இந்தியாவில் ப்ராட்பேன்ட் பயன்பாடு, ஓர் பார்வை..!!

Written By:

விலை குறைப்பு, ஆற்டிக் கேப்ளிங் மற்றும் பல புதிய தொழில்நுட்பங்களை விட இந்திய ப்ராட்பேன்ட் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்திய நுகர்வோர் தான்.

இந்தியாவில் ப்ராட்பேன்ட் வரலாற்றை உற்று நோக்கினால் இண்டர்நெட் பயனாளிகள் அன்று அதிகபட்சம் 2 முதல் 4 எம்பிபிஎஸ் வேகம் வரை இருந்தது, ஆனால் இன்று குறைந்தபட்சம் 16 எம்பிபிஎஸ் முதல் 24 எம்பிபிஎஸ் வரை சகஜமாக கிடைக்கின்றது.

 இந்தியாவில் ப்ராட்பேன்ட் பயன்பாடு, ஓர் பார்வை..!!

அதிவேக இண்டர்நெட் தேவை அதிகரித்திருக்கும் காரணத்தினால் ப்ராட்பேன்ட் சேவை வழங்கும் நிறுவனங்களும் அதிவேக இண்டர்நெட் சேவை மற்றும் அதிக டேட்டாக்களை வழங்க ஆரம்பித்துள்ளனர். மேலும் இன்று வெளியாகும் ஸ்மார்ட் கருவிகளின் தரம் அதிகரித்து வருவது இண்டர்நெட் பயன்பாட்டை வெகுவாக அதிகரித்திருக்கின்றது எனலாம்.

இந்தியாவில் இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் டேட்டா பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. இதனால் அடுத்த தலைமுறை இண்டர்நெட் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

 

English summary
How broadband has come a long way in India. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot