ஒரே சமயத்தில் அனைத்து ட்வீட்களையும் அழிப்பது எப்படி?

நீங்கள் பதிவிட்ட ட்விட்களை அழிப்பது சிரமமான காரியமாக உள்ளதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என நினைக்கிறீர்களா?

|

ட்விட்டர் பயன்படுத்த துவங்கிய காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் தொடர்ந்து அதிகப்படியான ட்விட்களை பதிவிட்டு, தற்சமயம் அவை அர்த்தமற்றதாக உணர்கிறீர்களா?

நீங்கள் பதிவிட்ட ட்விட்களை அழிப்பது சிரமமான காரியமாக உள்ளதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என நினைக்கிறீர்களா?

ஒரே சமயத்தில் அனைத்து ட்வீட்களையும் அழிப்பது எப்படி?

அப்படியெனில் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். சமூக வலைதளங்களில் இருந்து சற்று தள்ளியிருக்கவோ அல்லது சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா. அப்படியெனில் உங்களது ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க பல்வேறு சேவைகள் இருக்கின்றன.

ட்விட்களின் எண்ணிக்கை
ட்விட்டர் டைம்லைனில் 3200 ட்விட்கள் மட்டுமே தெரியும், என்றாலும், உங்களது பழைய ட்விட்களை சர்ச் கன்சோலில் இருந்து தேடினாலே கிடைத்து விடும்.

பழைய ட்விட்களை பேக்கப் செய்வது
உங்களது அனைத்து ட்விட்களையும் அழிக்க நினைக்கும் பட்சத்தில், அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த சிப் ஃபைல் அனைத்து ட்விட்கள் மற்றும் ரீட்விட்களையும் கொண்டுள்ளது.

உங்களின் ட்விட்டர் ஆர்ச்சிவை டவுன்லோடு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

1) ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்


2) கீழ் புறம் ஸ்கிரால் செய்து பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் Request your archive ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

3) இனி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதில் இருக்கும் டவுன்லோடு செய்யக்கூடிய ஃபைலில் உங்களது விவரம் இடம்பெற்றிருக்கும்

3200 ட்விட்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தால்

ட்விட்டெலீட் (TweetDelete) கொண்டு உங்களின் அனைத்து ட்விட்களையும் அழிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பதிவிடும் ட்விட்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து போக செய்ய முடியும். எனினும் மூன்றாம் தரப்பு சேவை என்பதால் சமீபத்திய 3200 ட்விட்களை மட்டுமே அழிக்க முடியும்.

உங்களது எதிர்கால ட்விட்களை அழிக்க:

1) ஒரு வாரம்

2) இரண்டு வாரங்கள்

3) ஒரு மாதம்

4) இரண்டு மாதங்கள்

5) மூன்று மாதங்கள்

6) ஆறு மாதங்கள்

7) ஒரு வருடம்


ட்விட்டெலீட் உங்களின் அக்கவுன்ட்டை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை சரிபார்க்கும். ட்விட்டர் செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்கள் சென்று அனுமதியை மாற்றியமைக்கலாம்.


3200-க்கும் குறைவான ட்விட்கள் இருந்தால்

ட்விட்டர்இரேசர் (TwitterEraser) கொண்டு உங்களது 3200 ட்விட்களையும் அழிக்க முடியும். எனினும் 6.99 டாலர்கள் செலுத்தி அப்கிரேடு செய்யும் போது அதிகப்படியான ட்விட்களை அழிக்கலாம்.

உங்களது அனைத்து ட்விட்டர் ஆர்ச்சிவ்களையும் ட்விட்டெலீட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பின் சர்ச் ஃபில்ட்டர் மூலம் ட்விட்களை தேதி, ஹேஷ்டேக் மற்றும் குறியீட்டு சொல் கொண்டு தேடலாம்.

ஒரே சமயத்தில் அனைத்து ட்வீட்களையும் அழிப்பது எப்படி?

பல்வேறு ட்விட்களை அழிக்கும் போது, அந்த மாற்றங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட மாட்டாது. ட்விட்டரில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்விட்களை மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும், இந்த எண்ணி்க்கை ஆயிரங்களை கடக்கும் பட்சத்தில் அதற்கான நேரம் அதிகமாகும்.

ட்விட்களை அழிக்கும் போது அவற்றை பொது மக்கள் தேடும் போது கிடைக்காமல் போகும். எனினும் நீங்கள் அழிக்கும் ட்விட்களை ட்விட்டர் சர்வெர்களில் இருக்கும். சட்ட ரீதியிலான தேவைகளுக்காக அவை தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக ட்விட்டர் உங்களது ட்விட்களை பேக்கப் வைத்திருக்கும்.

Best Mobiles in India

English summary
How to delete all tweets instantly: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X