில் காண்பிக்கப்படும். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வாட்ஸ்அப் பயன்பாட்டை லேப்டாப்பில் உபயோகிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How do download and Use WhatsApp on my laptop?- Here the tips!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X