முகேஷ் அம்பானியின் வீட்டில் வேலைக்காரர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
உலகளவில் மிகவும் விலையுயர்ந்த தனியார் இல்லம் என்றால் அது அண்டிலியா (Antilia) தான். இந்த மாளிகையானது முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமானது. குறிப்பாக முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் ரூ.15000 கோடி மதிப்புள்ள இந்த அண்டிலியாவில் வசிக்கிறார். அதுவும் அண்டிலியா இல்லம் ஆனது தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் 4,532 சதுர மீட்டர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.
அதேபோல் முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டில் பணிபுரியும் சமையல்காரர், டிரைவர், போன்ற பணியாட்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதுதவிர இவர்கள் கார்ப்பரேட் ஊழியர்களைப் போன்ற சலுகைகளையும் பெறுகிறார்கள். அண்டிலியா வீட்டில் சுமார் 600 முதல் 700 ஊழியர்கள் தற்போது பணிபுரிகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட டிரைவர் சம்பளம் மாதத்திற்கு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தனியார் நிறுவனங்களில் தலைமை நிர்வாக அலுவலர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் ஆகும். பின்பு முகேஷ் அம்பானியின் பாதுகாவலர் மாத சம்பளம் ரூ.14,536 முதல் ரூ.55,896 வரை தொடங்குகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அம்பானியின் வீட்டில் ஊழியர்கள் எவ்வாறு பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
அதாவது அம்பானியின் இல்லத்தில் வேலை பெறுவதற்கு ஒரு தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு அந்த வேலைக்கு பொருத்தமான சான்றிதழ் அல்லது பட்டம் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். உதாரணமாக அங்கு சமையல்காரர் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், சமையல் கலைகளில் சான்றளிக்கப்பட்ட தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். பின்பு பாத்திரம் கழுவும் பணியில் ஈடுபடுபவர்கள் கூட கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுகிறார்கள் மற்றும் அவர்களின் பின்புலமும் சோதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அம்பானியின் இல்லத்தில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிக சம்பளத்துடன் கூடுதலாக மருத்துவ காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகள் உட்பட நிறுவன ஊழியர்களைப் போன்ற சலுகைகளையும் அவர்கள் பெறுகிறார்கள்.
அதேபோல் இந்த அண்டிலியா மாளிகையில் மின்சார கட்டணமும் சற்று அதிகமாக தான் வருகிறது. அதாவது மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அண்டிலியா ஒவ்வொரு மாதமும் சுமார் 6,37,240 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் அண்டிலியா ஒரு மாத மின்சாரக் கட்டணம் சராசரியாக ரூ. 70 லட்சம் ஆகும், மேலும் பண்டிகைக் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாக செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்டிலியா மாளிகையின் கூறையில் 3 ஹெலிபேட்கள் உள்ளன. பின்பு ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக சொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது. அதேபோல் முகேஷ் அம்பானி ஒரு டீடோட்டலர் ஆவார். அம்பானி அவரின் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவைத்தது இல்லையாம். மேலும் அவர் ஒரு சுத்தமான சைவம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








