தமிழகத்தில் இன்று 14 சுங்க சாவடி கட்டணம் உயர்வு: கூகுள் மேப் உதவியோடு தப்பிக்கும் வழிமுறை.!

இந்தியாவை பொறுத்த மட்டும் நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மாவட்ட சாலைகள், ஊரக சாலைகள் என 33 லட்சம் கிமீ தூரம் சாலைகள் உள்ளது.

|

இந்தியாவை பொறுத்த மட்டும் நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மாவட்ட சாலைகள், ஊரக சாலைகள் என 33 லட்சம் கிமீ தூரம் சாலைகள் உள்ளது. நம் நாட்டில் 200க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது. இதன் ஓட்டு மொத்த நீளம் 92 ஆயிரத்து 851 ஆகும். இதேபோல் மாநில நெடுஞ்சாலைகள் 1 லட்சத்த 31 ஆயிரத்து 899 கிமீ தூரம் உள்ளது.

கூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.!

சாலைகளை சீரமைக்க சுங்க சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் 43 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கசாவடிகளில் தனியாரும், 14 சுங்க சாவடிகளில் (டோல் கேட்) தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

14 சுங்க சாவடி கட்டணம் உயர்வு:
இந்நிலையில், சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையிலுள்ள நாத்தக்கரை, வீரசோழபுரம் சுங்கச்சாவடிகள் மற்றும் திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது. இதேபோல், நல்லூர் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தடா சங்கச்சாவடி, திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியிலும் 10 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் (2018) 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 14 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

டோல் கேட்களுக்கு பாய்:

டோல் கேட்களுக்கு பாய்:

ஜிஎஸ்டி வரி விதிப்பு ஒரு புறமும், நெடுந்தூரம் வாகனங்களில் பயணம் செல்லும் போது வசூலிக்கப்படும் சுங்க கட்டணமும் பொது மக்களை கலக்கமடைய செய்துள்ளது. நெடுஞ்சாலைகளில் நாம் பயணம் செய்தாலும் சுங்க சாவடி வரும் போது, குறிப்பிட்ட தூரத்திற்கு முன் வாகனங்களை கூகுள் மேப் உதவியோடு மாற்று சாலையில் திருப்பி சுங்க கட்டண செலவை எளிதில் மிச்சப்படுத்தலாம்.

கூகுள் மேப் உதவி:

கூகுள் மேப் உதவி:

உதாரணமாக நீங்கள் பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் பயணம் செய்வதாக வைத்து கொள்வோம் வழியில் ஏகப்பட்ட சுங்கசாவடிகள் இருக்கின்றன. அனைவரிடமும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்டு போன் இருப்பதால், கூகுள் மேப் உதவியோடு தேர்வு செய்து தப்பிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

புறப்படும், சேருமிடம் தேர்வு:

புறப்படும், சேருமிடம் தேர்வு:

உதரணமாக நீங்கள் கூகுள் மேப்பில் புறப்படும் இடத்தில் பெங்களூரை தேர்வு செய்து சேருமிடத்தில் ராமேஸ்வரம் என்று தேர்வு செய்து கொள்ளுங்கள். அப்போது பயணம் 10 மணி நேரம் 46 நிமிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கும். மேலும் கூகுள் மேப் 580 கிமி தூரம் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கும்.

மேப் டிப்ஸ்:

மேப் டிப்ஸ்:

புறப்படும் சேருமிடம் தேர்வு செய்தவுடன் புறப்படும் இடத்திற்கு (யுவர் லோக்கேசன்) அருகே வலது புறம் மூன்று புள்ளிகள் வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் அதை தேர்வு செய்துள்ள வேண்டும்.

 ரூட் ஆப்சன்:

ரூட் ஆப்சன்:

பிறகு திரையில் தோன்றும் ரூட் ஆப்சனையும் தேர்வு செய்து கொள்ளுங்கள் உடனே திரையில் மீண்டும் ஒரு ஆப்சன் என தோன்றி மூன்று வழிமுறைகள் இருப்பதை காட்டும்.

அவாய்டு டோல் ரோட்ஸ்:

அவாய்டு டோல் ரோட்ஸ்:

இதில், நீங்கள் இரண்டாதாக இருக்கும் அவாய்டு டோல் ரோட்ஸ் என்று இருப்பதை தேர்வு செய்த உடனே திரையில் அதன் பாதைகளில் சிறிது மாற்றம் ஏற்படுத்திய தரும். இதனால் அனைத்து சுங்க சாவடிகளில் இருந்து தப்பிக்க முடியும். பெங்களூர்-ராமேஸ்வரம் பயண தூரம் 597, பயண நேரம் 11 மணி 36 நிமிடம் தான் பிடிக்கும். டோல்களுக்கு செலுத்தும் கட்டணத்தை காட்டிலும் பெட்ரோலே இல்லை டீசலே குறைந்த கட்டணம் தான் பிடிக்கும். மேலும் நாம் ஜாலியாக ஊரையும் சுற்றி வரலாம்.

Best Mobiles in India

English summary
How to Avoid Tolls and Highways on Google Maps : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X