நீங்க வீரர்னா., அப்ப நாங்க யாரு- முடிவுக்கு வந்த விவாதம்: பெசோஸ், பிரான்சனை இனி அப்படி கூப்பிட கூடாது!

|

ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளி பயணம் மேற்கொண்ட அடுத்த சில நாட்களில் ஜெப் பெசோஸ் விண்வெளி விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார். தொடர்ந்து ப்ளூ ஆர்ஜின், விர்ஜின் கேலக்டிக் போன்ற நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவுக்கான நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறது.

விர்ஜின் கேலக்டிக் நிறுவனம்

விர்ஜின் கேலக்டிக் நிறுவனம்

அதன்படி விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் குழுவினர், ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் மற்றும் குழுவினர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர். விண்வெளிக்கு சுற்றுலாவாக செல்லும் கோடீஸ்வரர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கப்படுவது குறுத்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது

விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது

அப்படி சுற்றுலாவுக்கு செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைத்தால் அது விண்வெளி வீரர்கள் குறித்த அருமையை எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் போகிவிடும். எனவே பெசோஸ், பிரான்சன் போன்றவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது என அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ப்ளூ ஆர்ஜின், ஸ்பேஸ் எக்ஸ்,விர்ஜின் கேலக்டிக்

ப்ளூ ஆர்ஜின், ஸ்பேஸ் எக்ஸ்,விர்ஜின் கேலக்டிக்

ஜெஃப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் ஆகிய நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா பயணத்தில் முணைப்புகள் காட்டி வருகின்றனர். தொழிலதிபரான பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் மூலம் உருவாக்கப்பட்ட ஷிப்-ல் விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதேபோல் ப்ளூ ஆர்ஜினின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் பெசோஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

விண்வெளி சுற்றுலா செல்ல ஆர்வம்

விண்வெளி சுற்றுலா செல்ல ஆர்வம்

விண்வெளிக்கு சுற்றுலா செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என குறிப்பிட்டால் வரும் காலங்களில் ஏணையோர் விண்வெளி சுற்றுலா மேற்கொள்ள இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் விண்வெளி வீரர்கள் என குறிப்பிடும்பட்சத்தில் எதிர்காலங்களில் யார் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், யார் விண்வெளி சுற்றுலா பயணிகள் என்றே தெரியாத நிலை ஏற்படும். இது விண்வெளி வீரர்கள் குறித்த அருமையை குறைத்துவிடும் என கூறப்படுகிறது.

கர்மன் கோட்டுக்கு மேலே பயணம்

கர்மன் கோட்டுக்கு மேலே பயணம்

இதில் பெசோஸ் பயணித்த விண்கலன் பூமியில் இருந்து சுமார் 62 மைல் (100 கிலோமீட்டர்) உயரத்தில் கர்மன் கோட்டை கடந்து சென்றது. இதனால் குழுவினர் எடை குறையும் உணர்வை அனுபவித்தனர். கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவிட்டனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. ரிச்சர்ட் பிரான்சன் பறந்த விர்ஜின் கேலக்டிக் விமானம் பூமியில் இருந்து 53 கிமீ தூரத்தையே எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி

ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி

நிறுவனத்தின் அடுத்த விமானம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் பயணிக்கும் என ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஸ்மித் கூறினார். அதேபோல் எதிர்காலத்தில் பறக்கும் விமானத்தில் பறக்க ஏணையோர் ஆர்வத்துடன் பணம் செலுத்த தயாராக இருப்பதாக ஸ்மித் கூறினார்.

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How do call Jeff Bezos and Richard Branson an astronaut?- FAA Order

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X