லினக்ஸில் செயலி விவரங்களை எவ்வாறு சரிபார்ப்பது?

By Lekhaka

  இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினிகளில் 1.84 சதவீதம் லினக்ஸிலும் 0.29 சதவீதம் லினிக்ஸின் மாறுபாடான குரோமிலும் ஓடுகிறது என்று நெட்மார்க்கெட்ஷேர் தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. இது பார்ப்பதற்கு சிறிய எண்ணாக தெரியலாம், ஆனால் வருடத்திற்கு 250 மில்லியன் கணினிகள் விற்கப்படுகின்றன. அதை கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணினிகள் லினக்ஸில் இயக்கப்படுகின்றன. நீங்களோ உங்கள் நண்பர்களோ லினக்ஸில் இயங்கும் கணினி உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு தான். வாருங்கள் செயலி விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

  லினக்ஸில் செயலி விவரங்களை எவ்வாறு சரிபார்ப்பது?


  செயலியின் செயல்பாடு, கட்டமைப்பு, தற்காலிக சேமிப்பின் அளவு, கோர்களின் எண்ணிக்கை, ஹைப்பர் த்ரெட்டிங் போன்ற விவரங்களை அறிய நீங்கள் பல்வேறு கட்டளைகளை பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில - lscpu, /proc/cpuinfo மற்றும் lstopo (hwloc) போன்றவை. இந்த கட்டளைகள் செயலாக்க அலகுகளையும் கோர்களையும் பற்றிய விரிவான தகவல்களை அளிக்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், பெறப்பட்ட தரவை எவ்வாறு புரிந்துகொள்வது என்று விளக்குகின்றன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  விற்பனையாளர் மற்றும் செயலி மாடல்

  /proc /cpuinfo | grep vendor | uniq என்ற கட்டளையை உபயோகித்து தேடவும்

  $ cat /proc/cpuinfo | grep vendor | uniq

  vendor_id : GenuineIntel

  ஒரு முறை நீங்கள் செயலியின் பேரை தெரிந்துகொண்டால், அந்த மாடல் பேரை பயன்படுத்தி, இன்டெல் இன் இணையத்தளத்தில் அதைப்பற்றிய சரியான விவரக்குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.

  $ cat /proc/cpuinfo | grep 'model name' | uniq

  model name : Intel(R) Core(TM)2 Quad CPU Q8400 @ 2.66GHz

  கட்டமைப்பு

  lscpu என்ற கட்டளையை கொண்டு கட்டமைப்பை பற்றி அறிந்து கொள்ளலாம்

  $ lscpu

  Architecture: x86_64

  CPU op-mode(s): 32-bit, 64-bit

  Byte Order: Little Endian

  ....

  இது கட்டமைப்பு 64 பிட் கொண்ட x 86_ 64 என்று நிரூபிக்கிறது.

  அதிர்வெண்

  செயலியின் வேகம்/அதிர்வெண் பற்றி அறிய lscpu மற்றும் /proc/cpuinfo ஆகிய இரண்டு கட்டளைகளையும் பயன்படுத்தலாம்.

  $ lscpu | grep -i mhz

  CPU MHz: 1998.000

  $ cat /proc/cpuinfo | grep -i mhz | uniq

  cpu MHz : 1998.000

  கோர்களின் எண்ணிக்கை

  உங்கள் செயலியில் பல கோர்கள் இருந்தால், உங்கள் செயலியின் வேகமும் அதிகமாக இருக்கும்

  lscpu கட்டளை ஒவ்வொரு சாக்கெட்டிலும் உள்ள கோர்களை குறிக்கும்.


  $ lscpu

  Architecture: x86_64

  CPU op-mode(s): 32-bit, 64-bit

  Byte Order: Little Endian

  CPU(s): 4

  On-line CPU(s) list: 0-3

  Thread(s) per core: 1

  Core(s) per socket: 4

  Socket(s): 1

  செயலி

  செயலிகளை மட்டும் எண்ணுவது உங்களுக்கு தவறான எண்ணிக்கையை கொடுத்துவிடும், ஏனென்றால், ஹைப்பர் த்ரெட்டிங் செய்யப்பட்ட செயலிகளில், இயக்க முறைமை (ஆப்பெரடிங் சிஸ்டம்) இரு மடங்கு எண்ணிக்கையில் கோர்களை காண்கிறது. எனினும், /proc/cpuinfo கட்டளையில் 'core id' என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட புலம், ஒவ்வொரு தனி செயலிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கோர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய, கோர் ஐடிகளை எண்ணி தெரிந்து கொள்ளலாம்.

  $ cat /proc/cpuinfo | grep -i 'core id'

  core id : 0

  core id : 2

  core id : 1

  core id : 3

  ஹைப்பர் த்ரெட்டிங்

  தனிப்பட்ட கோர்களை இரு வருமுறையான செயலி அலகுகளாக வேலை செய்ய வைக்க ஹைப்பர் த்ரெட்டிங் உதவுகிறது. ஒவ்வொரு கோரின் செயலாக்கத் திறனையும் இது அதிகரிக்கிறது. ஒரு செயலி த்ரெட்டிங் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய நீங்கள் இரண்டு வேறுபட்ட மதிப்புகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

  கோர்களின் எண்ணிக்கையும் செயலி அலகுகளின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால் ஹைப்பர் த்ரெட்டிங் செய்யப்படவில்லை என்று அர்த்தம். செயலிகளின் எண்ணிக்கை கோர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், ஹைப்பர் த்ரெட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  How to check processor details in linux: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more