நிவர் புயல் இப்போ எங்க இருக்கு?- துல்லியமாக எப்படி அறிந்துக் கொள்ளலாம் தெரியுமா?

|

நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ளது. இந்த புயலின் தற்போதைய நிலவரத்தை எப்படி அறிந்துக் கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

நிவர் புயல்

நிவர் புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மிக தீவிரமாக உருவெடுத்துள்ளது. இன்று காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கும் மழை

நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

புயல் முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வர இருந்து 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐஎம்டி(IMD) இணையதளம்

புயல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாக ஐஎம்டி(IMD) இணையதளத்தில் உள்நுழைந்து அறிந்து கொள்ளலாம். ஐஎம்டி இணையதளத்தில் இடது மூலையில் இருக்கும் "எங்கள் சேவைகள்" என்ற மெனுவை கிளிக் செய்து காற்று எச்சரிக்கை, ஒருமணிநேர அப்டேட், புயல் எச்சரிக்கை போன்ற விவரங்களை கண்டறியலாம்.

சாட்டிலைட் புகைப்படத்தோடு அப்டேட்

அதேபோல் ஐஎம்டி(IMD) டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் காணலாம். இதில் அவ்வப்போது சாட்டிலைட் புகைப்படத்தோடு அப்டேட் செய்யப்படும். புயல் தற்போதைய நிலை என்ன, எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது போன்ற அப்டேட் இதில் பதிவேற்றப்பட்டு வருகிறது.

விண்டி.காம்

விண்டி.காம்

மேலும் விண்டி.காம் (Windy.com) என கூகுளில் டைப் செய்தவுடன் அதன் பக்கம் ஓபன் ஆகும். இதில் தெளிவாக புயல் வரும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புயல் எவ்வளவு வேகத்தில் நகர்கிறது. எந்த இடத்தில் அதிகமாக காற்று வீசுகிறது போன்று தெளிவாக காண்பிக்கப்படுகிறது. இந்த தளத்தின் தன்மை முழுவதுமாக தெரியவில்லை இருப்பினும் இதில் தற்போதைய நிலவரத்தை வீடியோ போன்று காட்டுகிறது.

2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்

ஜூம் இன் ஜூம் அவுட் வசதி

ஜூம் இன் ஜூம் அவுட் வசதி

விண்டி.காம் இணையதளத்தில் ஜூம் இன் ஜூம் அவுட் வசதி இருக்கிறது. இந்த இணைய பக்கத்தை ஓபன் செய்தவுடன் டிஸ்ப்ளே முழுவதுமாக வானிலை நிலவர மேப் இருக்கும். இதை ஸ்கரால் செய்து ஜூம் செய்தால் துல்லியமாக காட்டுகிறது. இதில் கீழே உள்ள தேர்வில் நேரத்தை நகர்த்தி அடுத்த தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How Can Watch Live Nivar Storm Updates?- IMD and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X