ஏர்டெல் வழங்கும் 350ஜிபி + வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை பெறுவது எப்படி.?

|

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான பார்தி ஏர்டெல், 100 ஜிபிபிஎஸ் வேகத்திலான 350ஜிபி டேட்டாவை அதன் வைஃபை திட்டங்களின் கீழ் வழங்குகிறது.

ஏர்டெல் வழங்கும் 350ஜிபி + வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை பெறுவது எப்படி.?

முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் சீர்குலைக்கும் தரவுத் திட்டங்களை சமாளிக்கும் வண்ணம் சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ஏர்டெல் வி-பைபர் வைஃபை சேவையின் கீழ் கிடைக்கும் மூன்று சிறப்பான திட்டங்களை தொகுத்துள்ளது.

ஏர்டெல் வி-பைபர் வைஃபை திட்டங்கள்.!

ஏர்டெல் வி-பைபர் வைஃபை திட்டங்கள்.!

ரூ.899, ரூ.1,099 மற்றும் ரூ.1,299/-க்கு தொகுத்து வழங்கப்படும் ஏர்டெல் வி-பைபர் வைஃபை திட்டங்களானது, ஜியோவின் வைஃபை ரவுட்டர் (ஜியோஃபை) மூலம் வழங்கப்படும் ரூ.999 மற்றும் ரூ.1,999/- திட்டங்களை மனதிற்கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளதென்பதில் சந்தேகமில்லை.

மூன்று திட்டங்களின் நன்மைகள்.!

மூன்று திட்டங்களின் நன்மைகள்.!

ஏற்கனவே ஜியோ அதன் வைஃபை திட்டங்களின் வழியாக, அதன் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இலவச குரல் அழைப்பு நன்மைகள் உட்பட 4ஜி தரவை வழங்கி வருகிற நிலைப்பாட்டில் வெறும் குறைவான விலை நிர்ணயம் மட்டுமே ஏர்டெல் மீதான கவனத்தை ஈர்க்கச்செய்யாது. சரிக்கு சமமான நன்மைகளே யார் வெற்றியாளர் என்பதை நிர்ணயம் செய்யும். அதன்படி இந்த மூன்று திட்டங்களின் நன்மைகளை பொறுத்தமட்டில்..

ஏர்டெல் ரூ.899/- வைஃபை திட்டம்.!

ஏர்டெல் ரூ.899/- வைஃபை திட்டம்.!

இந்த ஏர்டெல் திட்டமானது, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் 40எம்பிபிஎஸ் என்கிற இணைய வேகத்திலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் டேட்டாவின் அளவு - 150 ஜிபி ஆகும். மலிவான திட்டமாக இருப்பதால், இது ஏர்டெல் வழங்கும் இதர போனஸ் டேட்டா மட்டும் டேட்டா ரோல் ஓவர் வசதிகளை வழங்காது.

ஏர்டெல் ரூ. 1,099 திட்டம்

ஏர்டெல் ரூ. 1,099 திட்டம்

இந்த வைஃபை திட்டமானது, ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி 100 எம்பிபிஎஸ் என்கிற இணைய வேகத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் டேட்டாவின் அளவு - 250 ஜிபி ஆகும்.

அழைப்பு நன்மைகள் மற்றும் பல

அழைப்பு நன்மைகள் மற்றும் பல

மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளும் உள்ளன. மேலும் இந்த ரூ.1,099/- திட்டமானது தரவு பரிமாற்ற வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கும். அவ்வழியாக ஒருவர் 1000 ஜிபி அளவிலான பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு எடுத்து செல்ல முடியும் மற்றும் அந்த டேட்டா அடுத்த மார்ச் 31, 2018 வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ. 1,299 திட்டம்

ஏர்டெல் ரூ. 1,299 திட்டம்

இந்த வைஃபை திட்டமானதும் 100 எம்பிபிஎஸ் என்கிற இணைய வேகத்தை வழங்குகிறது என்று , ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் டேட்டாவின் அளவு - 350 ஜிபி ஆகும்.

அழைப்பு நன்மைகள் மற்றும் பல

அழைப்பு நன்மைகள் மற்றும் பல

மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளும் உள்ளன. மேலும் இந்த ரூ.1,299/- திட்டமானதும் தரவு பரிமாற்ற வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கும். அவ்வழியாக ஒருவர் 1000 ஜிபி அளவிலான பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு எடுத்து செல்ல முடியும் மற்றும் அந்த டேட்டா அடுத்த மார்ச் 31, 2018 வரை செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
How To Avail Up To 350 GB Data, Unlimited Calls In Airtel V-Fiber Wi-Fi Plans. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X