உங்க வைபையை திருட்டுத்தனமாக பயன்படுத்துபவர்களை கண்டறிய இதை ட்ரை பன்னுங்க

Written By:

வைபை நெட்வர்க்கில் இணையதளம் மெதுவாக இயங்குகிறதா, உங்க வைபை நெட்வர்க்கை வேறு யாரும் திருட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனரா.அவர்கள் தீய செயல்களுக்காக பயன்படுத்தினாலும் உங்களுக்கு தான் பிரச்சனை. யாரோ செய்யும் வேலைகளுக்கு நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்.

உங்க வைபையை திருட்டுத்தனமாக பயன்படுத்துபவர்களை கண்டறிய இதை ட்ரை பன்னுங

இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வயர்லெஸ் நெட்வர்க் பொருத்தும் போதே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பீர்கள்.இருந்தாலும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் யோசனைகள் நிச்சயம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

உங்க வைபையை திருட்டுத்தனமாக பயன்படுத்துபவர்களை கண்டறிய இதை ட்ரை பன்னுங

ரௌட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் டிவைஸ்களை சரி பாருங்கள்

இதற்கு முதலில் ரௌட்டர் கன்சோலுக்கு சென்று ஐபி முகவரியை டைப் செய்யுங்கள். ரௌட்டரின் முகவரி தெரியாத பட்சத்தில் ஸ்டார்ட்- ரன் / ஸர்ச் ஃபார் சிஎம்டி கொடுத்து ஐபி கான்பிகரேஷனை என்டர் செய்யுங்கள்.

நீங்கள் மேக் பயன்படுத்தினால் முகவரியை நெட்வர்க் - சிஸ்டம் பிரபரென்சஸில் அறிந்து கொள்ளலாம். ஈத்தர்நெட் பயன்படுத்துபவர்கள் அட்வான்ஸ்டு ஆப்ஷன் சென்று TCP/IP க்ளிக் செய்து உங்களின் லாக் இன் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். ரௌட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கன்சோல் சென்றால் உங்கள் ரௌட்டரில் இணைந்திருக்கும் டிவைஸ்களை அறிந்து கொள்ளலாம்.

இதற்கான தீர்வு
இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு யாராலும் கண்டறியமுடியாத பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் எஸ்எஸ்ஐடி ப்ராட்காஸ்டை அனைத்து வைக்க வேண்டும். இதை தவிற உங்க நெட்வர்க களவானியை கண்டறிய நேரில் செல்ல மூக்கர்ஹன்டர் மென்பொருளை பயன்படுத்தலாம்.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot